கம்பராமாயணம் தொடர்பான செய்திகள்
October 4, 2023 2025-01-11 13:57கம்பராமாயணம் தொடர்பான செய்திகள்
கம்பராமாயணம் தொடர்பான செய்திகள்
-
கம்பர், இராமனது வரலாற்றைத் தமிழில் வழங்கி “இராமாவதாரம்” எனப் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்பெறுகிறது.
-
இது ஆறு காண்டங்களை உடையது.
-
கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.
-
அவற்றுள் அழகுணர்ச்சி மிக்க சில கவிதைகள் பாடப்பகுதியாக அமைந்துள்ளன.
-
”கல்வியில் பெரியவர் கம்பர்”, “கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்” போன்ற முதுமொழிகளுக்கு உரியவர் கம்பர்;
-
சோழ நாட்டுத் திருவழுந்தூரைச் சார்ந்தவர்;
-
திருவெண்ணெய்நல்லூர் சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப் பெற்றவர்;
-
”விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்” என்று புகழ்பெற்றவர்;
-
கம்பன் இசைத்த கவியெல்லாம் நான்’ என்று பாரதி பெருமைப்படுகிறார்.
-
விருத்தம் என்னும் ஒண்பாவிற்கு உயர் கம்பன்
கம்பர் இயற்றிய நூல்கள்
-
சரசுவதி அந்தாதி
-
சடகோபர் அந்தாதி
-
திருக்கை வழக்கம்
-
ஏரெழுபது
-
சிலை எழுபது
நிலம் |
தொழில் / உணவுப்பபயிர் |
இன்றைய வளர்ச்சி |
குறிஞ்சி |
மலை நெல், திணை நெல், தேன், கிழங்கு |
ஏற்றுமதிப் பொருள்களாக இருக்கின்றன. நாட்டு மருத்துவத் துறையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. |
மருதம் |
செந்நெல், வெண்ணெல் |
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. பெரும்பாலான மக்களின் உணவுப் பொருளாக இருப்பதால் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. |
நெய்தல் |
உப்பு, மீன் |
மீன்களைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் மிகுதியாகி உள்ளன. இத் தொழிற்சாலைகள் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு அளிக்கிறது. இங்கு பதப்படுத்தப்பட்ட மீன்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதைப் போலவே உப்பளங்களில் உள்ள உப்பு சுத்திகரிக்கப்பபட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. |
கம்பராமாயணம் – பாடல் வரிகள்
பாலகாண்டம் – நாட்டுப்படலம்தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்க க்
|
பாலகாண்டம் – நாட்டுப்படலம்வண்மை யில்லையோர் வறுமை யின்மையாற்
|
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்வெய்யோனொ ளி தன்மேனியின் விரிசோதியின் மறையப்
|
அயோத்தியா காண்டம் – கங்கைப்படலம்ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
|
யுத்த காண்டம் – கும்பகருணன் வதைப் படலம்உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்க ண் மாய வாழ்வெலா ம்
|
“தண்டலை மயில்களாட தாமரை விளக்கத் தாங்கக்,
கொண்டல்கண் முழவினேங்க குவளைக்கண் விழித்து நோக்க,
தெண்டிரை யெழினி காட்டத், தேம்பிழி மகரயாழின்
வண்டுகளி னிதுபாட மருதம்வீற்றி ருக்கும்மாதோ.”
தண்டல மயில்கள் ஆட என்னும் பாடலில் கம்பரின் கவித்திறம்,
சோலையை நாட்டிய மேடையாகவும்
மயிலை நடன மாதராகவும்
குளங்களில் உண்டான அலைகளைத் திரைச்சீலையாகவும்
தாமரை மலரை விளக்காகவும்
மேகக்கூட்டங்களை மத்தளமாகவும்
வண்டுகளின் ஓசையை யாழின் இசையாகவும்
பார்வையாளர்களைக் குவளைமலர்களாகவும் சித்தரித்து
தன் கவித்திறனைச் சான்றாக்குகிறார்.
இந்தப் பாடலில் கம்பனின் சொல்லாட்சி மாண்புறச் செய்கின்றன. கம்பனின் கவித்திறம், தான் சொல்ல வந்ததை விளக்க கையாண்ட உத்திகள் அனைத்தையும் நாம் நினைத்து பார்த்தால் கம்மன் தமிழுக்கு கிடைத்த வரம் எனலாம்.
படைப்பாளி தான் வாழ்ந்த காலத்தில் மட்டுமல்லாது, தான் வீழ்ந்த பின்னரும் வாழ்கின்றான் என்றால் மிகையாகாது. அந்த வகையில் கம்பன் இன்றும் தன் சந்தக் கவிதையோடு வாழ்ந்து வருகிறான்.
“காலமெனும் ஆழியிலும்
காற்றுமழை ஊழியிலும் சாகாது
கம்பனவன் பாட்டு, அது
தலைமுறைக்கு அவன் எழுதி வைத்த சீட்டு”
எனக் கண்ணதாசன் கம்பனைப் பாடுகிறார். இது அவரது கவித்திறனுக்குச் சான்று.
கம்பன் கவிதை எழுதுவதற்கு முன்னர் அவன் ரசிக்கிறான். ரசித்ததை அனுபவித்து, அதனுள் கரைந்து விடாமல் படிக்கும் வாசகனை உள்ளே இழுத்து வருகிறான். தன் ஒவ்வொரு வார்த்தையிலும் ஓசை நயத்தை உருவாக்குிறான். தம்மை உச்சிக்கு கொண்டு சேர்க்கிறான்.
உதாரணமாக
தாடகை என்ற அரக்கியைக் கம்பர் உருவாக்குகிறார்.
” இறைக்கடை துடித்த புருவங்கள் எயிறு என்னும்
பிறைக்கிடை பிறக்கிட மடித்த பிலவாயன
மறக்கடை அரக்கி” என எவ்வளவு அழகாக தன் கவித்திறனைப் பதிவு செய்கிறார்.
கம்பனின் கவிதை மூலம் பெறும் இன்பங்கள் எத்தனையோ அதில் ஒன்று சந்தம், ஓசை தரும் இன்பம் ஒரு கோடி இன்பம் என்பதற்கு எற்ப,
கம்பர் கங்கை காண் படலத்தில்
“ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாேரோ
வேழ நெடும் படை……….”
எனத் தொடங்கும் பாடல் உலக்கையால் மாறி மாறி இடிக்கும் ஒத்த ஒசையில் அமைந்த சந்தம் இடிக்கும் காட்சியைக் கம்பர் கண்முன் எழுப்புகிறார்.
“உறங்குகின்ற கும்பகன்ன! வுங்கண் மாய வாழவெ லாம்
இறங்குகின்றது! இன்று காண்! எழுந்திராய்! எழுந்திராய்!
கறங்கு போல வில்பிடித்த கால தூதர் கையிலே,
உறங்குவாய், உறங்குவாய்! இனிக் கிடந்து உறங்குவாய்!”
மேற்சொன்ன கவிதைகளை உற்று நோக்கும்போது சந்தக் கவிதையில் சிறகடித்து பறக்கும் தமிழ் நெடிய உலகில் கம்பனைத் தவிர வேறு யாருமில்லை என்பதை அறிய முடிகிறது.
