Blog

இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்)

77
Old Syllabus

இரட்டுற மொழிதல் (காளமேகப்புலவர்)

நூற்குறிப்பு
  • ஒருசொல்லோ தொடரோ இரண்டு பொருள் தருமாறு பாடுதல் இரட்டுற மொழிதல் என்பர்.
  • இதனைச் சிலேடை என்றும் கூறுவர்
ஆசிரியர் குறிப்பு

3.19 காளமேகப் புலவரின் சொற்சிலம்பம் | காண்டீபம்

பெயர்
காளமேகப்புலவர்
இயற்பெயர்
வரதன்
பிறந்த ஊர்
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள நந்திக்கிராமம் எனவும், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எண்ணாயிரம் எனவும் கூறுவர்
பணி
திரவரங்கக் கோவில் மடைப்பள்ளியில் பணி புரிந்தார். வைணவ சமயத்திற்கு மாறினார். கார்மேகம் போல் கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் காளமேகப் புலவர் என அழைக்கப் பெற்றார். இவர், இருபொருள் அமைய நகைச்சுவையுடன் பாடுவதில் வல்லவர்.
நூற்குறிப்பு
புலவர் பலர் பல்வேறு சூழ்நிலைக்கு ஏற்ப அவ்வப்போது பாடிய பாடல்களின் தொகுப்பே தனிப்பாடல் திரட்டு. இதனை இராமநாதபுரம் மன்னர் பொன்னுசாமி வேண்டுதலுக்குகிணங்க, சந்திரசேகர கவிராச் பண்டிதர் தமிழகம் முழுவதும் சென்று தேடித் தொகுத்தார்.
நூல் பயன்
தனிப்பாடல்களைக் கற்பதனால் தமிழ் மொழியின் பெருமையையும், புலவர்களின் புலமையையும், சொல்லின்பம், பொருளின்பம், கற்பனை இன்பம் முதலியவற்றையும் பெறலாம்.
பெயர் காரணம்:
  • “கார்மேகம் போல்” கவிதை பொழியும் ஆற்றல் பெற்றதால், இவர் “காளமேகப்புலவர்” என அழைக்கப் பெற்றார்.
  • கரியமேகம் எவ்வாறு விடாது பெய்யுமோ, அதுபோல் “இம்” என்னும் முன்னே எழுநூறு கவிப்பாடும் ஆற்றல் மிக்கவர்.
சிறப்பு பெயர்:
  • வசை பாட காளமேகம்
  • வசைகவி
  • ஆசுகவி
படைப்புகள்:
  • திருவானைக்கா உலா
  • திருவானைக்கா சரஸ்வதி மாலை
  • சமுத்திரவிலாசம்
  • சித்திரமடல்
  • பரப்பிரம்ம விளக்கம்
  • வினோத ரசமஞ்சரி
  • தமிழ் நாவலர் சரிதை
  • புலவர் புராணம்
  • தனிச்செய்யுள் சிந்தாமணி
  • பெருந்தொகை
  • கடல் விலாசம்
சிறப்பு:
  • சிலேடை, வசைப் பாடுவதில் வல்லவர்
குறிப்பு:
  • இவர் வைணவராக இருந்து சைவராக மாறினார்.
  • திருமலைராயன் அவைக்கள தலைமைப் புலவர் அதிமதுரகவியோடு வாதிட்டு “எமகண்டம்” பாடி அவரை வென்றவர்.
  • திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப்பள்ளியில் சமையல் தொழில் செய்தவர்
  • வர்க்க எழுத்துக்களை மட்டுமே கொண்டு பல பாடல் புனைந்தவர்.
  • இவர் மறைந்த இடம் = திருவானைக்கா
  • திருவானைக்கா கோயில் தாசியான மோகனாங்கியால் சைவரானார்
மேற்கொள்
“வாரிக் களத்தடிக்கம், வந்தபின்பு கோட்டை புகும்,
போரில் சிறந்து பொலிவாகும்” – வைக்கோல் – யானை
“நஞ்சிருக்கும்; தோல் உரிக்கும், நாதர் முடிமேல் இருக்கும்
வெஞ்சினத்தில் பட்டால் மீளாது” – பாம்பு – வாழை
“ஓடும்; சுழிசுத்தம் உண்டாகும்; துன்னலைச்
சாடும்; பரிவாய்த் தலைசாய்க்கும்” – குதிரை – காவிரி

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்

சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்

தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்

ஆடுபரி காவிரி யாமே.               – காளமேகப்புலவர்‌

பொருள்‌ : புகழ்பெற்ற மன்னன்‌ திருமலைராயன்‌ நாட்டில்‌, விரைந்து ஓடுவதால்‌, தெளிந்த (சுத்தமான) சுழி உடையதால்‌, பகைவரைத்‌ தாக்குவதால்‌, அன்போடு தலை சாய்ப்பதால்‌ குதிரையும்‌, வெள்ளத்தால்‌ ஆறு விரைந்து ஓடுவதால்‌, ஒடுகிறபொழுது நீரில்‌ சுழிகள்‌ உடையதால்‌, மலர்களை அலைத்துச்‌ செல்வதால்‌, பயிர்களுக்கு வளம்‌ சேர்ப்பதால்‌ காவிரியும்‌ ஒன்றாகும்‌.

சொற்பொருள்‌ : சுழி – உடல்மீது உள்ள சுழி, நீர்ச்சுழி; துன்னலர்‌ – பகைவர்‌, அழகிய மலர்‌; பரிவாய்‌ – அன்பாய்‌; சாடும்‌ – தாக்கும்‌, இழுக்கும்‌; ஆடுபரி – ஆடுகின்ற குதிரை.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories