Blog

சித்தர் பாடல்கள்

789
Old Syllabus

சித்தர் பாடல்கள்

பாடல் குறிப்பு
  • சுமார் நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடுமலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
  • பாம்பாட்டிச்சித்தர், குதம்பைச் சித்தர், அழுகிணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப்பெயர்கள்.
  • காடுவெளிச்சித்தர், உருவ வழிபாடு செய்யாமல் வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்; எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்
  • சிறப்பாக நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் கூறுகளையும், இலக்கியங்களையும், கலைகளையும் ஆராய்வது நாட்டுப்புறவியல் எனலாம்.
பதினெண் சித்தர்
  • தமிழ்நாட்டில் எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்தனர்; வாழ்ந்து வருகின்றனர்.
  • இவர்கள் மருத்துவம், மந்திரம், இரசவாதம், யோகம், ஞானம் பற்றி உலக வழக்குச் சொற்களைக் கொண்டு நாட்டுப்புறப்பாடல் மரபில் பாடியுள்ளார்.
  • இவற்றில் மேற்போக்கான பொருள் ஒன்றாகவும் உட்பொருள் ஒன்றாகவும் இருக்கவும். திருமூலரே முதற்சித்தர் எனப் போற்றப்படுகிறார்.
  • சித்த மருத்துவத்தின் முன்னோடிகள் சித்தர்களே. இவர்களை அக்கால அறிவியல் அறிஞர்கள், இயற்கை நிபுணர்கள் எனக் கூறலாம்.
  • சித்தர்களின் தலைவராக அகத்தியர் விளங்கினார், சித்தர்களில் மிகுந்த சீர்திருத்தவாதி சிவவாக்கியர்
  • அகத்தியர், பலத்தியர், புகண்டர், நந்தி, திருமூலர், காலங்கிநாதனர், போகர், கொங்கணர், உரோம்முனி, சட்டைமுனி, மச்சமுனி, கரூரார், தன்வந்திரி, தேரையூர், பிண்ணாக்கீசர், கோரக்கர் யூசிமணி, இடைகாடர்.
  • இவர்களைத் தவிர பாம்பாடடிச்சித்தர், அகப்பேயச்சித்தர், கடுவெளிச்சித்தர், அழுகிணிச் சித்தர், சிவவரக்கியார் போன்றோர்கள் சித்தர்களாக விளங்கி உலக நிலையாமை, மூடநம்பிக்கை, ஒழிப்பு, சடங்கு ஆசாராங்களை வெறுத்தல் என்ற புரட்சிகரமான கருத்துகளை உலகிற்கு வழங்கினார்.
  • பத்திரகிரியாரின் பாடல்கள் “மெய்ஞஞானப் புலம்பல்” மிகவும் சிறந்தவை. அழுகிணிச் சித்தரின் பாடல்கள் உள்ளத்தை உருக்குபவை.
  • கடவுளைக் காண முயல்பவர்கள் பத்தர்கள் கண்ட தெளிந்தவர்கள் சித்தர்கள் என்று தேவாரம் கூறுகிறது.
  • சித்தர்களின் பஞ்சமர் (ஐவர்) என்று குறிப்பிடப்படுவார்கள்
1. திருமூலர்
2. சிவவாக்கியர்
3. பட்டினத்தார்
4. திருமாளிகைத் தேவர்
5. கருவூரார்
  • சித்தர் பாடல்கள் மக்கள் இலக்கியம் என்ற போற்றப்படுகிறது
கோணக்காத்துப் பாட்டு – கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி – சித்தர்கள் வாழும் மலை கொல்லிமலை. அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் புல் அடித்தது.
உருமங்கட் டியமுகிலால் – கோணக்காத்து
உழன்று உழன்றுமெத்த அடித்ததினால்
பெரிதான வீடுகளெல்லாம் – கோப்புடனே
பிரிந்தும் கூரைத்தட்டுச் சரிந்ததங்கே
சிங்காரமாய் வாங்கல்நகரில் – வைத்திருந்த
தென்னம்பிள்ளை அத்தனையும் வின்னமாச்சுதே
மங்காத காங்கயநாட்டில் – மேட்டுக்காட்டில்
மாளாத பருத்திஎல்லாம் கோலாகப்போச்சுதே
ஆரங்கள்வைத்த சுவரெல்லாம் – மெத்தைவீடு
அடியோடே விழுந்ததங்கே கெடிகலங்கித்
தாரங்களும் பிள்ளைகளுடன் – கூட்டிக்கொண்டு
தானடந்து வேகமுடன் கூகூவென்றார்
வாகுடனே தொண்டைமான்சீமை – தன்னிலே
வளர்ந்தோங்கும் மாநகரம் தன்னிலேதானே
சேகரமாய் வைத்தமரங்கள் – அத்தனையும்
சின்னபின்ன மாய்ஒடிந்து பின்னமாச்சுதே
சம்பிரமுடன் கப்பல்களெல்லாம் – கடலிலே
தானடந்து வேகமுடன் வரும்போதிலே
கொம்புசுத்திக் கோணக்காத்து – காலனைப்போல்
கோணமழை வந்துகப்பல் தான்கவிழ்ந்ததே
ஆர்க்காடு மைசூர்வரைக்கும் – கோணக்காத்து
அலறி அலறிமெத்த அடித்ததனால்
மார்க்கமான சாலையில்போன – சனங்களெல்லாம்
மயங்கி மயங்கிமெத்தத் தவித்தார்களே
தெத்துக்காடு காளப்பநாயக்கன் – பட்டியிலே
செத்திறந்த ஆடுமாடு மெத்தவுண்டாம்
சித்தர்கள் பொருந்திவாழும் – கொல்லிமலை
சேர்ந்திருந்த நாடெல்லாம் காத்தடிச்சுதே
இப்படிக்கிச் சேதங்களானால் – குமரேசா
எப்படிப் பிழைத்துநாங்கள் ஒப்பிதமாவோம்
மெய்ப்புடன்வே லாயுதங்கொண்டு – வருகின்ற
விக்கினமெல் லாம்தீர்த்துக் காத்திடீரையா
– வெங்கம்பூர் சாமிநாதன்
நூல்வெளி
நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மக்கள் பட்ட துயரங்களை அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கும்மிப் பாடல்களாக பாடினர்.
பேச்சுத் தமிழில் அமைந்த இவை பஞ்சக்கும்மிகள் என்று அழைக்கப்பட்டன.
புலவர் செ.இராசு தொகுத்த பஞ்சக் கும்மிகள் என்னும் நூலில் இடம்பெற்றுள்ள வெங்கம்பூர் சாமிநாதன் இயற்றிய கோணக்காத்துப் பாட்டு என்னும் காத்து நொண்டிச் சிந்திலிருந்து சில பாடல்கள் இங்குத் தரப்பட்டுள்ளன

 

சித்தர்‌ பாடல்‌

வைதோரைக்‌ கூட வையாதே – இந்த

வைய முழுதும்‌ பொய்த்தாலும்‌ பொய்யாதே!

வெய்ய வினைகள்‌ செய்யாதே – கல்லை

வீலரில்‌ பறவைகள்‌ மீதில்‌ எய்யாதே!

பாம்பினைப்‌ பற்றி ஆட்டாதே – உன்றன்‌

பத்தினி மார்களைப்‌ பழித்துக்‌ காட்டாதே!

வேம்பினை உலகில்‌ ஊட்டாதே – உன்றன்‌

வீறாப்பு தன்னை விளங்க நாட்டாதே !

போற்றும்‌ சடங்கை நண்ணாதே – உன்னைப்‌

புகழ்ந்து பலரில்‌ புகலல்‌ ஒண்ணாதே!

சாற்றும்முன்‌ வாழ்வை எண்ணாதே – பிறர்‌

தாழும்‌ படிக்குநீ தாழ்வைப்‌ பண்ணாதே!

கள்ள வேடம்‌ புனையாதே – பல

கங்கையிலே உன்கடம்‌ நனையாதே !

கொள்ளை கொள்ள நினையாதே – நட்புக்‌

கொண்டு பிரிந்துந்‌ கோள்முனையாதே !                        – கடுவெளிச்‌ சித்தர்‌

 

பாடல்பொருள்‌

உன்னை வைதவரைக்கூட நீ வையாதே; இந்த உலகத்தில்‌ எல்லாம்‌ பொய்யாகப்‌ போனாலும்‌ நீ பொய்‌ சொல்லாதே; பிறர்க்குத்‌ துன்பம்‌ தரும்செயல்களைச்‌ செய்யாதே; கல்லெறிந்து பறவைகளைத்‌ துன்புறுத்தாதே ! பாம்போடு விளையாடாதே! பெண்களைப்‌ பழித்துப்‌ பேசாதே! பிறரிடம்‌ கசப்பான சொற்களைப்‌ பேசாதே! உன்‌ இறுமாப்பைப்‌ பிறர்க்குக்‌ காட்டாதே! பிறர்‌ கொண்டாடிச்‌ செய்யும்‌ சடங்குகளை நீயும்‌ செய்யாதே! உன்னைப்‌ புகழ்ந்து பேச, பிறர்‌ வீடுகளுக்குச்‌ செல்லாதே; உன்‌ வாழ்வைப்‌ போற்றி நீ பெரிதாக எண்ணாதே! பிறருக்கு இழிவை உண்டாக்கும்‌ தாழ்வான செயல்களைச்‌ செய்யாதே! போலி வேடங்களைப்‌ போடாதே! புண்ணிய ஆறுகளைத்‌ தேடித்தேடிப்‌ போய்‌ முழுகாதே!யாருடைய பொருளையும்‌ திருட நினைக்காதே ! ஒருவனோடு நட்புக்கொண்டு பிறகு அவனைப்‌ பிரிந்து, அவனைப்‌ பற்றிப்‌ பிறரிடம்‌ கோள்மூட்டிப்‌ பேசாதே!

சொல்பொருள்‌

வெய்யவினை – துன்பம்‌ தரும்‌ செயல்‌

வேம்பு – கசப்பான சொற்கள்‌

வீறாப்பு – இறுமாப்பு

பலரில்‌ – பலர்‌ + இல்‌, பலருடைய வீடுகள்‌

புகலல்‌ ஒண்ணாதே – செல்லாதே

சாற்றும்‌ – புகழ்ச்சியாகப்‌ பேசுவது

கடம்‌ – உடம்பு

பாடல்‌ குறிப்பு

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்குமுன்‌ தமிழகத்தின்‌ காடு மலைகளில்‌ வாழ்ந்தவர்கள்‌ சித்தர்கள்‌. பாம்பாட்டிச்‌ சித்தர்‌, குதம்பைச்‌ சித்தர்‌, அழுகுணிச்‌ சித்தர்‌ என்பன எல்லாமே காரணப்‌ பெயர்கள்‌.

கடுவெளிச்‌ சித்தர்‌. இவர்‌, உருவ வழிபாடு செய்யாமல்‌ வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்‌; எளிய சொற்களில்‌ அறிவுரைகளைக்‌ கூறியவர்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories