Blog

ஒருமை பன்மை பிழையை நீக்குதல்

Class 5 இலக்கணம்

ஒருமை பன்மை பிழையை நீக்குதல்

ஒருமை பன்மை தவறை நீக்கி எழுதுதல்
இது ஒரு எளிய வகை வினா, தேர்வரின் தமிழறிவை சோதிக்கும் வண்ணம் , வாக்கியங்களில் வரும் ஒருமை/பன்மை (singular/flural) வேறுபாடுகளை கண்டறியும் திறனை சோதிக்கும் வண்ணம் இருக்கும்.
ஒருமை
ஒருமை என்பது ஒன்றை மட்டும் குறிப்பது.
ஒருமையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு ஒருமையில் தான் முடியவேண்டும்
(எ.கா.) மரம் சாய்ந்தது, அறிஞர் வந்தார்
பன்மை
பன்மை என்பது ஒன்றிற்கு மேற்பட்டவைகளைக் குறிப்பது.
பன்மையில் தொடங்கும் ஒரு தொடரின் முடிவு பன்மையில் தான் அமைய வேண்டும்
(எ.கா.) மரங்கள் சாய்ந்தன, கருவிகள் பழுதடைந்தன
தன்மைப் பெயர்
ஒருமை
பன்மை
யான்
யாம், யாங்கள்
நான்
நாம், நாங்கள்
முன்னிலைப் பெயர்
ஒருமை
பன்மை
நீ
நீர், நீங்கள்
படர்க்கைப் பெயர்
ஒருமை
பன்மை
அவன், அவள்
அவர்கள்
அது
அவை
தம்பி
தம்பிமார்
தங்கை
தங்கைமார்
கண்
கண்கள்
நரி
நரிகள்
பிழை
திருத்தம்
அவைகள்
அவை
அதுகள்
அது
எனது மகள்
என் மகள்
ஒரு ஊர்
ஓர் ஊர்
நாட்கள்
நாள்கள்
பொதுவழி அல்ல
பொதுவழி அன்று
சில அறிஞர்
அறிஞர் சிலர்
அவன் அல்ல
அவன் அல்லன்
அவள் அல்ல
அவள் அல்லள்
அவர்கள் அல்ல
அவர்கள் அல்லர்
அவை அன்று
அது அன்று
அது உரிமையானது
அஃது உரிமையானது
யான் தாம் வந்தோம்
யான் தான் வந்தேன்
நான் தாம் சென்றேன்
நான் தான் சென்றேன்
நீர் தான் கொடுத்தீர்
நீர் தாம் கொடுத்தீர்
நாம் தான் போவோம்
நாம் தான் போவோம்
நீர் தான கொடுத்தீர்
நீர் தாம் கொடுத்தீர்
அவை தான் ஓடின
அவை தாம் ஓடின
ஒருமை
பன்மை
அன்று
அல்ல
தான்
தாம்
பிழை
மன்னர் தன் குடிகளிடம் அன்பாய் இருப்பார்.
திருத்தம்
மன்னர் தம் குடிகளிடம் அன்பாய் இருப்பார்.
பிழை
ஆமைகள் வேகமாய் ஓடாது
திருத்தம்
ஆமைகள் வேகமாய் ஓடா.
பிழை
நான் கொடுத்த புத்தகம் இது அல்ல
திருத்தம்
நான் கொடுத்த புத்தகம் இது அன்று
பிழை
இதைச் செய்தவன் இவன் அல்ல
திருத்தம்
இதைச் செய்தவன் இவன் அல்லன்
பிழை
ஒருகாட்டில் ஒரு சிங்கமொன்று இருந்தது
திருத்தம்
ஒருகாட்டில் சிங்கமொன்று இருந்தது
பிழை
பாலும் தேனும் கிடைத்தது
திருத்தம்
பாலும் தேனும் கிடைத்தன.
பிழை
தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றன
திருத்தம்
தமிழ்நாட்டு அணி போட்டியில் வென்றது
பிழை
திட்டங்கள் தீட்டப்பட்டது
திருத்தம்
திட்டங்கள் தீட்டப்பட்டன
பிழை
கந்தன் தேவியை மணந்தார்
திருத்தம்
கந்தன் தேவியை மணந்தான்
ஒரு, அது எனும் சொல்லையடுத்து முதலெழுத்து உயிர் எழுத்தாக உள்ள சொல் வந்தால் ஒரு-ஓர் என்றும் அது-அஃது என்று வரும்.
ஒவ்வொரு என்னும் சொல்லையடுத்து நாளும், காசும் என்பன போல ஒருமைச் சொற்களே வர வேண்டும்.
கள் க்கள்
கிழமைகள் பாக்கள்
கடல்கள் பூக்கள்
கைகள் ஈக்கள்
வாழ்த்துக்கள் பசுக்கள்
ங்கள் ற்கள்
மரங்கள் கற்கள்
மாதங்கள் சொற்கள்
படங்கள் பற்கள்
பக்கங்கள் புற்கள்

பிழையும்‌ திருத்தமும்‌ கீழே காணப்படுபவை பிழையான சொற்றொடர்கள்‌.

சிங்கம்‌ வந்தான்‌ -(வந்தது)

இராமன்‌ அழுதாள்‌-(அழுதான்)

பறவைகள்‌ பாடியது-(பாடின)

அவன்‌ வந்தேன்‌ -(வந்தான்‌)

ஒருமை – பன்மை பிழை திருத்தம்‌

அ. காற்று வீசின; மரங்கள்‌ அசைந்தது.  – காற்று வீசியது; மரங்கள்‌ அசைந்தன.

ஆ. தங்கப்பனும்‌ செல்லப்பனும்‌ பள்ளிக்குச்‌ சென்றான்‌. –  தங்கப்பனும்‌ செல்லப்பனும்‌  பள்ளிக்குச்‌ சென்றனர்‌.

காலம்‌ பிழை திருத்தம்‌

அ. நாளைக்கு நான்‌ ஊருக்குப்‌ போய்ச்‌ சேர்ந்தேன்‌. – நாளைக்கு நான்‌ ஊருக்குப்போய்ச்‌ சேர்வேன்‌.

ஆ. நேற்று பால்‌ பொங்குகிறது. – நேற்று பால்‌ பொங்கியது.

தான், தாம் என்னும் சொற்கள்

தான் என்பது ஒருமையைக் குறிக்கும். தாம் என்பது பன்மையைக் குறிக்கும்.

தான், தன்னை, தன்னால், தனக்கு, தனது ஆகியவற்றை ஒருமைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

தாம், தம்மை, தம்மால், தமக்கு, தமது ஆகியவற்றைப் பன்மைத் தொடர்களில் பயன்படுத்த வேண்டும்.

(எ.கா.) தலைவர் தமது கையால் பரிசு வழங்கினார்.   (ஒருமை)

மாணவன் தனது கையால் பெற்றுக் கொண்டான்.      (பன்மை)

(இங்குத் தலைவர் என்பது ஒருவரைக் குறித்தாலும் இது மரியாதைப் பன்மை ஆகும்)

(எ.கா.) மாடுகள் தமது தலையை ஆட்டின.                     (பன்மை)

கன்று தனது தலையை ஆட்டியது.                                      (ஒருமை)

 

சிறுமி _____ (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.

அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் _____ (தனது/தமது) உழைப்பை நல்கினார்.

உயர்ந்தோர் _____ (தம்மைத்தாமே/தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.

இவை _____ (தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.

குழந்தைகள் _____ (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories