Blog

சமச்சீர்க் கல்வி

Old Syllabus

சமச்சீர்க் கல்வி

குற்றியலுகரம்‌

  1. நெடில்‌ தொடர்க்‌ குற்றியலுகரம்‌, 2. ஆய்தத்தொடர்க்‌ குற்றியலுகரம்‌, 3. உயிர்த்தொடர்க்‌ குற்றியலுகரம்‌, 4. வன்றொடர்க்‌ குற்றியலுகரம்‌, 5. மென்றொடர்க்‌ குற்றியலுகரம்‌, 6. இடைத்தொடர்க்‌ குற்றியலுகரம்‌ என அறுவகைப்படும்‌.

1.கு,சு,டு,து,பு,று என்பன வல்லினமெய்களின்மேல்‌ உகரம்‌ ஊர்ந்து வரும்‌ எழுத்துகள்‌.

2.குற்றியலுகரத்துக்கு அரை மாத்திரை.

3.ஈற்று அயலெழுத்தாகத்‌ தனிநெடில்‌, ஆய்தம்‌, உயிர்மெய்‌, வல்லினம்‌, மெல்லினம்‌. இடையினம்‌ ஆகியவற்றுள்‌ ஏதேனும்‌ ஒன்றனைப்‌ பெற்று வரும்‌.

4.நெடில்தொடர்க்‌ குற்றியலுகரம்‌ மட்டுமே இரண்டு எழுத்துகளைப்பெற்று வரும்‌.

(எ.கா) ஆடு, மாடு, காது.

ஏனைய ஐவகைக்‌ குற்றியலுகரச்‌ சொற்கள்‌ இரண்டனுக்கு மேற்பட்ட எழுத்துகளைப்‌ பெற்று வரும்‌.

(எ.கா;) சுக்கு, பாலாறு, காட்டாறு

“நெடிலோடு ஆய்தம்‌ உயிர்வலி மெலிஇடைத்‌

தொடர்மொழி இறுதி வன்மையூ ருகரம்‌

அஃகும்‌ பிறமேல்‌ தொடரவும்‌ பெறுமே” – நன்னூல்‌, 94

இலக்கியவகைச்‌ சொற்கள்‌

இலக்கிய வகையாலும்‌ சொற்கள்‌ நால்வகைப்படும்‌. அவை: 1. இயற்சொல்‌, 2. திரிசொல்‌, 3. திசைச்சொல்‌, 4. வடசொல்‌.

இயற்சொல்‌

எல்லாருக்கும்‌ பொருள்‌ விளங்கும்வகையில்‌ இயல்பாய்‌ அமைந்த தமிழ்ச்சொல்‌ இயற்சொல்‌ எனப்படும்‌. (தீ, காடு, மரம்‌ )

இது பெயர்‌ இயற்சொல்‌, வினை இயற்சொல்‌ என இருவகைப்படும்‌.

காற்று, நிலவு, – எளிதில்‌ பொருள்‌ விளங்கும்‌ பெயர்ச்சொற்கள்‌ இவற்றை பெயர்‌ இயற்சொற்கள்‌

படித்தான்‌, தூங்கினான்‌, வந்தான்‌ – இவை எளிதில்‌ பொருள்தரும்‌ வினைச்சொற்கள்‌. இவற்றை வினை இயற்சொற்கள்

திரிசொல்‌

கற்றவர்களுக்கு மட்டுமே விளங்கக்‌ கூடியனவாய்‌ இருக்கின்றன. இவற்றைத்‌ திரிசொல் என்பர்‌.

பீலி – மயில்தோகை; உகிர்‌ – நகம்‌; ஆழி – கடல்‌, சக்கரம்‌.

திரிசொல்லும்‌ பெயர்த்‌ திரிசொல்‌, வினைத்‌ திரிசொல்‌ என இருவகையாக வரும்‌. எயிறு, வேய்‌, மடி, நல்குரவு – என்பன பெயர்த்‌ திரிசொல்‌. (எயிறு – பல்‌; வேய்‌ – மூங்கில்‌; மடி – சோம்பல்‌; நல்குரவு – வறுமை.)

வினவினான்‌, விளித்தான்‌, நோக்கினார்‌ – இவை வினைத்‌ திரிசொல்‌. (வினவினான்‌ – கேட்டான்‌; விளித்தான்‌ – அழைத்தான்‌; நோக்கினார்‌ – பார்த்தார்‌).

திசைச்சொல்

தமிழ்நாட்டைச்‌ சுற்றியுள்ள பிறபகுதிகளிலிருந்து தமிழில்‌ வழங்கும்‌ சொற்கள்‌ திசைச்சொற்கள்‌. (கேணி – கிணறு; பெற்றம்‌ -பசு)

வடசொல்‌

தமிழில்‌ வந்து வழங்கினாலும்‌ தமிழ்ச்சொற்கள்‌ அல்ல, வடமொழிச்‌ (சமற்கிருதம்‌) சொற்கள்‌,

கமலம்‌ – தாமரை

விஷம்‌ (விடம்‌) – நஞ்சு

புஷ்பம்‌ (புட்பம்‌ ) – மலர்‌.        வடமொழிச்‌ சொற்கள்‌ திரிந்தும்‌ திரியாமலும்‌ தமிழ்மொழியில்‌ வந்து வழங்குமானால்‌ அவை வடசொல்‌ எனப்படும்‌

 

நளவெண்பா – புகழேந்திப்புலவர்‌ –  சுயம்வர காண்டம்‌

நிடதநாட்டு மன்னன்‌ நளன்‌, விதர்ப்பநாட்டு மன்னன்‌ மகள்‌ தமயந்தி ஆகிய இருவரும்‌ அன்னப்‌ பறவையின்‌ உதவியால்‌ ஒருவரைப்பற்றி ஒருவர்‌ அறிந்து அன்பு கொள்கின்றனர்‌. தந்‌தை வீமன்‌, தமயந்தியின்‌ நிலையறிந்து சுயம்வரத்துக்கு முறையாக ஏற்பாடு செய்தான்‌. தமயந்தியை மணக்க விரும்பிய தேவர்களும்‌, நளன்முதலான அரசர்களும்‌ சுயம்வரத்துக்கு வருகை தந்திருந்தார்கள்‌. தமயந்தி, நளன்‌ வடிவில்‌ வந்திருந்த தேவர்களை விடுத்துத்‌ தன்‌ அறிவுக்‌ கூர்மையால்‌ நிடத நாட்டு மன்னன்‌ நளனையே கணவனாகத்‌ தேர்ந்தெடுத்தாள்‌.

சுயம்வரம்‌ : தனக்கேற்ற மணமகனை உற்றார்‌ உறவினர்‌ முன்னிலையில்‌ தானே தேர்ந்தெடுத்தல்‌.

சுயம்வரத்துக்கு வந்த இளவரசர்களைத்‌ தோழி, தமயந்திக்கு அறிமுகம்‌ செய்தல்‌

  1. ஆழிவடி அம்புஅலம்ப நின்றானும்‌ அன்றொருகால்‌

ஏழிசைநூல்‌ சங்கத்(து) இருந்தானும்‌ – நீள்விசும்பின்‌

நல்தேவர்‌ தூது நடந்தானும்‌ பாரதப்போர்‌

செற்றானும்‌ கண்டாய்‌இச்‌ சேய்‌.

சொற்பொருள்‌ : ஆழி – கடல்‌; வடிஅம்பு – வடிக்கப்பட்ட அம்பு; விசும்பு – வானம்‌; செற்றான்‌ – வென்றான்‌.

  1. தெரியல்‌ இவன்கண்டாய்‌ செங்கழுநீர்‌ மொட்டை

அரவின்‌ பசுந்தலைஎன்‌ றஞ்சி – இரவெல்லாம்‌

பிள்ளைக்‌ குருகிரங்கப்‌ பேதைப்புள்‌ தாலாட்டும்‌

வள்ளைக்‌ குருநாடர்‌ மன்‌.

பொருள்‌ : செங்கழுநீர்‌ மலரினது மொட்டினைப்‌ பாம்பின்‌ தலை என எண்ணி, அச்சமுற்று இரவெல்லாம்‌ நாரைக்குஞ்சு வாய்விட்டு அலறுகிறது. அதனைத்‌ தாய்ப்பறவை தாலாட்டிக்‌ கொண்டிருக்கும்‌ வள்ளைக்கொடிகள்‌ மலிந்த குருநாட்டு மன்னன்‌ இவன்‌.

சொற்பொருள்‌ : அரவு – பாம்பு; பிள்ளைக்குருகு – க்குஞ்சு, வள்ளை – ஒ நீர்க்கொடி

  1. வண்ணக்‌ குவளை மலர்வெளவி வண்டெடுத்த

பண்ணில்‌ செவிவைத்துப்‌ பைங்குவளை – உண்ணாது

அருங்கடா நிற்கும்‌ அவந்திநாடு ஆளும்‌

இருங்கடா யானை இவன்‌.

பொருள்‌ : அழகிய குவளை மலர்களை எருமைக்கடாக்கள்‌ உண்ண முனைகின்றன. அப்பொழுது, அம்மலரில்‌ இருந்த வண்டுகள்‌ எழுப்பிய இன்னிசை கேட்டு, அவை உண்ணாமல்‌ மயங்கி நிற்கின்றன. அத்தகைய வளமுடைய அவந்தி நாட்டை ஆளும்‌ ஆண்யானை போன்றவன்‌ இவன்‌.

சொற்பொருள்‌ : கடா – எருமை; வெளவி – கவ்வி.

  1. கூன்சங்கின்‌ பிள்ளை கொடிப்பவளக்‌ கோடிடறித்‌

தேன்கழியில்‌ வீழத்‌ திரைக்கரத்தால்‌ – வான்கடல்வந்(து)

அந்தோ எனஎடுக்கும்‌ அங்கநாடு ஆளுடையான்‌

செந்தேன்‌ மொழியாய்‌இச்‌ சேய்‌.

பொருள்‌: தேன்போலும்‌ இனியமொழி பேசும்‌ தமயந்தியே! வளைந்த சங்கின்‌ குஞ்சுகள்‌, பவளக்கொடியின்‌ கொம்புகள்‌ தடுப்பதால்‌ தடுமாறித்‌ தேன்‌ வழிந்தோடும்‌ உப்பங்கழிகளில்‌ வீழ்கின்றன. அதனைக்‌ கண்டு மனமிரங்கிய கடலானது தன்‌ அலைக்கைகளால்‌ சங்குகளை அள்ளிவந்து கரை சேர்க்கின்றன. அத்தகைய அங்கநாட்டை ஆளும்‌ அரசன்‌ இவன்‌. (உப்பங்கழியில்‌ நெய்தல்‌ பூக்கள்‌ மலர்ந்திருகின்றன. அவற்றிலிருந்து தேன்வழிவதால்‌ தேன்கழி என்க.)

சொற்பொருள்‌ : சங்கின்‌ பிள்ளை – சங்குக்‌ குஞ்சுகள்‌; கொடி – பவளக்கொடி; கோடு – கொம்பு; கழி – உப்பங்கழி;

  1. வெள்வாளைக்‌ காளைமீன்‌ மேதிக்‌ குலமெழுப்பக்‌

கள்வார்ந்த தாமரையின்‌ காடுழக்கிப்‌ – புள்ளோடு

வண்டுஇரியச்‌ செல்லும்‌ மணிநீர்க்‌ கலிங்கர்கோன்‌

தண்தெரியல்‌ தேர்வேந்தன்‌ தான்‌.

பொருள்‌ : தேன்‌ சொரியும்‌ தாமரைத்தடாகத்தை எருமைகள்‌ கலக்குகின்றன; அதனால்‌, வெள்ளை நிறமுடைய இளம்‌ வாளைமீன்கள்‌ செந்தாமரைப்‌ பூக்கள்மேல்‌ பாய்கின்றன. அந்தத்‌ தாமரைமலர்களில்‌ இருந்த வண்டுகளும்‌ அன்னப்பறவைகளும்‌ அஞ்சிப்‌ பறக்கின்றன. அத்தகு தெளிந்த நீர்‌ வளமுடைய கலிங்கநாட்டின்‌ மன்னன்‌ இவன்‌.

சொற்பொருள்‌ : மேதி – எருமை; கள்‌ – தேன்‌; புள்‌ – அன்னம்‌.

  1. காவலரைத்‌ தன்சேடி காட்டக்கண்டு ஈரிருவர்‌

தேவர்நளன்‌ உருவாச்‌ சென்றிருந்தார்‌ – பூவரைந்த

மாசிலாப்‌ பூங்குழலாள்‌ மற்றவரைக்‌ காணாநின்‌

றூசலா டுற்றாள்‌ உளம்‌.

பொருள்‌ : சுயம்வர மண்டபத்தில்‌, குழுமிய அரசர்களின்‌ குலம்‌, புகழ்‌, பெருமைகளைத்‌ தோழி விளக்கிக்‌ கூறுகிறாள்‌. அதனைக்‌ கேட்ட, மலர்‌ சூடிய அழகிய கூந்தலையுடைய தமயந்தி, நளன்‌ உருவத்தில்‌ வீற்றிருந்த தேவர்கள்‌ நால்வரைக்‌ கண்டாள்‌. இவர்களில்‌ யார்‌ உண்மையான நளன்‌ எனத்‌ தடுமாறித்‌ தவித்தபடி நின்றாள்‌.

சொற்பொருள்‌ : கேடி – தோழி, ஈரிருவர்‌ – நால்வர்‌; ஊசலாடுற்றாள்‌ – மனம்‌ தடுமாறினாள்‌.

7. மின்னும்தார்‌ வீமன்தன்‌ மெய்ம்மரபில்‌ செம்மைசேர்‌

கன்னியான்‌ ஆகில்‌ கடிமாலை – அன்னம்தான்‌

சொன்னவனைச்‌ சூட்ட அருளென்றாள்‌ சூழ்விதியின்‌

மன்னவனைத்‌ தன்மனத்தே வைத்து.

பொருள்‌: “ஒளிசிந்தும்‌ அழகிய மாலையணிந்த வீமராசன்‌ குடியில்‌ தோன்றிய, உத்தமக்‌ கன்னிப்பெண்‌ நான்‌ என்பது உண்மையானால்‌, அன்னப்பறவை தூதாக வந்து முன்சொன்ன அந்த நளனுக்கே, மணமிக்க இம்மாலையை நான்‌ அணிவிக்க என்‌ நல்வினைப்பயனே எனக்குத்‌ துணை செய்வதாகுக” என்று நளனை மனத்தில்‌ நினைத்தபடி தமயந்தி வேண்டினாள்‌.

சொற்பொருள்‌ : தார்‌ – மாலை; செம்மைசேர்‌ – புகழ்மிகு; கடிமாலை – மணமாலை, சூழ்விதி – நல்வினை.

8. கண்இமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்

வண்ண மலர்மாலை வாடுதலால் – எண்ணி

நறுந்தா மரைவிரும்பும் நன்னுதலே அன்னாள்

அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு. *

பொருள்‌ : மணமிக்க தாமரை மலரில்‌ விரும்பி உறைகின்றாள்‌ திருமகள்‌. அவளைப்‌ போன்ற அழகிய நெற்றியை உடையவள்‌ தமயந்தி. அவள்‌, நளனின்‌ கண்‌ இமைத்தலாலும்‌ கால்நிலம்‌ தோய்தலாலும்‌ அழகுமாலை வாடுதலாலும்‌ ஆராய்ந்து, அவ்விடத்திருந்த உண்மையான நளனைக்‌ கண்டறிந்தாள்‌.

சொற்பொருள்‌ : காசினி – நிலம்‌; நன்னுதல்‌ – அழகிய நெற்றி.

  1. விண்‌அரசர்‌ எல்லாரும்‌ வெள்கி மனஞ்சுளிக்கக்‌

கண்அகல்‌ ஞாலம்‌ களிகூர – மண்‌அரசர்‌

வன்மாலை தன்மனத்தே சூட வயவேந்தைப்‌

பொன்மாலை சூட்டினாள்‌ பொன்‌.

பொருள்‌: விண்ணக வேந்தர்கள்‌ நாணத்தினால்‌ உள்ளம்‌ வெறுப்படையவும்‌, அகன்ற இவ்வுலகமெல்லாம்‌ மகிழ்வடையவும்‌, மண்ணரசர்‌ அனைவரும்‌ பகையுணர்வு கொள்ளவும்‌, வெற்றிவேந்தனாகிய நளனுக்குத்‌ தமயந்தி பொன்மாலையைச்‌ சூட்டினாள்‌.

சொற்பொருள்‌ : வெள்கி – நாணி; களிகூர – மகிழ்ச்சி பொங்க; வயவேந்து – வெற்றிவேந்தன்‌ (நளன்‌).

  1. திண்தோள்‌ வயவேந்தர்‌ செந்தா மரைமுகம்போய்‌

வெண்தா மரையாய்‌ வெளுத்தவே – ஒண்தாரைக்‌

கோமாலை வேலான்‌ குலமாலை வேற்கண்ணாள்‌

பூமாலை பெற்றிருந்த போது.

பொருள்‌ : ஒளிவீசும்‌ முத்துமாலையை அணிந்த வெற்றிவேலனாகிய நளனுக்கு, வேல்போலும்‌ கண்களையுடைய தமயந்தி மணமாலை சூட்டினாள்‌. அப்போது, சுயம்வரத்துக்கு வந்திருந்த வலியதோள்களையுடைய வேந்தர்களின்‌ செந்தாமரை மலர்போலும்‌ முகங்கள்‌ வெண்தாமரை மலர்போல ஏமாற்றத்தால்‌ வெளுத்தன.

சொற்பொருள்‌ : ஒண்தாரை – ஒளிமிக்க மலர்மாலை.

11. மல்லல்‌ மறுகில்‌ மடநா(கு) உடனாகச்‌

செல்லும்‌ மழவிடைபோல்‌ செம்மாந்து – மெல்லியலாள்‌

பொன்மாலை பெற்றதோ ளோடும்‌ புறப்பட்டான்‌

நன்மாலை வேலான்‌ நளன்‌.

சொற்பொருள்‌ : மல்லல்‌ – வளம்‌; மறுகு – அரசவீதி; மடநாகு – இளைய பசு; மழவிடை – இளங்காளை; செம்மாந்து- பெருமிதத்துடன்‌ .

ஆசிரியர்‌ குறிப்பு

பெயர்‌ : புகழேந்திப்புலவர்‌.

பிறந்த ஊர்‌ : தொண்டைநாட்டின்‌ பொன்விளைந்த களத்தூர்‌.

சிறப்பு          :வரகுண பாண்டியனின்‌ அவைப்‌ புலவர்‌.

ஆதரித்தவள்ளல்‌ :  சந்திரன்சுவர்க்கி.

காலம்‌: கி.பி. பன்னிரண்டாம்‌ நூற்றாண்டு. கம்பரும்‌ ஒட்டக்கூத்தரும்‌ இவர்‌ காலத்தில்‌ வாழ்ந்தனர்‌. வெண்பா யாப்பில்‌ காப்பியப்‌ பொருளைத்‌ தொடர்நிலைச்‌ செய்யுள்களாய்ப்‌ பாடிய சிறப்பினால்‌, இவர்‌ வெண்பாவிற்‌ புகழேந்தி எனப்‌ போற்றப்படுகிறார்‌.

நூல்‌ குறிப்பு : நளவெண்பா என்பது, நளனது வரலாற்றை வெண்பாக்களால்‌ கூறும்‌ நூலென விரிந்து பொருள்‌ தரும்‌. இந்நூல்‌ சுயம்வர காண்டம்‌, கலிதொடர்‌ காண்டம்‌, கலிநீங்கு காண்டம்‌ என முப்பெருங்‌ காண்டங்களைக்‌ கொண்டது. இதில்‌ நானூற்று முப்பத்தொரு வெண்பாக்கள்‌ உள்ளன.

பாரிசு நகரைச்‌ சார்ந்த பிளேஸ்‌ பாஸ்கல்‌ என்னும்‌ அறிஞர்‌ கணக்கிடும்‌ கருவியைக்‌ கண்டறிந்தார்‌.

கி.பி. 1833 இல்‌ இங்கிலாந்து நாட்டைச்‌ சார்ந்த சார்லஸ்‌ பாப்பேஜ்‌ கணினியை முதலில்‌ வடிவமைத்தார்‌. இவரே “கணினியின்‌ தந்‌தை” என அழைக்கப்படுகிறார்‌.

ஆங்கிலக்‌ கவிஞர்‌ பைரனின்‌ மகள்‌ “ லேடி லவ்லேஸ்‌” என்பவர்‌, கணிதச்‌ செயல்பாட்டுக்குத்‌ தேவையான கட்டளைகளை வகுத்தமையால்‌, ‘முதல்‌ செயல்‌ திட்ட வரைவாளர்‌’ எனப்‌ போற்றப்படுகிறார்‌.

கணிதப்‌ பேராசிரியர்‌ ஹோவார்டு ஜக்கன்‌ என்பாரை ஐ.பி.எம்‌. பொறியாளர்‌ துணையுடன்‌ எண்ணிலக்கக்‌ கணினியைக்‌ கண்டறியத்‌ தூண்டியது. இதற்கு ஹார்வார்டு மார்க்‌-1 எனப்‌ பெயரிட்டனர்‌.

இணையம்‌ என்னும்‌ வடிவத்துக்கு வித்திட்டவர்‌ ஜான்‌ பாஸ்டல்‌ என்னும்‌ அமெரிக்கராவார்‌.

ஈதர்நெட்‌ அட்டை குறும்பரப்பு வலைப்பின்னல்‌’ எனப்பட்டது.

சுவிச்சர்லாந்து நாட்டைச்‌ சார்ந்த பிம்பெர்னர்‌ லீ என்னும்‌ இயற்பியல்‌ வல்லுநர்‌, 1989ஆம்‌ ஆண்டு இணையத்தளத்திற்கு உலகளாவிய வலைப்பின்னல்‌ எனப்‌ பெயரிட்டார்‌. இதனை வையக விரிவு வலை எனவும்‌ அழைக்கலாம்‌.

பக்கிம்‌ சந்திரர்‌ என்பவர் எழுதிய நூல்தான்‌ ஆனந்தமடம்‌. அந்த நூலில்‌ இடம்‌ பெற்ற புகழ்பெற்ற பாடல்தான்‌ வந்தே மாதரம்‌.

கடிகாரத்தின்‌ பெண்டுலத்தை – ஊசலை -அமைத்து நேரத்தைக்‌ கணக்கிடவும் ஊசல்‌ விதி கண்டுபிடித்த கலீலியோ.

பால்வீதி என்பது பலகோடி விண்மீன்களின்‌ தொகுதி என மெய்ப்பித்தார்‌ கலீலியோ. சூரியனைப்‌ பூமியும்‌ பிற கோள்களும்‌ சுற்றி வருகின்றன. இவர்‌, சூரியன்‌ நகருவதாகத்‌ தோன்றுவது பூமியின்‌ சுழற்சியினால்தான்‌ என்னும்‌ கருத்தை மெய்ப்பித்தார்‌.

அறிஞர்‌ கோபர்நிகசு கூறிய கருத்தானது, அண்டத்தின்‌ மையம்‌ பூமியன்று, சூரியனே.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories