எட்டுத்தொகை
October 6, 2023 2025-01-11 13:57எட்டுத்தொகை
எட்டுத்தொகை
எட்டுத்தொகை நூல்கள்
-
எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர்.
-
எட்டுத் தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம் பெரும் பாடல் ஒன்று கூறுகிறது.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறுஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்கற்றறிந்தோர் ஏத்தும் கலியோடு அகம்புறமென்றுஇத்திறத்த எட்டுத் தொகை |
-
எட்டுத் தொகை நூல்கள் ஆவன,
-
நற்றிணை
-
குறுந்தொகை
-
ஐங்குறுநூறு
-
பதிற்றுப்பத்து
-
பரிபாடல்
-
கலித்தொகை
-
அகநானூறு
-
புறநானூறு
-
-
எட்டுத் தொகையில் அகம் பற்றிய நூல்கள் = 5 (நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு)
-
எட்டுத் தொகையில் புறம் பற்றிய நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, புறநானூறு)
-
எட்டுத் தொகையில் அகமும் புறமும் கலந்த நூல் = 1 (பரிபாடல்)
-
எட்டுத் தொகையில் நானூறு என்னும் எண்ணிக்கையில் குறிக்கப்படும் நூல்கள் = 4 (நற்றிணை நானூறு, அகநானூறு, புறநானூறு, குறுந்தொகை நானூறு)
-
எட்டுத்தொகையில் எண்ணிக்கையால் பெயர் பெறாத நூல்கள் = 2 (கலித்தொகை, பரிபாடல்)
-
கலிப்பா வகையால் ஆன நூல் = கலித்தொகை
-
பரிபாட்டு வகையால் ஆன நூல் = பரிபாடல்
-
மற்ற ஆறு நூல்களும் ஆசிரியப்பாவால் ஆனது.
-
முதலும் முடிவும் கிடைக்காமல் இருக்கும் எட்டுத் தொகை நூல்கள் = 2 (பதிற்றுப்பத்து, பரிபாடல்)
-
எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் முந்தியது = புறநானூறு
-
எட்டுத் தொகை நூல்களுள் காலத்தால் பிந்தியது = பரிபாடல், கலித்தொகை
-
எட்டுத் தொகை நூல்களுள் முதன் முதலாக தொகுக்கப்பட்ட நூல் = குறுந்தொகை
-
எட்டுத்தொகை நூல்கள் ஆசிரியர் பெயர் எட்டுத் தொகை நூல்கள் ஆசிரியர் பெயர், தொகுத்தோர், தொகுப்பித்தோர் ஆகிய விவரங்கள், அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
நூல் | புலவர் | பாடல் | அடி | பொருள் | தொகுத்தவர் | தொகுபித்தவர் | கடவுள் வாழ்த்து பாடியவர் | தெய்வம் |
நற்றிணை | 175 | 400 | 9-12 | அகம் | தெரியவில்லை | பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | திருமால் |
குறுந்தொகை | 205 | 400 | 4-8 | அகம் | பூரிக்கோ | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | முருகன் |
ஐங்குறுநூறு | 5 | 500 | 3-6 | அகம் | புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் | யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
பதிற்றுப்பத்து | 8 | 100 (80) | 8-57 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | ||
பரிபாடல் | 13 | 70 (22) | 25-400 | அகம் + புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | ||
கலித்தொகை | 5 | 150 | 11-80 | அகம் | நல்லந்துவனார் | தெரியவில்லை | நல்லந்துவனார் | சிவன் |
அகநானூறு | 145 | 400 | 13-31 | அகம் | உருத்திர சன்மனார் | பாண்டியன் உக்கிரப்பெருவழுதி | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
புறநானூறு | 158 | 400 | 4-40 | புறம் | தெரியவில்லை | தெரியவில்லை | பாரதம் பாடிய பெருந்தேவனார் | சிவன் |
எட்டுத்தொகை நூல்களின் சிறப்பு பெயர்கள்
எட்டுத்தொகை நூல்கள் | வேறு பெயர்கள் |
எட்டுத்தொகை | எண்பெருந்தொகை |
நற்றிணை | நற்றிணை நானூறுதூதின் வழிகாட்டி |
குறுந்தொகை | நல்ல குறுந்தொகை
குறுந்தொகை நானூறு |
ஐங்குறுநூறு | |
பதிற்றுப்பத்து | இரும்புக் கடலை |
பரிபாடல் | பரிபாட்டு
ஓங்கு பரிபாடல் இசைப்பாட்டு பொருட்கலவை நூல் தமிழின் முதல் இசைபாடல் நூல் |
கலித்தொகை | கலி
குறுங்கலி கற்றறிந்தோர் ஏத்தும் கலி கல்விவலார் கண்ட கலி அகப்பாடல் இலக்கியம் |
அகநானூறு | அகம்
அகப்பாட்டு நெடுந்தொகை நெடுந்தொகை நானூறு நெடும்பாட்டு பெருந்தொகை நானூறு |
புறநானூறு | புறம்
புறப்பாட்டு புறம்பு நானூறு தமிழர் வரலாற்று பெட்டகம் தமிழர் களஞ்சியம் திருக்குறளின் முன்னோடி. |
உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீர்இடைப் போழ
இரவும் எல்லையும் அசைவுஇன்று ஆகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்ட
கோடுஉயர் திணிமணல் அகன்துறை நீகான்
மாட ஒள்எரி மருங்குஅறிந்து ஒய்ய
– மருதன் இளநாகனார் (அகநானூறு)
மருதன் இளநாகனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
கலித்தொகையின் மருதத்திணையில் உள்ள முப்பத்து ஐந்து பாடல்களையும் பாடியவர் இவரே.
மருதத்திணை பாடுவதில் வல்லவர் என்பதால் மருதன் இளநாகனார் என அழைக்கப்படுகிறார்.
அகநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
புலவர் பலரால் பாடப்பட்ட நானூறு பாடல்களைக் கொண்டது.
இந்நூலினை நெடுந்தொகை என்றும் அழைப்பர்.
இந்நூலின் 255 ஆம் பாடல் இங்குத் தரப்பட்டுள்ளது.