சிறந்த தொடர்கள்
October 6, 2023
2025-01-11 13:57
சிறந்த தொடர்கள்
-
கம்பராமாயணம் சிறந்த தொடர்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகிறது.
-
இராமன் தனக்குப் பதவி கிடைக்கிறது என நயக்கவும் இல்லை. கிடைக்காத போது வெறுக்கவுமில்லை. இரண்டு நிலையிலும் அவவன்முகம் செந்தாமரை போல் மலர்ந்தே விளங்கியது.
“இப்பொழு தெம்மனோரால் இயம்புதற் கெளிதோ? யாரும்
செப்பருங் குணத்திராமன் திருமுகச் செவ்வி நோக்கின்
ஒப்பதே முன்பு பின்பு அவ்வாசகம் உணரக் கேட்ட
அப்பொழுது, அலர்ந்த செந்தா மரையினை வென்றதம்மா!”
|
-
சீதை அயலவன் நாட்டில் காவலில் இருந்த போதும் கற்பும் பொற்பும் விளங்குமாறு பொறுமையுடன் இராமன் வரவு நோக்கிக் காத்திருந்தாள். இதைக் கண்டு வந்த அனுமன் இராமனிடம் தன் சொல்லாற்றல் தோன்றச் சீதையைப் புகழந்துரைத்தான்.
விற்பெருந் தடந்தோள் வீர
வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெரும் தவத்தள் ஆய
நங்கையைக் கண்டேன் அல்லேன்
இற்பிறப்பு என்பது ஒன்றும்
இரும்பொறை என்பது ஒன்றும்
கற்புஎனும் பெயரது ஒன்றும்
களிநடம் புரியக் கண்டேன்
|
-
இக் கதையில் எதிர்த் தலைவனாக வரும் இராவணன் எல்லா நலன்களும் வாய்ந்திருந்தும் அயன்மனை நயத்தலாகிய குற்றத்திற்கு ஆட்பட்டிருந்தான். இதை அவன் தம்பியாகிய கும்பகர்ணன் வாயிலா இடித்துரைக்கச் செய்வார் கம்பர்.
-
“அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்”
ஆசில்பர தாரம் அவை அஞ் சிறை அடைப்போம்
மாசில்புகழ் காலுறுவேம் வளவை கூறப்;
பேசுவது மானம் இடைபேணுவது காமம்
கூசுவது மானுடரை நன்றுநம கொற்றம்
|
-
இத்தகைய இராவணனும் முதற்போரில் தோற்றவிடத்து நானம் கொண்டு கூனிக் கொண்டு கூனிக் குறுவதை எவ்வளவு நயமாக காட்டுகிறார் கம்பர்
வான் நகும் மண்ணும் எல்லாம் நகும் நெடுவயிரத்
நான்நகு பகைஞர் எல்லாம் நகுவர் என்ற அதற்கு நாணான்
வேல்தகு நெடுங்கண், செவ்வாய் மெல்லியல் மதிலை வந்த
சானிகி நகுவள் எனறே நாணத்தால் சாம்புகின்றான்.
|
-
இராமன் , குகன், சுக்கீரிவன், வீடணன் மூவரையும் தன் தம்பிகளாகவே ஏற்றுக் கொண்டமை பற்றிக் கம்பர் தொடர்ந்து பாடி வரும் அழகு சமத்துவக் கோட்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாகும். திருமங்கையாள்வாரின் கற்பனையிலிருந்து இதனைக் கம்பர் வளர்த்துத் தந்துள்ளார்.
குகனொடும் ஐவர் ஆனேம்
முன்பு; பின், குன்று சூழ்வான்
மகனொடும், அறுவர் ஆனேம்;
எம் உழை அன்பின் வந்த
அகன் அமர் காதல் ஐய!
நின்னொடும் எழுவர் ஆனேம்;
புகலருங் கானம் தந்து,
புதல்வரால் பொலிந்தான் நுந்தை
|
என்று கூறுவதிலிருந்து இதையுணரலாம்.
-
மிதிலைக் காட்சி, அங்கதன் அடைக்கலம், மாயாசனகப் படலம், தாரையின் விதவைக்கோலம், சீதையை பர்ண சாலையுடன் இராவணன் தூக்சிச் சென்றமை யாவும் வான்மீகத்த்தில் இல்லாமல் கம்பர் கதைச் சுவைக்காகவும், தமிழர் பண்பாட்டுச் சிறப்புக்காகவும் புகுத்தியன என்பர்
வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரை இலாமையால்
ஓண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்
|
-
என வரும் பல பகுதிகள் கம்பரின் கற்பனைத் திறனை மட்டுமின்றிக் குறிக்கோள் நோக்கினையும் புலப்படுத்தும்.
-
உணர்ச்சிக்கேற்ற நடை என்பதில் கம்பர் யாவரையும் விஞ்சி நிற்கிறார். கம்பர் சொற்களைப் பின்னுகிறார் என்பதை விட கருத்துகளை நெய்கிறார் என்பதை விட உணர்ச்சிகளையே குழைத்து உருவாக்குகிறார் என்ற கூறலாம். தமிழ் மொழியைக் கையாள்வதில் அவர் பெருவெற்றி பெற்றுத் திகழ்கிறார். பாட்டின் ஓசையிலும் நடையிலும்வைத்து மாந்தர் நடையை அவர் உணரந்த்தும் திறம் ஒன்றையுணர்தாலே விருத்தமெனும் ஒண்பாவிற்கு உயர் கம்பன் என்ற உண்மை புலப்படும்.
-
கம்பராமயணத்தில் தாழ்ந்த குலத்தை சார்ந்த குகனைத் தனது தம்பியாக இராமன் ஏற்றுக்கொண்டு பேசும் பாடல் சிறப்பான ஒன்று
துன்புள தெனின் அன்றோ சுகமுளது அதுவன்றிப்
பின்புள திடைமன்னும் பிரிவுளதென உன்னேல்
முன்புளெம் ஒருநால்வேம் முடிவள தென உன்னா
அன்புள இனிநாம ஒர் ஐவர்கள் உளரானோம்
|
-
என ராமன் தனது சகோதர்களைப் பட்டியலிடுவது சிறப்புடைய பாடலாகும்.
-
அசோகவனத்தில் சீதையைக் கண்டு திரும்பும் அனுமன் இராமனிடம் திரும்பி வந்து “கண்டனென் கற்பினுக் கணியை” என உரைக்கும் ஆற்றலும் அவர் “சொல்லின் செல்வன்” என அழைக்கப்படுவதும் சிறப்புடைய ஒன்றாகும்.
-
“தாதுகு சோலை தோறும் சண்பகக் காடுதோறு
…………………………….. உலாய தன்றே” – கம்பர்
பூகம் – கமுகம் (பாக்குமரம்)
போது – மலர்
போதவிழ் – போது + அவிழ்
தாது – மகரந்தம்
பொய்கை – குளம்
-
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பாயும் சரயு நதியின் வளம் இதில் கூறப்பட்டள்ளது
கம்ப இராமாயணம் – அயோத்திய காண்டம் – (ஏழாம் படலம் இது) – குகப்படலம் (அ) கங்கைப்படலம்
மேற்கோள்
10ஆம் வகுப்பு
கல்வியும் செல்வமும் பெற்ற பெண்கள், விருந்தும் ஈகையும் செய்வதாகக் கம்பர் குறிப்பிட்டுள்ளார்.
“பொருந்து சொல்வமும் கல்வியும் பூத்தலால்
வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும்
விருந்தும் அன்றி விளைவன யாவையே”
|