அறன் வலியுறுத்தல்
January 27, 2025 2025-01-29 5:49அறன் வலியுறுத்தல்
அறன் வலியுறுத்தல்
- சிறப்பீனுஞ் செல்வமு மீனு மறத்தினூங்
காக்க மெவனோ உயிர்க்கு.
விளக்கம்:
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு ஆக்கம் எவனோ உயிர்க்கு.
2. அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
மறத்தலி னூங்கில்லை கேடு.
விளக்கம்:
அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.
3. ஒல்லும் வகையா னறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாஞ் செயல்.
விளக்கம்:
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும்வாய் எல்லாம் செயல்.
4. மனத்துக்கண் மாசில னாத லனைத்தற
னாகுல நீர பிற.
விளக்கம்:
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் ஆகுல நீர பிற.
5. அழுக்கா றவாவெகுளி யின்னாச்சொன் னான்கு
மிழுக்கா வியன்ற தறம்.
விளக்கம்:
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் இழுக்கா இயன்றது அறம்.
6. அன்றறிவா மென்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.
விளக்கம்:
அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றுஅது பொன்றுங்கால் பொன்றாத் துணை.
7. அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தா னிடை.
விளக்கம்:
அறத்துஆறு இதுஎன வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.
8. வீழ்நாள் படாஅமை நன்றாற்றி னஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்குங் கல்.
விளக்கம்:
வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன் வாழ்நாள் வழிஅடைக்கும் கல்.
9. அறத்தான் வருவதே யின்பமற் றெல்லாம்
புறத்த புகழு மில.
விளக்கம்:
அறத்தான் வருவதே இன்பம் மற்றுஎல்லாம் புறத்த புகழும் இல.
10. செயற்பால தோரு மறனே யொருவற்
குயற்பால தோரும் பழி.
விளக்கம்:
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு உயற்பாலது ஓரும் பழி.