Blog

இனியவை நாற்பது

10
Class 45 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

இனியவை நாற்பது

  • ஆசிரியர் = பூதஞ்சேந்தனார்
  • பாடல்கள் = 1 + 40
  • பாவகை = வெண்பா
  • இந்நூலில் மொத்தம் 124 இனிய செயல்கள் கூறப்பட்டுள்ளன.
இவை இனிமை பயப்பவை என நாற்பது பாடல்களால் கூறுவதால் இனியவை நாற்பது எனப் பெயர் பெற்றது.
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஒவ்வொரு பாடலும் மூன்று அல்லது நான்கு நற்கருத்துகளை இனிமையாகக் கூறும்.
கடவுள் வாழ்த்து
சிவன், திருமால், பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகள் மூவரையும் வணங்குதல் இனிது எனக் கூறுகிறது.
ஆசிரியர் குறிப்பு
பெயர் – மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதந்சேந்தனார்.
ஊர் – மதுரை
காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
பொதுவான் குறிப்புகள்
பெண்ணை இழிவுபடுத்தி நஞ்சாகக் கூறும் வழக்கத்தை முதன் முதலாக கூறிய நூல் இனியவை நாற்பது.
சொற்பொருள்
குழவி – குழந்தை
பிணி – நோய்
கழறும் – பேசும்
மயரி – மயக்கம்
சலவர் – வஞ்சகம்
மன்னுயிர் – நிலைபெற்ற உயிர்
முக்கிய அடிகள் (8th std)
1.“குழவி பிணி இன்றி வாழ்தல் இனிதே; கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே; மயரிகள் அல்லராய், மாண்புடையார்ச் சேரும் திருவும், தீர்வு இன்றேல், இனிது.”
குழந்தைகள் நோயில்லாது வாழ்வது இனிது. சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. தெளிவான பெருமை உடையவரின் செல்வம் நீங்காமை இனிது.
2.“சலவரைச் சாரா விடுதல் இனிதே புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே மலர்தலை ஞாலத்து மன்னுயிர்க் கெல்லாம் தகுதியால் வாழ்தல் இனிது”.
வஞ்சகர்களை நீக்குதல் இனியது. அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. பூமியில் வாழ்கின்ற உயிர்கள் உரிமையுடன் வாழ்தல் இனிது.
1. “ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;”
தசையைத் தின்று உடம்பை வளர்க்காமை இனிது.
2.“ஒப்பமுடிந்தால் மனைவாழ்க்கை முன் இனிது”
மனைவி உள்ளமும் கணவன் உள்ளமும் ஒன்றுபடக் கூடுமாயின் மனை வாழ்க்கை இனிது.
3. “வருவாய் அறிந்து வழங்கல் இனிது”
தன் வருவாய்க்கு ஏற்றார் போன்று கொடுத்தல் இனிது.
4.“தடமெனத் பணைத் தோள் தளிர் இயலாரை; விடமென்று உணர்த்தல் இனிது”
மூங்கிலை யொத்த தோள்களையும் தளிரையொத்த மென்மையையும் உடைய மகளிரை விஷம் என்று உணர்தல் இனிது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories