Blog

குறுந்தொகை

66
Old Syllabus

குறுந்தொகை

குறுந்தொகை குறிப்பு
  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 205
  • அடி எல்லை = 4-8
பெயர்க்காரணம்
  • குறுமை + தொகை = குறுந் தொகை
  • குறுகிய அடிகளை உடையதால் குறுந்தொகை எனப்பட்டது.
வேறு பெயர்கள்
  • நல்ல குறுந் தொகை
  • குறுந் தொகை நானூறு (இறையனார் களவியல் உரை கூறுகிறது)
குறுந்தொகை நூலை தொகுத்தவர்
  • தொகுத்தவர் = பூரிக்கோ
  • தொகுப்பிதவர் = தெரியவில்லை
உரை, பதிப்பு
  • இந்நூலின் 380 பாடல்களுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார். 20 பாடல்களுக்கு நச்சினார்கினியர் உரை எழுதியுள்ளார். இத் தகவலை சீவக சிந்தாமணி சிறப்பாயிரத்தில் நச்சினார்கினியர் கூறியுள்ளார். ஆனால் இவை தற்போது கிடைக்கவில்லை.
  • நூலை முதலில் வெளியிட்டவர் = சௌரிபெருமாள் அரங்கனார்
  • நூலை முதலில் பதிப்பித்தவர் = சி.வை.தாமோதரம் பிள்ளை
கடவுள் வாழ்த்து
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலில் குறிக்கப்படும் கடவுள் = முருகன்
நூல் தொடரால் பெயர் பெற்றோர் = 18 பேர்
அணிலோடு முன்றிலார்
விட்ட குதிரையார்
குப்பைக் கோழியார்
மீனெறி தூண்டிலார்
காக்கைப்பாடினியார்
வெள்ளிவீதியார்
நூல் வடமொழிப் பெயர்கள்
உருத்திரன்
சாண்டிலியன்
உலோச்சணன்
பௌத்திரன்
நூல் குறிப்பிடும் அரசர்கள்
சோழன் கரிகாலன்
குட்டுவன்
பசும்பூண் பாண்டியன்
பாரி
ஓரி
நள்ளி
பாடிய பெண்பாற் புலவர்கள் = 13 பேர்
ஔவையார்
வெள்ளிவீதியார்
வெண்பூதியார்
ஆதிமந்தி
குறுந்தொகை நூல் குறிப்பு
  • எட்டு தொகை நூல்களுள் முதன் முதலில் தொகுக்கப்பட்ட நூல் இதுவே.
  • பரணர் பாடல்களில் வரலாற்று குறிப்புகள் அதிகம் காணப்படும்.
  • வரலாற்று புலவர்கள் எனப்படுபவர்கள் = பரணர், மாமூலனார்
  • உரை ஆசிரியர்களால் மிகுதியாக மேற்கோள் காட்டப்பட்ட நூல் குறுந் தொகையே.
  • இந்நூலின் 236 பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன
  • திருவிளையாடல் புராணத்தில் தருமி வரலாற்றுக்கு ஊற்றாக விளங்கியது “கொங்குதேர் வாழ்க்கை’ என்னும் குறுந் தொகை பாடலே.
  • இந்நூலில் 307, 391ஆம் பாடல்கள் மட்டும் ஒன்பது அடிகள் கொண்டவை.
முக்கிய அடிகள்
  • நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
            நீரினும் ஆரளவின்றே  – (தேவகுலத்தார்)
  • வினையே ஆடவர்க்கு உயிரே; வாணுதல்
            மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே 
              – (பாலை பாடிய பெருங்கடுங்கோ)
  • யாயும் ஞாயும் யாராகியரோ
          எந்தையும் நுந்தையும் எம்முறைகேளிர்
          நீயும் யானும் எவ்வழி அறிதும்
           செம்புலப் பெயல்நீர் போல
           அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே – (செம்புலப்பெயல் நீரார்)
  • கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
            காமம் செப்பாது கண்டது மொழிமோ
            பயலியது கெழீஇய நட்பின் மயிலியல்
            செறியெயிற் றரிவை கூந்தலின்
            நறியவும் உளவோ நீ அறியும் பூவே

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories