Blog

கலிங்கத்துப்பரணி

99
Old Syllabus

கலிங்கத்துப்பரணி

Tnpsc Tamil Notes: கலிங்கத்துப்பரணி- 9 ஆம் வகுப்பு சமச்சீர்
ஆசிரியர் குறிப்பு:
  • கலிங்கத்துப்பரணியை இயற்றியவர் செயங்கொண்டார்.
  • இவர் திருவாரூர் மாவட்டம் தீபங்குடியில் பிறந்தவர்.
  • இவர் முதல் குலோத்துங்கசோழனின் அரசவைப் புலவர்.
  • இசையாயிரம், உலா, மடல் ஆகிய நூல்களையும் இயற்றி உள்ளார்.
  • இவரது காலம் கி.பி.பனிரெண்டாம் நூற்றாண்டு.
  • பரணிக்கோர் செயங்கொண்டார் என்று பலபட்டடைச் சொக்கநாத புலவர் புகழ்ந்துள்ளார்.
  • 96 வகைச் சிற்றிலக்கியங்களுள் ஒன்றான பரணி வகையைச் சாரந்த நூல்
  • இதுவே தமிழில் முதன்முதலில் எழுந்த பரணி நூல்
  • இது முதலாம் குலோத்துங்க சோழன், அவருடைய படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான் ஆகியோரின் கலிங்கப்போர் வெற்றியை பேசுகிறது.
  • இந்நூலைத் தென்தமிழ்த் தெய்வப்பரணி என்று ஒட்டக்கூத்தர் புகழ்ந்துள்ளார்.
  • கலித்தாழிசையால் பாடப் பெற்றது.
  • 599 தாழிசைகள் கொண்டது
  • போர்முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றி கொண்ட வீரரைப் புகழந்து பாடும் இலக்கியம் பரணி ஆகும்.
நூல் குறிப்பு:
கலிங்க வீரர்கள் “இது என்ன மாய வித்தையோ” என்று வியந்தனர். தம்மை அழிக்க வந்த தீயோ? உயிரை பறிக்க வந்த எமனோ? என்று அஞ்சினர்.
படைக் கூட்டத்திலிருந்து விலகி ஓடினர். கடலில் தாவிக் குதித்துத் தப்பினர். யானைகள் பின்னே மறைந்து கொண்டனர்.
எந்த திசையில் செல்வது எனத் தெரியாமல், மலைக் குகை மற்றும் புதர்களில் ஓடி ஒளிந்தனர்.
ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு ஓடினர். தன்னுடைய நிழலைக் கூட எதிரிகள் துரத்தி வருவதாக எண்ணிப் பயந்தனர்.
யானை பிளிறியதைக் கேட்டு பயந்த வீரர்கள் குகைக்குள் சென்று மறைந்தனர். புறமுதுகு காட்டி ஓடிப் பிழைத்தனர்.
  • கலிங்க மன்னன் ஆனந்தபத்மன் மீது முதல் குலோத்துங்கச் சோழன் போர்தொடுத்து வெற்றி பெற்றான். அவ்வெற்றியை பாராட்டி எழுதப்பட்ட நூல் இது.
  • ஆயிரக்கணக்கான யானைகளைப் போரில் கொன்ற வீரனைப் புகழ்ந்து பாடும் இலக்கியத்திற்கு பரணி என்று பெயர்.
ஆயிரம் யானை அமரிடை வென்ற
மாணவ னுக்கு வகுப்பது பரணி
– பன்னிரு பாட்டியல்
  • பேரறிஞர் அண்ணா, “எனக்கு மிக விருப்பமான இலக்கியம் ஒன்று உண்டென்றால் அது கலிங்கத்துப்பரணியே” என்றார்.
கலிங்கப் படையின் நடுக்கம்
எதுகொல் இது மாயை ஒன்றுகொல்
எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை
அதுகொல் என அலறா இரிந்தனர்
அலதி குலதியொடு ஏழ்க லிங்கரே (1)
கலிங்கர் தோற்றுச் சிதைந்தோடல்
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல் இன்றியே (2)
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே (3)
மழைகள் அதிர்வன போல் உடன்றன
வளவன் விடுபடை வேழம் என்றிருள்
முழைகள் நுழைவர்கள் போரில் இன்றுநம்
முதுகு செயும்உப காரம் என்பரே (4)
– செயங்கொண்டார்

 

ஆயிரம்‌ யானைகளைப்‌ போரில்‌ வென்ற அரசனுக்காகப்‌ பாடப்படும்‌ இலக்கியவகை பரணி. “ஆனை ஆயிரம்‌ அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி” என்பது பரணியின்‌ இலக்கணம்‌. இவ்விலக்கியம்‌ தொண்ணூற்றாறு சிற்றிலக்கியவகைகளுள்‌ ஒன்று. அரசர்கள்‌ இருவருக்கிடையேயான போரில்‌, தோற்ற அரசனது நாட்டின்‌ பெயரால்‌ பரணி பாடப்படும்‌. போருக்குரிய தெய்வமாகக்‌ காளியைக்‌ கருதுவர்‌. பரணி இலக்கியங்களுள்‌ மிகச்சிறந்தது கலிங்கத்துப்பரணி. போரில்‌ குலோத்துங்க மன்னனிடம்‌ கலிங்க நாட்டு மன்னன்‌ தோற்றுப்போனான்‌. அதனால்‌, கலிங்கத்துப்பரணி எனப்‌ பெயர்‌ சூட்டப்பட்டது. இந்நூல்‌ சயங்கொண்டாரால்‌ பாடப்பட்டது.

பிரபந்தம்‌ என்பதற்கு நன்கு கட்டப்பட்டது என்பது பொருள்‌.

தமிழ்ச்‌ சிற்றிலக்கியங்கள்‌ தொண்ணாரற்றாறு வகைப்படும்‌.

 

 

 

 

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories