Blog

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்தல்

Class 38 வாசித்தல் - புரிந்து கொள்ளும் திறன்

கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத்‌ தேர்ந்தெடுத்தல்

இந்திய விடுதலைக்குப் பாடுபட்டவர்களுள் ஒருவர் வ.உ.சிதம்பரனார். வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார். அவர், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தாெழிற்சங்கத் தலைவர் என்னும் பன்முகத்தன்மை பெற்றிருந்தார். ஆங்கிலேயரின் கப்பல்களுக்குப் போட்டியாக உள்நாட்டு இந்தியக் கப்பல் நிறுவனத்தைத் தாெடங்கியவர்.

1906 ஆம் ஆணடு அக்டாேபர் 16ஆம் நாள் ”சுதேசி நாவாயச் சங்கம் ” என்ற கப்பல் நிறுவனத்தை பதிவு செய்தார். வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மேலும், பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

1. சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் யார்?

சுதேசி நாவாயச் சங்கத்தை நிறுவியவர் வ.உ.சிதம்பரனார்.

2. வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?

வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது பாரதியாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்

3. வ. உ.சி. அவர்கள் யாருடைய பாடல்களை விரும்பிக் கேட்பார்?

வ. உ.சி. அவர்கள் பாரதியார் பாடல்களை விரும்பிக் கேட்பார்.

4. வ. உ. சி. அவர்களின் பன்முகத் தன்மைகள் யாவை?

  • வழக்கறிஞர்
  • எழுத்தாளர்
  • பேச்சாளர்
  • தாெழிற்சங்கத் தலைவர்

5. வ. உ. சி. அவரகள் புலமை பெற்றிருந்த மாெழிகள் யாவை?

வ.உ.சி. அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற்றிருந்தார்

(குறளின்பம், சுவைக்காத இளநீர், காப்பியச் சுவை, மனிதகுல மேன்மை, விடுமுறைநாள்)

1. குறளின்பம்

  • குறளின்பத்தில் திளைக்காத தமிழன் உண்டா?

2. சுவைக்காத இளநீர்

  • மனிதர்கள் சுவைக்காத இளநீர் உண்டோ?

3. காப்பியச் சுவை

  • நீ காப்பியச் சுவையை அறிந்துள்ளாயா?

4. மனிதகுல மேன்மை

  • இக்காலங்களில் மனிதகுல மேன்மை சிறப்புற உள்ளதா?

5. விடுமுறை நாள்

  • தேரோட்டம் அன்ற உள்ளூர் விடுமுறை நாள் என அறிவிக்கப்படுமா?

 

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள் பூ உண்டு. ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள்: ஆல மலர்; பலா மலர்.மலர் உண்டு; பெயரும் உண்டு; ஆனால் இதுதான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி, ஆலம், கொழிஞ்சி, பலா.பயன்பாடு, நாற்றம், மக்களது விருப்பில் இடம் பெறாமை, பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி, எருக்கு, பூளை, குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்

– கோவை.இளஞ்சேரன்

1. மலர் உண்டு; பெயரும் உண்டு – இரண்டு தொடர்களையும் ஒரு தொடராக்குக.

  • மலருக்கு பெயர் உண்டு

2. அரும்பாகி மொட்டாகிப் பூவாகி…. என்பதை ஒத்து அமைந்துள்ள தொடரைக் கண்டறிக.

  • மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒருவகை அரிசி தோன்றும்

3. நீங்கள் அறிந்த இரு பூக்களின் பெயர்களையும் பயன்களையும் எழுதுக.

பாதிரிப்பூ – குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும். உடல் நலத்தை பெருக்கி குளிர்ச்சியூட்டும்

முருங்கைப்பூ – இப்பூவைக் கசாயம் செய்து வாரம் இருமுறை குடிக்கவும். குடித்துவர நீரிழிவு நோய், நரம்புத்தளர்ச்சி நோய் நீங்கும். நினைவாற்றல் பெருகும்

4. அரிய மலர் – இலக்கணக் குறிப்புத் தருக.

அரிய மலர் – பெயரச்சம்

5. தொடரில் பொருந்தாப் பொருள்தரும் மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மறத்தின் மீதேறி அவற்றைப் பரித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மனத்தை ஏற்றும்

விடை – இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

 

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல ஊழிக் காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோது நெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத் தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக் காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாகிய ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக (வெள்ளத்தில் மூழ்குதல்) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

மீண்டும் மீண்டும்

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது

3. பெய்த மழை – இத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

பெய்மழை

4. இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பருப்பொருள்கள் சிதறுதல் (பெரு வெடிப்பு கோட்பாடு)

5. உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

நிலம், நீர், காற்று, நெருப்பு

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories