ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம்
August 1, 2025 2025-08-01 6:42ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம்
ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் – மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம்
மக்களவை
மக்களவை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 545,
543 நாடாளுமன்றத் தொகுதிகளிலிருந்து, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டது மக்களவை ஆகும்.
மக்களவையில் ஆங்கிலோ-இந்திய சமூகத்திலிருந்து நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் நியமன உறுப்பினர்களாக இருப்பார்கள்.
அரசமைப்பு 52-வது திருத்தச்சட்டத்தின் படி ஒரு உறுப்பினரை கட்சித்தாவலின் அடிப்படையில் தகுதியிழப்பு செய்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்
அதிகாரம் சபாநாயகருக்கு உள்ளது.
மாநிலங்களவை
மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆளுகைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து வரும் 238 உறுப்பினர்களையும் மற்றும் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட 12 நியமன உறுப்பினர்களையும் சேர்த்து மொத்தம் 250 உறுப்பினர்களைக் கொண்டது.
மாநிலங்களவை அல்லது மேலவை இந்திய நாடாளுமன்றத்தின் இரண்டாவது ஆட்சி மன்றம் என்று அழைக்கப்படுகிறது.
அமெரிக்காவிலுள்ள ஆட்சிமன்றக் குழுவைப்போல மாநிலங்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு அமைப்பு மாநிலங்களவை ஆகும். இது 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி உருவாக்கப்பட்டது. மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால்
தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் தவிர, இலக்கியம், அறிவியல், கலை மற்றும் சமூக சேவை போன்ற துறைகளிலிருந்து புகழ் பெற்ற 12 உறுப்பினர்களை இந்தியக் குடியரசுத்தலைவர் நியமிக்கிறார்.
மக்களவையைப் போல் மாநிலங்களவை கலைக்க இயலாது. ஆனால் ஒவ்வொரு இரண்டு வருடத்திற்கும் அதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் தங்களது பதவிக்காலத்தை நிறைவு செய்வார்கள்.
ஒரு உறுப்பினரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மாநிலங்களவை உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால், மாற்றத்தக்க ஒற்றை வாக்கு மூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.