Blog

குலசேகர ஆழ்வார்

Old Syllabus

குலசேகர ஆழ்வார்

  • இவர் சேரநாட்டுத் திருவஞ்சிக் களத்தில் தோன்றியவர்.
  • இவர் எழுதிய பாடல்கள் பெருமாள் திருமொழி எனப்படும்.
  • அவை மொத்தம் 105 பாடல்கள் ஆகும்.
  • இவர் கௌத்துவ மணியின் அம்சமாகப் பிறந்தவர்
  • இவர் வடமொழி யில் “முகுந்த மாலை” என்னும் நூலினை எழுதியுள்ளார்
  • இவர் இராமனுக்கு தாலாட்டு பாடியவர்
  • ஒவ்வொரு வைணவத் திருக்கோயிலிலும் இறைவனின் கருவறைக்கு முன் உள்ள படி “குலசேகரன் படி” என்ற பெயரில் வழங்கப்படும்
  • திருவரங்கத்தின் மூன்றாம் மதிலை இவர் கட்டினார்
வேறு பெயர்கள்
  • கொல்லிக் காவலன்
  • கூடல் நாயகன்
  • கோழிக்கோ
படைப்பு
  • பெருமாள் திருமொழி
மேற்கோள்
  • ஆனாத செல்வத் தரம்பையர்கள் தற்சூழ
    வானாளுஞ் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்
     தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடச்சுனையில்

     மீனாய்ப் பிறக்கும் விதியுடைய னாவேனே
  • மீன்னோக்கும் நீள்வயல்சூழ் வித்துவக்கோட் டம்மாஎன்
     பானோக்கா யாகிலுமுன் பற்றல்லால் பற்றில்லேன்
     தானோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
      கோனோக்கி வாழுங் குடிபோன் றிருந்தேனே

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories