Blog

ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல்‌ அறிதல்‌.

Class 24 சொல்லகராதி

ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல்‌ அறிதல்‌.

வண்மை – அவர்‌ வண்மை உள்ளவர்‌ (வண்மை – கொடைத்‌ தன்மை)   ஞாலம் – ஞாலம்‌ பெரியது (ஞாலம்- உலகம்) நெறி – வழி.

1. உலகில் வாழும் மக்களில் சிலர் கனியிருக்கக் காய் புசித்தலைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி இன்னற்படுகின்றனர்.

  • புவியில் வாழும் மானுடர்கள் சிலர் பழயிருக்கக் காய் உண்பதைப்போல, இன்சொல் இருக்க வன்சொல் பேசி துன்பப்படுகின்றனர்.

2. வள்ளல் குமணன் வறுமையால் வாடிவந்த புலவனுக்குத் தனது தலையைக் கொடுத்து மங்காப் புகழ் பெற்றான்.

    • வள்ளல் குமணன் ஏழ்மையால் வாடிவந்த அறிஞர்களுத் தனது தலையைக் ஈந்து மங்காப் பெருமை பெற்றான்.

3. நளனும் அவனது துணைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமுகில் கண்ட மஞ்ஞை போலக் களி கொண்டனர்

  • நளனும் அவனது மனைவியும் நிடதநாட்டுக்கு வந்ததைக் கண்டு, அந்நாட்டு மக்கள் மழைமேகம் கண்ட மயில் போலக் மகிழ்ச்சி கொண்டனர்.

4. சோலையிற் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.

  • நந்தவனத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி தேனைவுண்டன.

5. பசுப்போல் சாந்தமும் புலிபோல் தீரமும் யானை போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்.

  • “ஆ”ப்போல் அமைதியும் வேங்கைபோல் வீரமும் களிறு போல உழைப்பும் மனிதனுக்கு வேண்டும்

அடவி – காடு           அவல் – பள்ளம்           சுவல் – பிடரி, முதுகு          செறு – வயல், கோபம்      பழனம் –  வயல்   புறவு – சிறுகாடு.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories