ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
January 30, 2025 2025-03-27 6:59ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான தொடரறிதல்.
தான், தாம் என்னும் சொற்கள்
தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும். இவ்வேறுபாட்டினை அறிந்து தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.
(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.
மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.
(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்)
(எ.கா.) மாடுகள் தமது தலையை ஆட்டின.
கன்று தனது தலையை ஆட்டியது.
பன்மை விகுதி (கள், க்கள், ங்கள், ற்கள்)
கள் | க்கள் | ங்கள் | ற்கள் |
கிழமைகள் | பாக்கள் | மரங்கள் | கற்கள் |
கடல்கள் | பூக்கள் | மாதங்கள் | சொற்கள் |
கைகள் | ஈக்கள் | படங்கள் | பற்கள் |
வாழ்த்துகள் | பசுக்கள் | பக்கங்கள் | புற்கள் |