சொற்பொருள்
-
ஏந்தல் = சிறந்தோன் (இராமன்)
-
கழல் = திருவடி (கழலணிந்தகால்)
-
முளரி = தாமரை
-
தையல் = (திருமகளாகிய) சீதாப்பிரட்டி
-
வையகம் = தரை
-
வையகம் தழீஇ = தரையில் வீழ்ந்து
-
இறைஞ்சி = வணங்கி
-
திண்டிறல் = (பேராற்றல் மிக்கவனாகிய) இராமபிரான்
-
ஓதி = கூந்தல் (கூந்தலையுடையளாகிய சீதை)
-
தெரிய = (செயலின் நோக்கத்தைத் தேர்ந்து) அறிந்து
-
வலியள் = (உடல், மனம் இரண்டின் உறுதியால் பகைவன் ஊரிலும்) உயிருடன் உள்ளாள், உறுதியள்
-
மற்று = மேலும்
-
துறத்தி = கைவிடுக
-
பன்னுவான் = உரைப்பானாயினான்
-
திரை = அலை
-
மன் = தயரதன்
-
மருகி = மருமகள்
-
தனயை = மகள்
-
கேட்டி = கேட்பாயாகுக
-
தடந்தோள் = அகன்றதோள்
-
இரும்பொறை = வலிய பொறுமை (பெருமைக்குரிய பொறுமை)
-
வீங்கு நீர் = பரந்து பெருகிய கடல் (சூழ்ந்த இலங்கை) வெற்பு = மலை (இலங்கைத் தீவின் ஒரு பகுதி)
-
உம்பி = உன்தம்பி (இலக்குவன்)
-
வேலை = கடல்
-
விண்தோய் = வானளாவிய
-
களி நடம் = ஆனந்த நடனம்
-
கனகம் = பொன்
-
சாலை = பர்ணசாலை
-
பொதுவற = தனித்தனியாக
-
அணங்கு அன்னாள் = தெய்வம் போல்வாள்
-
அலங்கு = அசைதல்; ஒளிமிகுந்த
-
இடைபெறுந்தன்மை = தகுந்த காலம் வாய்க்கும் தன்மை
-
கோறல் = கொல்லுதல்
-
அலங்கல் = மாலை
-
ஏயினன் = ஏவினான்
-
உறைப்ப = அழுத்தமாக
-
சார்த்தும் அளவை = மாட்டும் பொழுது
-
உன்னினள் = நினைந்தனள்
-
புகன்ற போழ்தின் = சொன்ன பொழுது
-
திருக்கம் = வஞ்சனை
-
முறிவு = வேறுபாடு
-
மருந்து = அமிழ்தம்
-
இயம்பலள் = (உணர்ச்சிப் பெருக்கால்) பேச்சொன்றும் பேசினாளல்லள்
-
எய்த்தமேனி = இளைத்த உடம்பு
-
வீங்கினள் = பூரித்தாள்
-
ஆழி = மோதிரம்
-
விண்டாள் = வெளிப்படுத்தினாள்
-
உயிர்ப்புவிண்டாள் = பெருமூச்சு விட்டாள்
-
அடுத்த = நிகழ்ந்தவை
-
வருத்தப்பாடு = துன்பம்
-
உயிர்ப்பு = பெருமூச்சு
-
தோகை = மயில் போலும் சாயலாள் (சீதை)
-
இயைபுளி = பொருத்தமுற, முறையாக
-
திருவுளம் தீர்ந்தபின்னை = மனமில்லையாயின்
-
திங்கள் ஒன்று = ஒரு மாதம்
-
மாமணிக்கரசு = சூடாமணி
-
வித்தக = அறிஞனே
-
காண்டி = காணுக
இலக்கணக்குறிப்பு
-
எய்தினன் = முற்று
-
மொய்கழல் = வினைத்தொகை
-
தொழுகிலன் = எதிர்மறைவினைமுற்று
-
கழல் = தானியாகுபெயர்
-
தழீஇ = சொல்லிசையளபெடை
-
திண்டிறல் நோக்கினான் = பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை
-
வண்டுறை ஓதியும் வலியள் = வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
-
வலியள் = குறிப்பு வினைமுற்று
-
தெண்டிரை = பண்புத் தொகை
-
அலைகடல் = வினைத்தொகை
-
துறத்தி = (முன்னிலை) ஏவல் வினைமுற்று
-
கேட்டி = முன்னிலை ஏவல் வினைமுற்று
-
பெருந்தடந்தோள் = பண்புத்தொகை
-
வீங்குநீர் = வினைத் தொகை
-
தடந்தோள் = உரிச்சொற்றொடர்
-
பெருந்தவம் = பண்புத்தொகை
-
இற்பிறப்பு = ஏழாம் வேற்றுமைத்தொகை
-
களிநடம் = வினைத்தொகை
-
விரிநகர் = வினைத்தொகை
-
உம்பி = முறைப்பெயர்
-
ஐய = விளி
-
உம்பி = உன்தம்பி என்பதன் மருஉ
-
பொலங்குழை = மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
-
கண்ணின் நீர்க்கடல் = உருவகம்
-
கோறல் = தொழிற்பெயர்
-
சொல்லுமின் = ஏவல் வினைமுற்று
-
அறன் = (அறம்) இறுதிப் போலி
-
எலாம் = எல்லாம் என்பதன் இடைக்குறை.
-
ஆருயிர் = பண்புத்தொகை
-
பொன்னடி = உவமத்தொகை
-
வண்ண மோதிரம் = இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
-
பேர் அடையாளம் = உம்மைத்தொகை
-
உணர்த்தினென் = தன்மை ஒருமை வினைமுற்று
-
நிற்பிரிந்த = இரண்டாம் வேற்றுமைத் தொகை
-
மலரடி = உவமத்தொகை
-
மாமணி = உரிச்சொற்றொடர்
-
கைத்தலம் = இருபெயரொட்டுப் பண்புத்தொகை.
தாதுகு சோலை தோறும் சண்பகக் காடு தோறும்
போதவிழ் பொய்கை தோறும் புதுமணத் தடங்கள் தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே. – கம்பர் , கம்பராமாயணம்
பொருள் : சரயு ஆறு மகரந்தப்பொடிகளைச் சிந்தும் சோலைகளை வளப்படுத்தியும், சண்பக வனங்களைக் கடந்தும், அரும்புகள் விரிந்திருக்கின்ற குளங்களை நிரப்பியும், புதுமணல்மிக்க நீர்நிலைகள் வழியாகவும், குருக்கத்தி வேலியிட்ட கமுகத்தோட்டங்களில் பாய்ந்தும், வயல்களைச் செழிக்கச் செய்தும் பாய்ந்து செல்வது, உடலினுள் உயிர்புகுந்து பரவுவதனைப் போன்று விளங்குகிறது.
சொற்பொருள் : தாது – மகரந்தம்; போது – மலர்; பொய்கை – குளம்; பூகம் – கமுகம் (பாக்கு மரம்).
ஆசிரியர் குறிப்பு:
பெயர் : கம்பர்
ஊர் : நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்.
போற்றியவர் : சடையப்ப வள்ளல்
இயற்றிய நூல்கள் : சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்.
காலம் : கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு எனக் கூறுவர்.
கம்பர், வடமொழியில் வால்மீகி எழுதிய இராமாயணத்தைத் தழுவித் தமிழில் காப்பியம் இயற்றினார்; இயற்றிய அந்நூலுக்கு, இராமாவதாரம் எனப் பெயரிட்டார். அதுவே கம்பராமாயணம் என வழங்கலாயிற்று. எனவே, இது வழிநூல் எனப்படுகிறது. கதை மாந்தரின் வடசொற் பெயர்களைத் தொல்காப்பிய நெறிப்படி தமிழ்ப்படுத்திய பெருமைக்குரியவர் கம்பர்.
நூல் குறிப்பு : கம்பராமாயணம் ஆறு காண்டங்களையுடையது. அவை: பால காண்டம், அயோத்தியா காண்டம், ஆரணிய காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்பன. (காண்டம் – பெரும் பிரிவு; படலம் – உட்பிரிவு) இப்பாடல் பால காண்டத்து ஆற்றுப்படலத்தில் உள்ளது. தற்போதைய உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம், இதில் கூறப்பட்டுள்ளது.