சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்;
July 31, 2025 2025-07-31 7:23சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்;
சமூகநீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்;
1967இல் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்தது. சி.என்.அண்ணாதுரை முதல்வராக பதவி ஏற்றார். அவரது ஆட்சியில் இந்து திருமணச் சட்டம் திருத்தப்பட்டு ‘சுயமரியாதை திருமணங்கள்’ அதாவது மத சடங்குகள் இல்லாமல் மேற்கொள்ளப்படும் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டன.
அவருக்கு அடுத்து பதவி ஏற்று, ஐந்து தடவைகள் முதல் அமைச்சராக பதவி வகித்த மு.கருணாநிதி பல சட்டங்களையும் எண்ணற்ற தீர்மானங்களையும் கொண்டு வந்துள்ளார். அவர் கொண்டு வந்த கடைசி சட்டமுன்வரைவு பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டுக்குள் முஸ்லீம்களுக்கும் சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்குவதுடன் பட்டியல் இனங்களுக்கும் மற்றும் பழங்குடியினருக்குமான ஒதுக்கீட்டின் கீழ் அருந்தியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குகிறது.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றகழகத்தின் எம்.ஜி.இராமச்சந்திரன் தலைமையிலான பத்து ஆண்டுக்கால ஆட்சியில் (1977-1987) வருவாய் நிர்வாக துறையில் குறிப்பிடத்தக்க பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக, வாரிசு அடிப்படையில் கிராம நிர்வாக அலுவலரான “கர்ணம்” பதவிக்கு முடிவு கட்டினார். மதிய உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தி சத்துணவுத் திட்டமாக மேம்படுத்தினார்.
1992 நவம்பரில் உச்ச நீதிமன்றம் மண்டல் ஆணையம் வழக்கில் தீர்ப்பு வழங்கியது. அதில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில், பிற்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீட்டினை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு மாநிலச் சட்டமன்றம் கூட்டப்பட்டு 69 சதவீதம் ஒதுக்கீடு சட்டம் கொண்டு வரப்பட்டது.