காயிதேமில்லத்
October 12, 2023 2025-01-18 13:01காயிதேமில்லத்
காயிதேமில்லத்
காயிதே மில்லத். அவரது இயற்பெயர் முகம்மது இசுமாயில். ‘காயிதே மில்லத்’ என்னும் அரபுச் சொல்லுக்குச் சமுதாய வழிகாட்டி என்று பொருள்.
“தமிழக அரசியல் வானில் கவ்வியிருந்த காரிருளை அகற்ற வந்த ஒளிக்கதிராகக் காயிதே மில்லத் முகமது இஸ்மாயில் அவர்கள் திகழ்கிறார்”. — அறிஞர் அண்ணா
“இப்படிப்பட்ட தலைவர் கிடைப்பது அரிது. அவர் நல்ல உத்தமமான மனிதர்” – தந்தை பெரியார்
தமது கல்வியை விட நாட்டின் விடுதலையே மேலானது என்று எண்ணி ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார்.
“மணக்கொடை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று காயிதே மில்லத் வெளிப்படையாக அறிவித்தார்.
ஆட்சி மொழி தேர்வு செய்யும் கூட்டத்தில் காயிதே மில்லத் “பழமையான மொழிகளில் ஒன்றைத்தான் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்றால், அது தமிழ்மொழி என்று தான் நான் உறுதியாகச் சொல்வேன். மண்ணிலே முதன் முதலாகப் பேசப்பட்ட மொழி திராவிட மொழிகள் தான். அவற்றுள் இலக்கிய செறிவு கொண்ட தமிழ் மொழி தான் மிகப்பழமையான மொழி. அதனைத் தான் நாட்டின் ஆட்சிமொழியாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
எளிமை, நேர்மை, உழைப்பு, பொறுமை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுகிறார்
1946 முதல் 1952 வரை சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினர். இந்திய அரசியலமைப்பு உருவாக்கக் குழு உறுப்பினர். இந்தியா விடுதலை பெற்றபின் மாநிலங்களவை உறுப்பினர்.மக்களவை உறுப்பினர்.
கல்வி ஒன்றுதான் ஒட்டுமொத்தச் சமூக வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எண்ணினார் காயிதே மில்லத்.
“கல்வி மிகுந்திடில் கழிந்திடும் மடமை“ என்ற முதுமொழிக்கு ஏற்பக் கல்வி நிறுவனங்களை உருவாக்க நினைத்தார்.
திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரி, கேரளாவில் ஃபரூக் கல்லூரி ஆகியவற்றைத் தொடங்க அவரே காரணமாக இருந்தார்