Blog

இலக்கணம்

Class 28

இலக்கணம்

எழுத்து இலக்கணம்: மொழியைத் தெளிவுறப் பேசவும் எழுதவும் உதவுவது இலக்கணம். மொழியின் சிறப்புகளை அறியவும் இலக்கணம் துணை செய்யும்.

எழுத்து

உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் ஆகிய பத்தும் சார்பெழுத்துகள் ஆகும்.

அளபெடுத்தல் – நீண்டு ஒலித்தல்

பேச்சு வழக்கில் சொற்களை நீட்டி ஒலித்துப் பேசுவோம். அவ்வாறு பேசும்போது உணர்வுக்கும் இனிய ஓசைக்கும் அளபெடுத்தல் பயன்படுகிறது.

எ.கா. அம்மாஅ,தம்பீஇ

  1. உயிரளபெடை: செய்யுளில் மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும்போது அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.

உயிரளபெடை மூன்று வகைப்படும்.

  • அ) செய்யுளிசை அளபெடை
  • ஆ) இன்னிசை அளபெடை
  • இ) சொல்லிசை அளபெடை

அ) செய்யுளிசை அளபெடை: செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.

  • ஓஒதல் வேண்டும் – மொழி முதல்
  • உறாஅர்க்கு உறுநோய் – மொழியிடை
  • நல்ல படாஅ பறை – மொழியிறுதி
 

ஆ) இன்னிசை அளபெடை: செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.

இ) சொல்லிசை அளபெடை: செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.

உரனசை உள்ளம் துணையாகச் சென்றார்

வரனசை இன்னும் உளேன்.

ஒற்றளபெடை: செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல், ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.

ங்ங்கிறைவன்

ஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்

சொல் இலக்கணம்: ஓர் எழுத்து தனித்தோ, பல எழுத்துகள் சேர்ந்தோ பொருள் தரும் வகையில் அமைவது சொல் ஆகும். அது, இரு திணைகளையும் ஐந்து பால்களையும் குறிக்கும். மூவகை இடங்களிலும் வரும். உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் வரும்.  வெளிப்படையாகவும் குறிப்பாகவும் விளங்கும்.

(இன்சொல், எழுகதிர், கீரிபாம்பு, பூங்குழல் வந்தாள், மலை வாழ்வார், முத்துப்பல்)

1. இன்சொல் – பண்புத்தொகை

  • இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு

2. எழுகதிர் – வினைத்தொகை

  • கடலின் நடுவே தோன்றும் ஏழுகதிரின் அழகே அழகு

3. கீரிபாம்பு – உம்மைத்தொகை

  • பகைவர்கள் எப்போதும் கீரியும் பாம்பும் போல இருப்பார்கள்

4. பூங்குழல் வந்தாள் – அன்மொழித் தொகை

  • பூப் போன்ற கூந்தலையுடைய பெண் வந்தாள்

5. மலை வாழ்வார் – ஏழாம் வேற்றுமைத் தொகை

  • பழங்குடியினர் மலையின் கண் வாழ்பவர்

6. முத்துப் பல் – உவமைத் தொகை

  • வெண்மதியின் முத்துப் பல் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கிறது.

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல்ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது – வேற்றுமை உருபு

 

இலக்கணம் – பொது
இருதிணை ஆறறிவுடைய மக்களை உயர்திணை என்றும் மற்ற உயிரினங்களையும் உயிரற்ற பொருள்களையும் அஃறிணை (அல்திணை) என்றும் வழங்குவர்.

ஐம்பால் பால் என்பது திணையின் உட்பிரிவு ஆகும் (பால்-பகுப்பு, பிரிவு). இஃது ஐந்து வகைப்படும். உயர்திணை ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூன்று பிரிவுகளை உடையது.
அஃறிணை ஒன்றன்பால், பலவின்பால் என இரு பிரிவுகளை உடையது.

உயர்திணைக்குரிய பால் பகுப்புகள்

வீரன், அண்ணன், மருதன் – ஆண்பால்

மகள், அரசி, தலைவி – பெண்பால்

மக்கள், பெண்கள், ஆடவர் – பலர்பால்

அஃறிணைக்குரிய பால் பகுப்புகள்

அஃறிணையில் ஒன்றனைக் குறிப்பது ஒன்றன்பால் ஆகும்.   எ.கா. யானை, புறா, மலை.
அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால் ஆகும்.   எ.கா. பசுக்கள், மலைகள்.

