Blog

அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்த்தல்

Class 23 சொல்லகராதி

அடைப்புக்குள்‌ உள்ள சொல்லைத்‌ தகுந்த இடத்தில்‌ சேர்த்தல்

1. பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின. விடை: பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

2. கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார். விடை: கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

3. இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள். விடை: இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

4. முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான். விடை : முத்து நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான்.

5. மழை நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை. விடை : மழை நன்கு பெய்ததால் விளையாட முடியவில்லை.

6. எனக்குப் பால் வேண்டும். எனக்குப் பழம் வேண்டும். விடை : எனக்குப் பாலும் பழமும் வேண்டும்.

7. திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.

விடை : திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.

8. அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.

விடை : அறநெறிகளைக் கூறும் நூல்களைக் கற்று பின்பற்ற வேண்டும்.

9. குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக்கண்ணி நூலை இயற்றியுள்ளார்.

விடை : குணங்குடி மஸ்தான் சாகிபு எக்காளக்கண்ணி, நந்தீசுவரக்கண்ணி ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.

(அது, நீ, அவர்கள், அவைகள், அவை, நாம், என், உன்)

1. _____________ பெயர் என்ன?                                                        (உன்)

2. _____________ ஏழாம் வகுப்பு மாணவர்கள்.                        (நாம்)

3. _____________ எப்படி ஓடும்?                                                        (அவை)

4. _____________ என்ன செய்து கொண்டிருக்கிறாய்?       (நீ)

5. _____________ வந்து கொண்டு இருக்கிறார்கள்.             (அவைகள்)

(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும்)

1. காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர். __________ அவர் எளிமையை விரும்பியவர். (ஏனெனில்)

2. நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும். __________ துன்பப்பட நேரிடும். (இல்லையென்றால்)

3. குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது. __________ காக்கையின் கூட்டில் முட்டையிடும். (ஆகையால்)

4. அதிக அளவில் மரங்களை வளர்ப்போம். __________ மரங்கள்தான் மழைக்கு அடிப்படை. (ஏனெனில்)

5. பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன். __________ பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.  (எனவே)

6. தமிழகத்தில் மழை பெய்துவருகிறது. __________ இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.  (மேலும்)

( கொண்டு, இருந்து, உடைய, காட்டிலும், ஆக, நின்று, உடன், விட, பொருட்டு )

1. இடி __________ மழை வந்தது.  (உடன்)

2. மலர்விழி தேர்வின் _________ ஆயத்தமானாள். (பொருட்டு)

3. அருவி மலையில் __________ வீழ்ந்தது. (இருந்து)

4. தமிழைக் _________ சுவையான மொழியுண்டோ! (காட்டிலும்)

5. யாழ், தமிழர் __________ இசைக்கருவிகளுள் ஒன்று (உடைய)

( மேடுபள்ளம், ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட, வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )

1. சான்றோர் எனப்படுபவர் __________ சிறந்தவர் ஆவர். (கல்விகேள்வி)

2. ஆற்று வெள்ளம் __________ பாராமல் ஓடியது. (மேடுபள்ளம்)

3. இசைக்கலைஞர்கள் _________ வேண்டியவர்கள். (போற்றிப்புகழப்பட)

4. தமிழ் இலக்கியங்களின் பெருமைக்கு _________ இல்லை (ஈடுஇணை)

5. திருவிழாவில் யானை __________ வந்தது. (ஆடிஅசைந்து)

தமிழிலக்கிய நூல்களை, செவ்விலக்கியங்களை , நம்மை, வாழ்வியல் அறிவை)

அ) தமிழ் ____________ கொண்டுள்ளது. (செவ்விலக்கியங்களை)

ஆ) நாம் ____________ வாங்கவேண்டும். (தமிழிலக்கிய நூல்களை)

இ) புத்தகங்கள் ____________  கொடுக்கின்றன. (வாழ்வியல் அறிவை)

ஈ) நல்ல நூல்கள் ____________ நல்வழிப்படுத்துகின்றன. (நம்மை)

(நல்ல, பெரிய, இனிய, கொடிய)

அ) எல்லோருக்கும் ________ வணக்கம்.(இனிய)

ஆ) அவன் ________ நண்பனாக இருக்கிறான்.(நல்ல)

இ) ________ ஓவியமாக வரைந்து வா. (பெரிய)

ஈ) ________ விலங்கிடம் பழகாதே. (கொடிய)

(அழகாக, பொதுவாக, வேகமாக, மெதுவாக)

அ) ஊர்தி ________சென்றது.(மெதுவாக)

ஆ) காலம் ________ ஓடுகிறது.(வேகமாக)

இ) சங்க இலக்கியம் வாழ்க்கையை ________ காட்டுகிறது.(அழகாக)

ஈ) இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதை அனைவருக்கும் ________ காட்டு.(பொதுவாக)

I. பொருத்தமான துணைவினைகளைப் பயன்படுத்துக.
1. மனிதனையும் விலங்குகளையும் (வேறு) _____________ மொழியாகும். (வேறுபடுத்துவது)
2. திராவிட மொழிகள் சில, பொதுப் பண்புகளைப் (பெறு) _____________ (பெற்றிருக்கின்றன)
3. காலந்தோறும் தன்னைப் (புதுப்பித்து) _____________ மொழி தமிழ். (புதுபித்துக் கொள்ளும்)
4. என் ஐயத்தைக் கேட்பதற்கு எவரேனும் கிடைக்கமாட்டார்களா என்று (தேடு) _____________ (தேடிக் கொண்டிருக்கிறேன்)
II. துணைவினைகளைப் பயன்படுத்திப் புதிய தொடர்களை எழுதுக.
(வேண்டும், பார், உள், வா, விட)
1. வேண்டும் – சான்றோர் காட்டிய பாதையில் நடக்க _________(வேண்டும்)
2. பார் – படத்தை உற்றுப் _________(பார்)
3. உள் – கடல் நீரினை _________ வாங்கியது (உள்)
4. வா – நாளை என் வீட்டுக்கு _________(வா)
5. விடு – நான் நாளை பள்ளிக்கு வந்து _________ வேன் (விடு)

(வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)

1. கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது. வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது.

  • காற்றின் பாடல்

2. புவி சிலிர்த்து, மண்ணிலிருந்து சின்னஞ்சிறு மொட்டு முகிழ்த்தது; அச்செடியை வரவேற்கும் விதமாகப் பக்கத்துச் செடிகள் தலையாட்டி மகிழ்கின்றன.

  • மொட்டின் வருணனை

3. சோலைக்குள் சத்தமில்லாமல் வீசியது தென்றல்; பூக்கள் அதன் வருகையை உணர்ந்து நறுமணத்துடன் வரவேற்கின்றன. பூவாசம் கலந்த தென்றலில் வண்டுகள் மிதந்து சென்று மலர்களில் அமர்கின்றன.

  • மிதக்கும் வாசம்

4. இரவின் இருளமைதியில் இரைச்சலாய்ச் சில சுவர்க்கோழிகள். வறண்ட வானத்தின் இருண்ட புழுக்கம்; மழைக்கு ஏங்கும் புவி வெப்பப் பெருமூச்சு விடும்; கசகசத்த உயிரினங்கள்.

  • உயர்ப்பின் ஏக்கம்

5. நின்றுவிட்ட மழை தரும் குளிர்; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

  • நீரின் சிலிப்பு

6. குயில்களின் கூவலிசை. புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும். இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்.

  • வனத்தின் நடனம்

 

(சோறு, கற்றல், கரு, பூவில், எழுத்து)

அ) நூலின் பயன் படித்தல் எனில், கல்வியின் பயன் _________

விடை : கற்றல்

ஆ) விதைக்குத் தேவை எரு எனில், கதைக்குத் தேவை _________

விடை : கரு

இ) கல் சிலை ஆகுமெனில், நெல் _________ ஆகும்.

விடை : சோறு

ஈ) குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து _________

விடை : எழுத்து

உ) மீன் இருப்பது நீரில்; தேன் இருப்பது _________

விடை : பூவில்

(தங்கும், மரம் வீடு, அவிழும், தயங்கும், மரவீடு, தோற்பாவை, விருது, தோற்பவை, கவிழும், விருந்து)

1. விரட்டாதீர்கள் – பறவைக்கு மரம் வீடு

வெட்டாதீர்கள் – மனிதருக்கு அவைதரும் மரவீடு

2. காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்

சோலைப் பூவினில் வண்டினம் தங்கும்

3. மலை முகட்டில் மேகம் கவிழும் – அதைப்

பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்

4. வாழ்க்கையில் தோற்பாவை மீண்டும் வெல்லும் – இதைத்

தத்துவமாய்த் தோற்பவை கூத்து சொல்லும்

5. தெருக்கூத்தில் நடிகருக்குக் கைதட்டலே விருது – அதில்

வரும்காசு குறைந்தாலும் அதுவேயவர் விருந்து

(வரப் போகிறேன், இல்லாமல் இருக்கிறது, கொஞ்சம் அதிகம், முன்னுக்குப் பின், மறக்க நினைக்கிறேன்)

1. வரப் போகிறேன்

  • இன்னும் சிறிது நேரத்தில் வரப் போகிறேன்

2. இல்லாமல் இருக்கிறது

  • எங்கள் நாடு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது

3. கொஞ்சம் அதிகம்

  • சங்க காலத்தில் மன்னர்களுக்கு காதலும் வீரமும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது

4. முன்னுக்குப் பின்

  • முன்னுக்குப் பின் முரணாக பேசுவது நன்றன்று.

5. மறக்க நினைக்கிறேன்

  • எனக்கு பிடிக்காதவர்களை மறக்க நினைக்கிறேன்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories