சிற்பம்
October 27, 2023
2025-01-11 13:56
சிற்பம்
சிற்பக் கலை வடிவமைப்புகள் நான்கு வகைப்படும்.
-
குடைவரைக் கோயில்கள்
-
கட்டுமானக் கோயில்கள்
-
ஒற்றைக் கல் கோயில்கள்
-
புடைப்புச் சிற்பங்கள்
-
இந்த நான்கு வகைகளும் காணப்படும் ஒரே இடம் மாமல்லபுரம்.
-
அர்ச்சுனன் தபசு என்றும் பாறையில் உள்ள மனிதர்கள், விலங்குகள், பறவைகள் போன்ற சிறப்பங்கள் உயிருள்ளவற்றை நேரில் பார்ப்பது போல் அழகாக உள்ளன. இவற்றிற்கு புடைப்பு சிற்பங்கள் என்று பெயர்.
-
பல்லவ மன்னன் நரசிம்மவர்மன் மற்போரில் சிறந்தவன். அதனால் மாமல்லன் என்னும் பெயர் அழைக்கப்பட்டான்.
-
பல்லவ அரசன் நரசிம்மன் ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
-
இடப்பக்கத்திலிருந்து பார்த்தால், காளையின் உருவம் தெரியும் வலப்பக்கத்திலிருந்து பார்த்தால், யானையின் உருவம் தெரியும் இது ஐராவதீசுவரர் கோவில் உள்ளது. நூறு கோவில்களுக்குச் சென்று கண்ட சிற்பங்களின் பேரழகைப் பார்த்து மகிழ்ந்த அனுபவத்தை இந்த ஒரே கோவில் நமக்குத் தருகிறது.
- காவிரி பாயும் சோழவள நாடு. அது கலைகளின் விளைநிலம். வியக்கவைக்கும் கட்டடக்கலையும் சிற்பக்கலையும் கொழிக்கும் ஊர் கும்பகோணம். இவ்வூரின் தென்புறம் அரிசிலாறு பாய்கிறது. இதன் தென்கரையில் தாராசுரம் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கேதான். ஐராவதீசுவரர் கோவில் உள்ளது. இஃது ஏறத்தாழ எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் இராசராச சோழனால் கட்டப்பட்டது.
-
ஐராவதீசுவரர் கோவிலின் நுழைவாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள் “சரிகமபதநி” என்னும் ஏழு நாதப்படிகளாக வடிக்கப்பட்டுள்ளன. சோழ மண்டலத்துக்குள் நுழைந்தாலே, எங்கும் இசையொலி, “தாம்தரிகிட தீம்தரிகிட” என்னும் மத்தள லய ஒலி, வீணையின் மிட்டொலி, புல்லாங்குழலின் கான ஒலி, நாகசுர நல்லொலி என இசைமழையில் நனையும் அனுபவம் நமக்குக் கிடைக்கிறது.
- தாராசுரம் கோவிலின் கூம்பிய விமானத் தோற்றமும், அதற்குக் கீழே இருபுறமும் யானைகளும் குதிரைகளும் பூட்டிய இரதம்போல் அமைந்த மண்டபமும் வான்வெளி இரகசியத்தைக் காட்டுவதாகக் கார்ல் சேகன் (carl segon) என்ற வானவியல் அறிஞர் கூறுவது குறிப்பிடத்தக்கதாகும்.