மூவிடம்: தன்மை, முன்னிலை, படர்க்கை என இடம்

வழு – வழாநிலை – வழுவமைதி

இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும். இலக்கணமுறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.

வழு
வழாநிலை
 
 திணை
செழியன் வந்தது
செழியன் வந்தான்
 
பால்
கண்ணகி உண்டான்
கண்ணகி உண்டாள்
 
இடம்
நீ வந்தேன்
நீ வந்தாய்
 
காலம்
நேற்று வருவான்
நேற்று வந்தாய்
 
வினா
 
ஒரு விரலைக் காட்டிச் ‘ சிறியதோ? பெரியதோ?’ என்று கேட்டல்
 
இரு விரல்களைக் காட்டி ‘எது சிறியது? எது பெரியது?’ என்று கேட்டல்
விடை
கண்ணன் எங்கே இருக்கிறார்?’ என்ற வினாவிற்குக் கண்ணாடி பைக்குள் இருக்கிறது என்று விடையளித்தல்
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் கண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
 
மரபு
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோட்டம் என்று கூறுதல்
தென்னை மரங்கள் உள்ள பகுதியைத் தென்னந்தோப்பு என்று கூறுதல்
வழுநிலை
வழாநிலை
திணை
அரசன் வந்தது
அரசன் வந்தான்
பால்
கவி உண்டான்
கவி உண்டாள்
இடம்
நீவிர் வந்தேன்
நீவிர் வந்தாய்
காலம்
நேற்று வருவான்
நேற்று வந்தாய்
வினா
ஒரு மனினைக் காட்டிச் ‘சிறியவர் யார்? பெரியவர் வார்?’ என்று கேட்டல்
இரு மனிதனைக் காட்டி‘சிறியவர் யார்? பெரியவர் வார்?’ என்று கேட்டல்
விடை
அண்ணன் எங்கே இருக்கிறார்?’ என்ற வினாவிற்குக் அண்ணன் பானையில் இருக்கிறது என்று விடையளித்தல்
கண்ணன் எங்கே இருக்கிறார்? என்ற வினாவிற்குக் அண்ணன் வீட்டிற்குள் இருக்கிறார் என்று விடையளித்தல்
மரபு
மாமரங்கள் உள்ள பகுதியைத் மாந்தோட்டம் என்று கூறுதல்
மாமரங்கள் உள்ள பகுதியைத் மாந்தோப்பு என்று கூறுதல்.

வழுவமைதி
இலக்கணமுறைப்படி பிழையுடையது எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்படுவது வழுவமைதியாகும்.
1. திணை வழுவமைதி
“என் அம்மை வந்தாள்” என்று மாட்டைப் பார்த்துக் கூறுவது திணைவழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாக அஃறிணை, உயர்திணையாகக் கொள்ளப்பட்டது.
2. பால் வழுவமைதி
“வாடா இராசா, வாடா கண்ணா” என்று தன் மகளைப் பார்த்துத் தாய் அழைப்பது பால்வழுவமைதி ஆகும். இங்கு உவப்பின் காரணமாகப் பெண்பால், ஆண்பாலாகக் கொள்ளப்பட்டது.
3. இட வழுவமைதி
மாறன் என்பான் தன்னைப்பற்றிப் பிறரிடம் கூறும்போது,”இந்த மாறன் ஒருநாளும் பொய் கூறமாட்டான்” என, தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது இடவழுவமைதி ஆகும்.
4. கால வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார்.
இத்தொடர், குடியரசுத் தலைவர் நாளை வருவார் என அமைதல் வேண்டும். அவ்வாறு அமையவில்லை என்றாலும் நாம் பிழையாகக் கருதுவதில்லை. ஏனெனில் அவரது வருகையின் உறுதித்தன்மை நோக்கிக் காலவழுவமைதியாக ஏற்றுக்கொள்கிறோம்.
5. மரபு வழுவமைதி
“கத்துங் குயிலோசை – சற்றே வந்து காதிற் படவேணும்”- பாரதியார்.
குயில் கூவும் என்பதே மரபு, குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். இங்குக் கவிதையில் இடம்பெற்றிருப்பதால் இது மரபு வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 

குலசேகர ஆழ்வார் ‘வித்துவக்கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப் பாடுகிறார். பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார் – பால் வழுவமைதி, திணை வழுவமைதி

ஐவகை நிலங்கள் –

ஐவகை நிலங்கள்
குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்
முல்லை காடும் காடு சார்ந்த இடமும்
மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்
நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்
பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்

பெரும்பொழுது (ஓராண்டின் ஆறு கூறுகள்) :

கார்காலம்                         – ஆவணி, புரட்டாசி

குளிர்காலம்                      – ஐப்பசி, கார்த்திகை

முன்பனிக் காலம்          – மார்கழி, தை

பின்பனிக் காலம்           – மாசி, பங்குனி

இளவேனிற் காலம்        – சித்திரை, வைகாசி

முதுவேனிற் காலம்       – ஆனி, ஆடி

சிறுபொழுது (ஒரு நாளின் ஆறு கூறுகள்) :

காலை                                 – காலை 6 மணி முதல் 10 மணி வரை

நண்பகல்                           – காலை 10 மணி முதல்  2 மணி வரை

எற்பாடு                               – பிற்பகல் 2 மணி முதல் 6 வரை

மாலை                                 – மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

யாமம்                                  – இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

வைகறை                           – இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

திணையும் பொழுதும்
திணை பெரும்பொழுது சிறுபொழுது
குறிஞ்சி குளிர்காலம், முன்பனிக்காலம் யாமம்
முல்லை கார்காலம் மாலை
மருதம் ஆறு பெரும்பொழுதுகள் வைகறை
நெய்தல் ஆறு பெரும்பொழுதுகள் எற்பாடு
பாலை இளவேனில், முதுவேனில், பின்பனி நண்பகல்

 

கருப்பொருள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை
தெய்வம் முருகன் திருமால் இந்திரன் வருணன் கொற்றவை
மக்கள் வெற்பன், குறவர், குறத்தியர்  தோன்றல், ஆயர், ஆய்ச்சியர்  ஊரன், உழவர், உழத்தியர் சேர்ப்பன், பரதன், பரத்தியர் எயினர், எயிற்றியர்
உணவு  மலைநெல், தினை வரகு, சாமை செந்நெல், வெண்ணெல் மீன், உப்புக்குப் பெற்ற பொருள் சூறையாடலால் வரும் பொருள்
விலங்கு புலி, கரடி, சிங்கம் முயல், மான், புலி எருமை, நீர்நாய் முதலை, சுறா  வலியிழந்த யானை
பூ  குறிஞ்சி, காந்தள் முல்லை, தோன்றி செங்கழுநீர், தாமரை தாழை, நெய்தல் குரவம், பாதிரி
மரம்  அகில், வேங்கை கொன்றை, காயா காஞ்சி, மருதம் புன்னை, ஞாழல் இலுப்பை பாலை
பறவை கிளி, மயில் காட்டுக்கோழி, மயில் நாரை, நீர்க்கோழி,  அன்னம் கடற்காகம் புறா,பருந்து
ஊர் சிறுகுடி பாடி, சேரி பேரூர், மூதூர் பட்டினம் பாக்கம்  குறும்பு
நீர் அருவிநீர், சுனைநீர் காட்டாறு மனைக்கிணறு, பொய்கை மணற்கிணறு,உவர்க்கழி வற்றிய சுனை, கிணறு
பறை தொண்டகம் ஏறு கோட்பறை மணமுழா, நெல்லரிக்கிணை மீன் கோட்பறை துடி
யாழ் குறிஞ்சி யாழ் முல்லை யாழ் மருத யாழ் விளரியாழ் பாலை யாழ்
பண் குறிஞ்சிப் பண் முல்லைப் பண் மருதப்பண் செவ்வழிப்பண் பஞ்சுரப்பண்
தொழில் தேனெடுத்தல் கிழங்கு அகழ்தல் ஏறு தழுவுதல், நிரை மேய்த்தல் நெல்லரிதல், களை பறித்தல் மீன் பிடித்தல், உப்பு விளைத்தல் வழிப்பறி, நிரை கவர்தல்

புறப்பொருள்

புறம் பற்றிய நெறிகளைக் கூறுவது புறத்திணை புறத்திணைகள், வெட்சி முதலாகப் பன்னிரண்டு வகைப்படும்.

வெட்சிப் பூ வெட்சித் திணை ஆநிரை கவர்தல்
கரந்தைப் பூ கரந்தைத் திணை ஆநிரை மீட்டல்
வஞ்சிப் பூ வஞ்சித் திணை பகைவர் நாட்டைக் கைப்பற்றல்
காஞ்சிப் பூ காஞ்சித் திணை மாற்றரசனோடு எதிர்த்துப் போரிடல்
நொச்சிப் பூ நொச்சித் திணை முற்றுகையிட்ட பகையரசனோடு போரிடுதல்
உழிஞைப் பூ உழிஞைத் திணை மாற்றரசனின் கோட்டையைக் கைப்பற்ற போரிடுதல்
தும்பைப் பூ தும்பைத் திணை போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுதல்
வாகைப் பூ வாகைத் திணை போரிலே வெற்றி பெற்றவர் சூடுதல்
பாடு + ஆண் + திணை = பாடாண் பாடாண் திணை தகுதியுடையவர்களைப் போற்றிப் பாடுவது
பொது பொதுவியல் வெட்சித் திணை முதல் பாடாண் திணை வரை – கூறப்படாததைக் கூறுதல்.
ஒருதலை கைக்கிளை ஒருதலைக் காமம்
பொருந்தா பெருந்திணை பொருந்தாக் காமம்

பா வகை

எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்று ஆறு உறுப்புகளைக் கொண்டது யாப்பு. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என நான்கு வகை பாக்கள் உள்ளன.  ஒவ்வொரு பாவும் ஓசையால் வேறுபட்டது. ஓசையானது செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்று நான்கு வகைப்படும்.
செப்பல் ஓசை
செப்பலோசை வெண்பாவிற்குரியது. அறம் கூறும், குறளும் நாலடியாரும் வெண்பாவில் அமைந்துள்ளன.
அகவல் ஓசை
அகவல் ஓசை ஆசிரியப்பாவுக்கு உரியது. இலக்கணக் கட்டுக்கோப்புக் குறைவாகவும் கவிதை வெளியீட்டுக்கு எளிதாகவும் இருப்பது அகவற்பா என்னும் ஆசிரியப்பா. சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் , மணிமேகலை, பெருங்கதை ஆகிய காப்பியங்களும் அகவற்பாவில் அமைந்தவை.
துள்ளல் ஓசை
செய்யுளில் இடையிடையே உயர்ந்து வருவது துள்ளல் ஓசை. இது கலிப்பாவுக்கு உரியது.
தூங்கல் ஓசை
தூங்கல் ஓசை வஞ்சிப்பாவுக்கு உரியது.
பொது இலக்கணம்
வெண்பா
ஆசிரியப்பா (அகவற்பா)
ஓசை
செப்பல் ஓசை பெற்று வரும் அகவல் ஓசை பெற்று வரும்
சீர்
ற்றடி முச்சீராகவும், ஏனைய அடிகள் நாற்சீராகவும் வரும். இயற்சீர், வெண்சீர் மட்டுமே பயின்று வரும்.
ஈரசைச் சீர் மிகுதியாகவும், காய்ச்சீர் குறைவாகவும் பயின்று வரும்.
தளை
யற்சீர்வெண்டளை, வெண்சீர் வெண்டளை மட்டும் பயின்று வரும். ஆசிரியத் தளை மிகுதியாகவும் வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வரும்.
அடி
ரண்டடி முதல் பன்னிரண்டு அடி வரை அமையும். (கலிவெண்பா பதின்மூன்று அடிக்கு மேற்பட்டு வரும்.) மூன்று அடி முதல் எழுதுபவர் மனநிலைக்கேற்ப அமையும்.
முடிப்பு
ற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடியும். ஏகாரத்தில் முடித்தல் சிறப்பு.
யாப்போசை தரும் பாவோசை
1. செப்பலோசை                –    இருவர் உரையாடுவது போன்ற ஓசை
2. அகவலோசை                 –    ஒருவர் பேசுதல் போன்ற சொற்பொழிவாற்றுவது போன்ற ஓசை
3. துள்ளலோசை                 –    கன்று துள்ளினாற்போலச் சீர்தோறுந் துள்ளிவரும் ஓசை, அதாவது தாழ்ந்து உயர்ந்து வருவது.
4. தூங்கலோசை                –    சீர்தோறுந் துள்ளாது தூங்கிவரும் ஓசை. தாழ்ந்தே வருவது.                                            – யாப்பதிகாரம் புலவர் குழந்தை

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories