Blog

இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்)

Old Syllabus

இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்)

கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியாகு மே*                                               – காளமேகப்புலவர்

காளமேகப்புலவரின் இயற்பெயர் வரதன்.

மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப்புலவர் என அழைக்கப்பட்டார்.

திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மாடல் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

இவரது “தனிப்பாடல்கள் தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.

அந்நூலிலிருந்து ஒரு பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.

கீரைப்பாத்தி பற்றி காளமேகப்புலவர் கூறியது 

  • மண் கட்டிகளை அடித்துத் தூளாக்குவர்.
  • மண்ணை வெட்டித் தடுத்துப் பாத்திகளாக்கி வைத்திருப்பர்.
  • வாய்க்காலில் மாறி மாறி நீர் பாய்ச்சுவர்.
  • நீர் கடைமடையின் இறுதி வரை சென்று மாற்றி விடத் திரும்பும்.

குதிரை பற்றி காளமேகப்புலவர் கூறியது 

  • வண்டிகளில் கட்டி, அடித்து ஓட்டப்படும்.
  • கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லும்;
  • எதிரிகளை மறித்துத் தாக்கும்;
  • போக வேண்டிய இடம் முழுவதும் சென்று மீண்டும் திரும்பி வரும்

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories