Blog

இயைபு

Old Syllabus

இயைபு

இயைபு :

ஒரு பாடல்/செய்யுளின் சீர்களிலோ, அடிகளிலோ அடியிறுதியில் ஓரெழுத்தோ, பல எழுத்துகளோ ஒன்றிவருவது இயைபு.

(எ.கா) :
நந்தவ னத்திலோ ராண்டி – அவன்
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி,
கொண்டுவந் தானொரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத் தாண்டி!

இதில் ”ண்டி” என்ற எழுத்துகள் ஒன்றி வருகின்றன.

இயைபு இரண்டு வகைப்படும்

  • அடி இயைபு
  • சீர் இயைபு

I. அடி இயைபு :

அடிதோறும் இறுதி எழுத்து, அசை, சொல் ஆகியன ஒன்றிவருவது அடி இயைபு
(எ-கா)
கொண்டல் கோபுரம் அண்டையில் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும்

II.சீர்இயைபு:

ஓரடியுள் இருக்கும் சீர்களின் இறுதி எழுத்து முதலாயின ஒன்றி இயைய வருமாறு தொடுப்பது சீர் இயைபு.

சீர்இயைபு ஏழு வகைப்படும்

  • இணை (1,2)
  • பொழிப்பு (1,3)
  • ஒரூஉ (1.4)
  • கூழை (1,2,3)
  • கீழ்க்கதுவாய் (1,2,4)
  • மேற்கதுவாய் (1,3,4)
  • முற்று (1,2,3,4)

1. இணை இயைபு (1,2)

ஒரு அடியின் 1,2 ஆம் சீர்களின் ஈற்றெழுத்து ஒன்றி வருவது இணை இயைபு
(எ-கா) :
மொய்த்துடன் தவழும் முகிலே பொழிலே

2.பொழிப்பு இயைபு (1,3)

ஒரு அடியின் ஒன்றாம் சீரிலும் மூன்றாம் சீரிலும் இறுதி எழுத்து ஒன்றி வருவது பொழிப்பு இயைபு .
(எ-கா) :
‘மற்றதன் அயலே முத்துறழ் மணலே

3. ஒரூஉ இயைபு(1.4)

ஒரு அடியின் ஒன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது ஒரூஉ இயைபு.
(எ-கா) :
நிழலே இனியதன் அயலது கடலே

4.கூழை இயைபு (1,2,3)

ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் மூன்றாம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது கூழை இயைபு. (எ-கா) :
மாதர் நகிலே வல்லே இயலே

5. கீழ்க்கதுவாய் இயைபு (1,2,4)

ஒரு அடியின் ஒன்றாம் இரண்டாம் நான்காம் சீர்களின் இறுதி எழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் இயைபு.
(எ-கா) :
பல்லே தவளம் பாலே சொல்லே

6. மேற்கதுவாய் இயைபு (1,3,4)

ஒரு அடியின் ஒன்றாம் மூன்றாம் நான்காம் சீர்களில் இறுதி எழுத்து ஒன்றி வருவது மேற்கதுவாய் இயைபு
(எ-கா) :
வில்லே நுதலே வேற்கண் கயலே

7. முற்று இயைபு (1,2,3,4 )

ஒரு அடியின் நான்கு சீர்களிலும் ஈற்றெழுத்து ஒன்றி வருவது முற்று இயைபு
(எ-கா) :
புயலே குழலே மயிலே இயலே

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories