எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
January 8, 2025 2025-05-02 12:18எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல்
கடமையை செய்; பலனை கேள் (கடமையைச் செய் பலனைக் கேள்)
மர பொருள்கள் வாடகைக்கு கிடைக்கும். (மரப் பொருள்கள் வாடகைக்கு கிடைக்கும்.)
திரைபடம் காண வருக. (திரைப்படம் காண வருக)
எதிர்மறைச் சொற்கள்
வந்தது நீ அல்ல; பார்த்தது நான் அல்ல; நான் படித்த புத்தகம் இது அல்ல என்றெல்லாம் பேசுகின்றோம். இவையெல்லாம் சரியான தொடர்கள் அல்ல. எதிர்மறை வினைமுற்றுகள் பல உண்டு. அவற்றை இடம் அறிந்து பயன்படுத்த வேண்டும்.
தன்மை | படர்க்கை | ||
ஒருமை | நான் அல்லேன். | ஆண்பால் | அவன் அல்லன். |
பன்மை | நாம் அல்லோம். | பெண்பால் | அவள் அல்லள். |
முன்னிலை | பலர்பால் | அவர் அல்லர். | |
ஒருமை | நீ அல்லை. | ஒன்றன்பால் | அஃது அன்று. |
பன்மை | நீவீர் அல்லீர். | பலவின் பால் | அவை அல்ல. |
‘வேறு, உண்டு, இல்லை’ – ஆகியவை மூவிடத்திற்கும், ஐம்பாலுக்கும் பொதுவான சொற்கள் ஆகும்.
1. அதைச் செய்தது நான் அன்று. – அதைச் செய்தது நான் அல்லேன்
2. பானையை உடைத்தது கண்ணன் அல்ல. – பானையை உடைத்தது கண்ணன் அல்லன்
3. மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அல்லை. – மல்லிகை குளத்தில் பூக்கும் மலர் அன்று
4. சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம். – சித்தர்கள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லர்
5. பகைவர் நீவீர் அல்லர். – பகைவர் நீவீர் அல்லீர்
1. தாங்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை _________ (அல்ல)
2. உங்களோடு வருவோர் _________ அல்லோம். (நாம்)
3. மணிமேகலை செல்வ வாழ்வை விரும்பியவள் _________ (அல்லன்)
4. ஈ மொத்த பண்டங்கள் உடலுக்கு நன்மை செய்வன _________ (அல்ல)
5. இந்த நிலத்துக்கு உரிமையாளர் ____________ அல்லை. (நீ)
வல்லினம் மிகவேண்டிய இடங்கள் | சான்று |
அ, இ என்னும் சுட்டெழுத்துகளுக்குப் பின்னும் | அச் சட்டை |
அந்த, இந்த என்னும் சுட்டுப் பெயர்களின் பின்னும் | இந்தக்காலம் |
எ என்னும் வினாவெழுத்தின் பின்னும் | எத் திசை? |
எந்த என்னும் வினாச் சொல்லின் பின்னும் |
எந்தப்பணம்? |
ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் | கதவைத் திற, காட்சியைப்பார் |
கு என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்படும் தொடர்களில் | முதியவருக்குக்கொடு, மெட்டுக்குப்பாட்டு |
என, ஆக போன்ற சொல்லுருபுகளின் பின் | எனக்கேட்டார், வருவதாகக்கூறு |
வல்லினம் மிகும் இடங்கள் | சான்று |
அதற்கு, இதற்கு, எதற்கு என்னும் சொற்களின் பின் | அதற்குச் சொன்னேன், இதற்குக் கொடு, எதற்குக் கேட்கிறாய்? |
இனி, தனி ஆகிய சொற்களின் பின் | இனிக் காண்போம், தனிச் சிறப்பு |
மிக என்னும் சொல்லின் பின் | மிகப் பெரியவர் |
எட்டு, பத்து என்னும் எண்ணுப் பெயர்களின் பின் | எட்டுத் தொகை, பத்துப்பாட்டு |
ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் | தீப் பிடித்தது, பூப் பந்தல் |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின் பின் | கூவாக் குயில், ஓடாக் குதிரை |
வன்தொடர்க் குற்றியலுகரங்கள் நிலை மொழியாக இருந்து புணர்கையில் | கேட்டுக் கொண்டான், விற்றுச் சென்றான் |
(அகர, இகர ஈற்று) வினையெச்சங்களுடன் புணர்கையில் | ஆடச் சொன்னார், ஓடிப் போனார் |
ஆறாம் வேற்றுமைத் தொகையில் | புலித்தோல் |
திசைப் பெயர்களின் பின் | கிழக்குப் பகுதி, வடக்குப் பக்கம் |
இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் | மல்லிகைப்பூ, சித்திரைத் திங்கள் |
உவமைத் தொகையில் | தாமரைப்பாதம் |
சால, தவ, தட, குழ என்னும் உரிச் சொற்களின் பின் | சாலப்பேசினார், தவச் சிறிது |
தனிக் குற்றெழுத்தை அடுத்துவரும் ஆகார எழுத்தின் பின் | நிலாச் சோறு, கனாக் கண்டேன் |
சில உருவகச் சொற்களில் | வாழ்க்கைப்படகு, உலகப்பந்து |
தொடர் தரும் பொருளைக் கூறுக.
அ) சின்னக்கொடி / சின்னகொடி
- சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
- சின்ன கொடி – சிறிய கொடி
ஆ) தோப்புக்கள் / தோப்புகள்
- தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
- தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்
இ) கடைப்பிடி / கடைபிடி
- கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
- கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது
ஈ) நடுக்கல் / நடுகல்
- நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
- நடுகல் – நினைவுச்சின்னம்
உ) கைம்மாறு / கைமாறு
- கைம்மாறு – உதவி செய்தல்
- கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)
ஊ) பொய்ச்சொல் / பொய்சொல்
- பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
- பொய் சொல் – பொய் சொல்வது தவறு
தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பத் காறமதை
ஊனிர்லே எம்முயிர் உல்லவும் – நிதம்
ஓதி யுனர்நதின புருமவாமே” – கவிமணி தேசிக விநாயகனார்
விடை:-
“தேனிலே ஊறிய செந்தமிழின் – சுவை
தேறும் சிலப்பத் காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளவும் – நிதம்
ஓதி யுணர்நதின புறுமவாமே” – கவிமணி தேசிக விநாயகனார்