ஓரெழுத்து ஒருமொழி
October 16, 2023 2025-03-19 5:42ஓரெழுத்து ஒருமொழி
ஓரெழுத்து ஒருமொழி
நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை 42 எழுத்துகள் உள்ளதாகப் பவணந்தி முனிவர் கூறுகிறார்.
இவற்றில், நெடில் எழுத்துகள் – நாற்பது (40).
குறில் எழுத்துகள் – இரண்டு (2).
ஓரெழுத்து ஒரு மொழிகள்:
உயிர் எழுத்து – ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ
மகர வரிசை – மா, மீ, மூ, மே, மை, மோ
தகர வரிசை – தா, தீ, தூ, தே, தை
பகர வரிசை – பா, பூ, பே, பை, போ
நகர வரிசை – நா, நீ, நே, நை, நோ
ககர வரிசை – கா, கூ, கை, கோ
சகர வரிசை – சா, சீ, சே, சோ
வகர வரிசை – வா, வீ, வை, வௌ
யகர வரிசை – யா
குறில் எழுத்து – நொ, து
ஓரெழுத்து ஒரு மொழி:
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, ந என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசையில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
உயிர் நெடில்ஆறு எழுத்துகள் ஓரெழுத்து ஒரு மொழிகளாகப்பொருள் தருகின்றன.
வரிசை எண் | உயிர் நெடில் | பொருள் |
1 | ஆ | பசு |
2 | ஈ | கொடு |
3 | ஊ | இறைச்சி |
4 | ஏ | அம்பு |
5 | ஐ | தலைவன் |
6 | ஓ | மதகுநீர் – தாங்கும் பலகை |
மேற்கண்ட ஆறு உயிர் நெடிலுடன் வல்லின ஒற்றுகளான க், ச், த், ப் உடன் இணைத்து உயிர்மெய் நெடில் எழுத்துகளாகி ஓரெழுத்து ஒருமொழி பொருளாகத் தருகின்றன.
க வரிசை(நெடில்) – 4
கா | கூ | கை | கோ |
சோலை | பூமி | ஒழுக்கம் | அரசன் |
ச வரிசை (நெடில்) – 4
சா | சீ | சே | சோ |
இறந்து போ | இகழ்ச்சி | உயர்வு | மதில் |
த வரிசை (நெடில்) – 5
தா | தீ | தூ | தே | தை |
கொடு | நெருப்பு | தூய்மை | கடவுள் | தைத்தல் |
ப வரிசை (நெடில்) – 5
பா | பூ | பே | பை | போ |
பாடல் | மலர் | மேகம் | கைப்பை | செல் |
மெல்லின ஓரெழுத்து ஒருமொழிகள்
ந வரிசை (நெடில்) – 5
நா | நீ | நே | நை | நோ |
நாவு | முன்னிலை ஒருமை | அன்பு | இழிவு | வறுமை |
ம வரிசை (நெடில்) – 5
மா | மீ | மூ | மே | மை | மோ |
மரம் | வான் | மூப்பு | அன்பு | அஞ்சனம் | முகத்தல் |
இடையின ஓரெழுத்து ஒருமொழி
ய வரிசை(நெடில்) – 1
யா என்பதன் பொருள் அகலம்
வ வரிசை (நெடில்) – 4
வா | வீ | வை | வௌ |
அழைத்தல் | மலர் | வைக்கோல் | கவர் |
குறில் (இரண்டு)ஓரெழுத்து ஒருமொழிகள்
நொ (ந் + ஒ) – நோய்
து (த் + உ) – உண்
ஓர் எழுத்துச் சொற்கள்.
1. ______ புல்லை மேயும். விடை : ஆ
2. ______ சுடும் விடை : தீ
3. ______ பேசும். விடை : கை
4. ______ பறக்கும் விடை : ஈ
5. ______ மணம் வீசும் விடை : பூ
- தா – கொடு
- தீ = நெருப்பு
- பா = பாடல்
- தை = தைத்தல்
- வை = புல்
- மை = அஞ்சனம்