Blog

தொடர்‌ வகைகள்

Class 31 எழுதும் திறன்

தொடர்‌ வகைகள்

தொடர்‌ வகைகள்‌
தொடர்கள்‌ பொருள்‌ அடிப்படையில்‌ நான்கு வகைப்படும்‌.
  • செய்தித்‌ தொடர்‌
  • வினாத்தொடர்‌
  • விழைவுத்‌ தொடர்‌
  • உணர்ச்சித்‌ தொடர்‌
செய்தித்‌ தொடர்‌
ஒரு செய்தியைத்‌ தெளிவாகக்‌ கூறும்‌ தொடர்‌ செய்தித்‌ தொடர்‌ ஆகும்‌.
(எ.கா.) கரிகாலன்‌ கல்லணையைக்‌ கட்டினான்‌.
வினாத்தொடர்‌
ஒருவரிடம்‌ ஒன்றை வினவுவதாக அமையும்‌ தொடர்‌ வினாத்தொடர்‌ ஆகும்‌
(எ.கா.) சிலப்பதிகாரத்தை இயற்றியவர்‌ யார்‌?
விழைவுத்‌ தொடர்‌
ஏவல்‌, வேண்டுதல்‌, வாழ்த்துதல்‌, வைதல்‌ ஆகிய பொருள்களில்‌ வரும்‌ தொடர்‌ விழைவுத்‌ தொடர்‌ ஆகும்‌.
(எ.கா.)  இளமையில்‌ கல்‌.                                 (ஏவல்‌)
                 உன்‌ திருக்குறள்‌ நூலைத்‌ தரு௧.  (வேண்டுதல்‌)
                 உழவுத்தொழில்‌ வாழ்க.                  (வாழ்த்துதல்‌)
                 கல்லாமை ஒழிக.                                (வைதல்‌)
உணர்ச்சித்‌ தொடர்‌
உவகை, அழுகை, அவலம்‌, அச்சம்‌, வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும்‌ தொடர்‌ உணர்ச்சித்‌ தொடர்‌ எனப்படும்‌.
(எ.கா.) அடடா! என்‌ தங்கை பரிசு பெற்றாள்‌!                                (உவகை)
                ஆ! புலி வருகிறது!                                                                       (அச்சம்‌)
                பழந்தமிழ்‌ இலக்கியங்கள்‌ பல அழிந்துவிட்டனவே!  (அவலம்‌)
                ஆ! மலையின்‌ உயரம்தான்‌ என்னே!                                 (வியப்பு)
1. முக்காலமும் உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள்.  
விடை : செய்தி தொடர்
2. கடமையைச் செய். 
விடை : விழைவுத்  தொடர்
3. பாரதியார் பாடல்களின் இனிமைதான் என்னே!  
விடை : உணர்ச்சித் தொடர்
4. நீ எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? 
விடை : வினாத்தொடர்
IV. தொடர்களை மாற்றுக.
1. நேற்று நம் ஊரில் மழை பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
2. காடு மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
விடை : என்னே! காட்டின் அழகு!
3. ஆ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : பூனை காலில் அடிபட்டுவிட்டது
4. அதிகாலையில் துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
விடை : அதிகாலையில் துயில் எழு
5. முகில்கள் திரண்டால் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)
விடை : முகில்கள் திரண்டால் மழை பெய்யும்
6. காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
விடை : காட்டில் புலி நடமாட்டம் உள்ளதோ?

7. நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர். (வினாத்தொடராக)

விடை :நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினரா?

8. பாடினான். (எழுவாய்த் தொடராக)

விடை :அவன் பாடினான்

9. இசையின்றி அமையாது பாடல். (உடன்பாட்டுத் தொடராக)

விடை : இசையோடு அமையும் பாடல்

10. நீ இதைச் செய் எனக் கூறினேன் அல்லவா? (கட்டளைத் தொடராக)

விடை :நீ இதைச் செய்

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன – செய்தித்தொடர்

 

தொகாநிலைத் தொடர்

தொகாநிலைத் தொடரின் ஒன்பது வகைகள்

எழுவாய்த்தொடர்

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர் ஆகும்.

இனியன் கவிஞர் – பெயர்

காவிரி பாய்ந்தது – வினை

பேருந்து வருமா? – வினா

மேற்கண்ட மூன்று தொடர்களிலும் பெயர், வினை, வினா ஆகியவற்றுக்கான பயனிலைகள் வந்து எழுவாய்த் தொடர்கள் அமைந்துள்ளன.

விளித்தொடர்

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர் ஆகும்.

நண்பா எழுது!       –  “நண்பா” என்னும் விளிப்பெயர் “எழுது” என்னும் பயனிலையைக்கொண்டு முடிந்துள்ளது.

வினைமுற்றுத்தொடர்

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது வினைமுற்றுத்தொடர் ஆகும்.

பாடினாள் கண்ணகி  –    “பாடினாள்” என்னும் வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

பெயரெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை, பெயர்ச்சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

கேட்ட பாடல்  –    “கேட்ட” என்னும் எச்சவினை “பாடல்” என்னும் பெயரைக்கொண்டு முடிந்துள்ளது.

வினையெச்சத்தொடர்

முற்றுப் பெறாத வினை, வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத்தொடர் ஆகும்.

பாடி மகிழ்ந்தனர் – “பாடி” என்னும் எச்சவினை “மகிழ்ந்தனர்” என்னும் வினையைக் கொண்டு முடிந்துள்ளது.

வேற்றுமைத்தொடர்

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.

கட்டுரையைப் படித்தாள்.

இத்தொடரில் ஐ என்னும் வேற்றுமை உருபு வெளிப்படையாக வந்து பொருளை உணர்த்துகிறது.

அன்பால் கட்டினார் – (ஆல்) மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

அறிஞருக்குப் பொன்னாடை (கு) நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

இடைச்சொல் தொடர்

இடைச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

மற்றொன்று – மற்று + ஒன்று. “மற்று” என்னும் இடைச்சொல்லை அடுத்து “ஒன்று” என்னும் சொல் நின்று பொருள் தருகிறது.

உரிச்சொல் தொடர்

உரிச்சொல்லுடன் பெயரோ, வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

சாலச் சிறந்தது “சால” என்பது உரிச்சொல். அதனைத்தொடர்ந்து “சிறந்தது” என்ற சொல்நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகிறது.

அடுக்குத் தொடர்

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் ஆகும்.

வருக! வருக! வருக! ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

 

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவர் அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பால்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

  1. இறங்கினார் முகமது – வினைமுற்றுத்தொடர்
  2. அவர் பாடகர் – எழுவாய்த்தொடர்
  3. பாடுவதும் கேட்பதும் – உம்மைத்தொகை
  4. கேட்ட பாடல் – உரிச்சொல்தொடர்
  5. அடுக்கு அடுக்காக- அடுக்குத்தொடர்

1. பழகப் பழகப் பாலும் புளிக்கும்                                –  பழகப் பழகப் – அடுக்குத் தொடர்

2. வடித்த கஞ்சியில் சீலையை அலசினேன்          – வடித்த கஞ்சியில் – வினையெச்சத் தொடர்

3. மேடையில் நன்றாகப் பேசினான்                           – நன்றாகப் பேசினான் – உரிச்சொல் தொடர்

4. வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்    – வந்தார் – வினைமுற்றுத் தொடர்

5. அரிய கவிதைகளின் தொகுப்பு                                – கவிதைகளின் – உரிச்சொல்தொடர்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories