ஒருபொருள் தரும் பல சொற்கள்
January 6, 2025 2025-05-14 12:22ஒருபொருள் தரும் பல சொற்கள்
ஒருபொருள் தரும் பல சொற்கள்
“உலகம்” என்னும் பொருளில் உணர்த்தும் தமிழ்ச்சொற்கள் – ஞாலம், நிலம், பூவுலகம்.
“மேகம்” என்னும் பொருள் உணர்த்தும் தமிழ்ச்சொற்கள் – முகில், எழிலி, கொண்டல், மஞ்சு.
“அரசன்” என்னும் பொருளில் உணர்த்தும் தமிழ்ச்சொற்கள் – மன்னன், வேந்தன், கொற்றவன்.
புள் என்பதன் வேறு பெயர் – பறவை.
ஒரு பொருள் பல சொற்கள்
சோறு அடிசில், அமலை, அயினி, உண்டி, உணா, ஊண், சோறு கூழ், சொன்றி, துற்றி, பதம், பாத்து, பாளிதம், புகா, புழுக்கல், புற்கை, பொம்மல், மடை, மிசை, மிதவை, மூரல், வல்சி.
மிகுதி சால, தவ, நனி, கூர், கழி
பேசு கூறு, விளம்பு, மொழி, இயம்பு, உரை
சூரியன் ஞாயிறு,கதிரவன், பரிதி, பகலவன், வெய்யோன்
குழந்தை பிள்ளை, குழவி, மகவு, சேய்
உலகம் புவி, தரணி, நானிலம், பார், வையம்
கடல் பொருள் தரும் பல சொற்கள் – நேமி, வேலம், ஆழி, முந்நீர், வாரணம், பெளவம், வேலம், ஆர்கலி, பரவை, உததி, அத்தி, திரை, நரலை, சமுத்திரம்.
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் – கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை, பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை, விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு, சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை, கணையம்.
நீர்நிலைப் பெயர்கள் – அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி, உறைக்கிணறு, ஊருணி, ஊற்று, எரி, கட்டுக்கிணறு, கடல், கண்மாய், குண்டம், குண்டு குமிழிஊற்று, கூவல், கேணி, புனற்குளம், பூட்டைக் கிணறு.
வனப்பு – அழகு, அம்மை, தொன்மை, தோல், விருந்து, இயைபு, பலன், இழைபு
சொல்லுதல் – பேசுதல், விளம்புதல், செப்புதல், உரைத்தல், கூறல், இயம்பல், மொழிதல்.
குணதரன் – நற்குணமுள்ளவன், முனிவன்;
செவ்வை – செம்மை, மிகுதி
நகல் – படி, பிரதி
பூட்கை – யானை
தழை – செடி; தழையா வெப்பம் – பெருகும் வெப்பம்;குறையாத வெப்பம் எனவும் பொருள் கொள்ளலாம்; தழைக்கவும் – குறையவும்.