Blog

அடக்கமுடைமை

Old Syllabus

அடக்கமுடைமை

1.அடக்கம்‌ அமரருள்‌ உய்க்கும்‌ அடங்காமை

ஆரிருள்‌ உய்ந்து விடும்‌.

விளக்கம்‌: அடக்கம்‌ ஒருவனை உயர்ந்த இடத்தில்‌ வைக்கும்‌.அடக்கம் இல்லாதவனை இருள்‌ கொண்ட வாழ்க்கை சூழ்ந்து விடும்‌.

 

2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்‌

அதனினூஉங்‌ கில்லை உயிர்க்கு.

விளக்கம்‌: அடக்கத்தை ஒரு செல்வமாக மதித்துக்‌ காக்க வேண்டும்‌. அடக்கத்தை உயிரினும்‌ மேலாக கருதுவர்‌

 

3.செறிவறிந்து சீர்மை பயக்கும்‌ அறிவறிந்‌

தாற்றி னடங்கப்‌ பெறின்‌.

விளக்கம்‌: அறிய வேண்டியவற்றை அறிந்து நடப்பதே அறிவுடைமை ஆகும்‌. அவ்வாறு நடந்தால்‌ பாராட்டும்‌, புகழும் ‌ கிடைக்கும்‌.

 

4.நிலையிற்‌ றிரியாது அடங்கியான்‌ தோற்றம்‌

மலையினும்‌ மாணப்‌ பெரிது.

விளக்கம்‌: ஐம்புலன்களை தன்‌ நிலையிலிருந்து மாறுபடாமல்‌ அடக்கி வாழ்பவனறுடைய உயர்வு மலையை விடப்‌ பெரியதாகும்‌.

 

5.எல்லார்க்கும்‌ நன்றாம்‌ பணிதல்‌ அவருள்ளும்‌

செல்வர்க்கே செல்வந்‌ தகைத்து.

விளக்கம்‌: ஒருவன்‌ எல்லாரையும்‌ பிணிந்து நடந்தால்‌ அது அவனுக்கு நன்மை பயக்கும்‌. செல்வத்தை விட மிகப்‌ பெரிய செல்வமாக கருதப்படும்‌.

 

6.ஒருமையுள்‌ ஆமைபோல்‌ ஐந்தடக்க லாற்றின்‌

எழுமையும்‌ ஏமாப்‌ புடைத்து.

விளக்கம்‌: ஒரு பிறவியில்‌ ஆமையைப்‌ ‌ போல ஐம்பொறிகளையும்‌ அடக்கி வாழ்ந்தால்‌, அது அவனுக்கு மறு பிறவியிலும்‌ நல்ல பயன்‌ தரும்‌.

 

7.யாகாவா ராயினும்‌ நாகாக்க காவாக்கால்‌

சோகாப்பர்‌ சொல்லிழுக்குப்‌ பட்டு.

விளக்கம்‌: ஒருவள்‌ தன்‌ நாவை அடக்கி காக்க வேண்டும்‌. அவ்வாறு காக்க விட்டால்‌ சொற்குற்றம்‌ ஏற்பட்டு துன்புறுவர்‌.

 

8.ஒன்றானுந்‌ தீச்சொற்‌ பொருட்பய னுண்டாயின்‌

நன்றாகா தாகி விடும்‌.

விளக்கம்‌: ஒருவன்‌ தீய சொற்களால்‌ பிறரை துன்பப்‌ படுத்தினால்‌, அது அவனுக்கு வரும்‌ நன்மையும்‌ தீமையாக முடியும்‌.

 

9.தீயினாற்‌ சுட்டபுண்‌ உள்ளாறும்‌ ஆறாதே

நாவினாற்‌ சுட்ட வடு.

விளக்கம்‌: தீயினால்‌ சுட்டபுண்‌ உடம்பில்‌ ஆறி விடும்‌. ஆனால்‌ நாவினால்‌ பேசுவது மனத்தில்‌ ஆறாத வடுவாக இருக்கும்‌.

 

10.கதங்காத்துக்‌ கற்றடங்க லாற்றுவான்‌ செவ்வி

அறம்பார்க்கும்‌ ஆற்றின்‌ நுழைந்து.

விளக்கம்‌: யாரிடமும்‌ கோபம்‌ கொள்ளாது அடக்கம்‌ உடையவனாக வாழ்ந்தால்‌, அறக்கடவுள்‌ காலம்‌ பார்த்துக்‌ காத்திருப்பார்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories