உரிய பொருளைக் கண்டறிதல்
February 8, 2024 2025-05-13 12:49உரிய பொருளைக் கண்டறிதல்
உரிய பொருளைக் கண்டறிதல்
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளை அறிதல்
கரை, கறை; குளவி, குழவி; வாளை, வாழை; பரவை, பறவை; மரை, மறை;
1) அலை – அழை
அலை – கடலலை – இன்று கடல் அலையின் வேகம் மிக அதிகமாகவுள்ளது.
அழை – வர வழைத்தல் – என் திருமணத்திற்கு நண்பர்களை அழைத்துள்ளேன்
2) கரை – கறை
கரை – ஆற்றின் ஓரம் – ஆற்றங்கரையை பலபடுத்த பனைமரங்கள் வளர்க்ப்படுகின்றன
கறை – படிவது கறை – துணியில் கறை படிந்துள்ளது
3) குளவி – குழவி
குளவி – பூச்சி வகைகளுள் ஒன்று – குளவி வீட்டின் நிலைப்படியில் கூடு கட்டுகிறது
குழவி – குழந்தை – குழவி மருங்கினும் கிழவதாகும் (பிள்ளைத்தமிழ்)
4) வாளை – வாழை
வாளை – மீன் வகைகளில் ஒன்று – ஆற்றில் வாளை மீன் துள்ளிக் குதித்தது.
வாழை – வாழைப்பழம் – முக்கனிகளுள் ஒன்று வாழைப்பழம்.
5) பரவை – பறவை
பரவை – பரந்துள்ள கடல் – மதுரைக்குப் பக்கத்திலுள்ள சிற்றார் பரவை.
பறவை – பறப்பவை – பறவைகள் பறந்து சென்றன.
6) மரை – மறை
மரை – தாமரை – தாமரை நீர் நிலையில் மலரும்.
மறை – வேதம் – வேதபாட சாலையில் நான்மறை ஓதப்பட்டன.
7) சின்னக்கொடி / சின்னகொடி
சின்னக்கொடி – சின்னம் வரையப்பட்ட கொடி
சின்ன கொடி – சிறிய கொடி
8) தோப்புக்கள் / தோப்புகள்
தோப்புக்கள் – தோப்பிலிருந்து இறக்கிவரப்பட்ட கள்
தோப்புகள் – பல மரங்கள் சேர்ந்தது தோப்புகள்
9) கடைப்பிடி / கடைபிடி
கடைப்பிடி – கொள்கையைக் கடைபிடிப்பது
கடைபிடி – வாணிகம் தொடங்கக் கடை பிடிப்பது
10) நடுக்கல் / நடுகல்
நடுக்கல் – அடையாளமாக நடுவது நடுக்கல்
நடுகல் – நினைவுச்சின்னம்
11) கைம்மாறு / கைமாறு
கைம்மாறு – உதவி செய்தல்
கைமாறு – கையில் உள்ள மாறு (விளக்குமாறு)
12) பொய்ச்சொல் / பொய்சொல்
பொய்ச்சொல் – நீ சொன்னது பொய்ச்சொல்
பொய் சொல் – பொய் சொல்வது தவறு
13) வண்மை / வன்மை
வண்மை என்பதன் பொருள் கொடைத் தன்மை.
வன்மை என்பதன் பொருள் கொடுமை.
உரிய சொற்களைத் தேர்ந்தெடுத்துச் சொற்றொடரை நிரப்புங்கள்.
- மல்லிகை —– வீசியது. (மனம், மணம்)
- பூமியை —– வருவேன். (வலம், வளம்)
- —– பதுங்கிப் பாயும். (புலி, புளி)
- முகத்தில் —– முறுவல் வேண்டும். (புன், புண்)
- நாய் —– நிமிராது. (வால், வாள்)
- உயர்ந்து நிற்பது (மலை, மழை)
- வானத்தில் இருந்து பெய்வது . (மழை, மலை)
- உழவர்கள் ஆடித்திங்களில் பூட்டுவர். (பொண்ணேர், பொன்னேர்)
- மழைநீரை என்பர். (வானப்புனல், வாணப்புணல்)
- பாரதிதாசன் இயற்றிய நூல். (பான்டியன் பரிசு, பாண்டியன் பரிசு)
உழவன் காலையில் காளையை ஓட்டிச் சென்றான். அவன், கடும்பனியிலும் தன் பணியைச் சிறப்பாகச் செய்தான்; வாழைத் தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சினான்; ஏழையாக இருந்தாலும் எடுத்த வேலையை வேளை தவிராது செய்து முடித்தான்.
1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _______ என்று பெயர். (பறவை / பரவை) (2022) விடை : பரவை
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக _______ ஆற்றினார். (உரை / உறை) விடை : உரை
3. முத்து தம் _______ காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி) விடை : பணி
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை _______ (அலைத்தாள் /அழைத்தாள்). விடை : அழைத்தாள்
1. நிலத்துக்கு அடியில் கிடைக்கும் புதையல் யாவும் அரசுக்கே சொந்தம். நெகிழிப் பொருள்களை மண்ணுக்கு அடியில் புதைத்தல் நிலத்தடி நீர்வளத்தைக் குன்றச் செய்யும். (புதையல்; புதைத்தல்)
2. காட்டு விலங்குகளைச் சுடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. செய்த தவறுகளைச் சுட்டல் திருந்த உதவுகிறது. (சுட்டல், சுடுதல்)
3. காற்றின் மெல்லிய தொடுதல் பூக்களைத் தலையாட்டவைக்கிறது. கைகளின் நேர்த்தியான தொடுத்தல் பூக்களை மாலையாக்குகிறது. (தொடுத்தல், தொடுதல்)
4. பசுமையான காட்சிஐக் காணுதல் கண்ணுக்கு நல்லது. (காணுதல், காட்சி)
5. பொதுவாழ்வில் நடித்தல் கூடாது. நடிப்புஇல் அவரை மிஞ்ச ஆள் கிடையாது. (நடித்தல், நடிப்பு)