இருபொருள் குறிக்கும் சொற்கள்
January 31, 2025 2025-04-17 7:50இருபொருள் குறிக்கும் சொற்கள்
இருபொருள் குறிக்கும் சொற்கள்
ஆடை தைக்க உதவுவது நூல் / மூதுரை அற நூல்
இரத்தின மாலை விலைமதிப்பற்றது / சூரியன் மாலை நேரத்தில் மறைகிறது
ராமு ஆறு மாதம் கழித்த பின் ஊருக்கு வந்தான் / தாமிரபரணி வற்றாத ஆறு
தேர்வில் வெற்றியடைய நன்றாக படி / மாணவர் வாழ்வில் முன்னேற ஆசிரியர் ஒரு ஏணிப்படி போன்று செயல்படுகிறார்கள்
1. ஆறு – நதி ஆறு – எண் 2. திங்கள் – சந்திரன் திங்கள் – வாரத்தின் இரண்டாம் நாள் 3. ஓடு – வீட்டின் கூரையில் அமைப்பது ஓடு – வேகமாக ஓடுதல் 4. நகை – சிரி நகை – அணிகலன்
அரசுக்குத் தவறாமல் வரி செலுத்த வேண் டும். ஏட்டில் எழுதுவது வரி வடிவம்.
மழலை பேசும் மொழி அழகு. இனிமைத் தமிழ் மொழி எமது.
அன்னை தந்தையின் கைப் பிடித்துக் குழந்தை நடை பழகும். அறிஞர் அண்ணாவின் சிறப்பு அவரது அடுக்கு மொழி நடை.
நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல். எழுத்துகள் தொடர்ந் து நின்று பொருள் தருவது சொல்.
உழவர்கள் நாற்று நட வயலுக்குச் செல்வர். குழந்தையை மெதுவாக நட என்போம்.
நீதி மன்றத்தில் கொடுப்பது வழக்கு நீச்சத் தண்ணி குடி என்பது பேச்சு வழக்கு
ஈ ஆறு கால்களை உடையது. தஞ்சாவூரில் காவிரி ஆறு பாய்கிறது
பாடலின் பொருளிளை விளக்கு அம்மா வீட்டில் விளக்கு ஏற்றினார்
பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்யாதீர்கள் இளமையில் படித்தல் அவசியம்
பெரியோர் சொல் கேள் தஞ்சை சொல்(நெல்) வளம் மிகுந்தது
இளமையில் கல் எறும்பு ஊர் கல்லும் தேயும்
பூவினால் செய்யப்படுவது மாலை சூரியன் மறைவது மாலை நேரம்
மழையின் போது இடி இடித்தது மரத்தின் மீது வண்டி இடித்து விட்டது
குழம்பும் கூட்டும் மணப்பது – பெருங்காயத்தால் குருதி மிகுதியாய்க் கொட்டுவது – பெருங்காயத்தால்
மாடுகள் தின்பது வைக்கோல் போர் மன்னர்கள் பலரும் இறந்தது போர்
எண்ணெய் ஊற்றி அகல் விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு அகல்
எனக்கு கால் பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்; பார்த்து உன் கால் ஐ வை.
கைப்பொருளைக் கடல் அலையில் தொலைத்துவிட்டு, கரையில் தேடி அலைந்தால் கிடைக்குமா?
வீட்டு விலங்கு ஆன நாயுடன் விளையாடுவது மகிழ்ச்சி தரும்; வெளியில் அதனைக் கழுத்து விலங்கு உடன் மட்டுமே பிடித்துச் செல்ல வேண்டும்.
எழுத்தாணி கொண்டு எழுதிய தமிழை, ஏவுகணையில் எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்.