9TH BOOK BOX POINT
March 26, 2025 2025-04-24 6:529TH BOOK BOX POINT
9TH BOOK BOX POINT
“இனிமையும் நீர்மையும் தமிழெனல் ஆகும்” – பிங்கல நிகண்டு
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்” – பாரதியார்
உலகத் தாய்மொழி நாள் – பிப்ரவரி 21
உலக சுற்றுச்சூழல் நாள் – ஜூன் 5
“மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” – இளங்கோவடிகள்
“நீரின்று அமையாது உலகம்” – திருவள்ளுவர்
இந்திய நீர் பாசனத்தின் தந்தை – சர் ஆர்தர் காட்டன்
சர் ஆர்தர் காட்டன் 1873-ல் கேதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்
முல்லை பெரியாறு அணையை ஜான் பென்னி குவிக் கட்டியுள்ளார்
கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டியவர் சர் ஆர்தர் காட்டன்.
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே! ( புறம் – 18)
உண்பது நாழி உடுப்பவை இரண்டே ! (புறம் – 189)
யாதும் ஊரே யாவரும் கேளிர் ! ( புறம் – 192 )
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே!
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே ! ( புறம் – 312 )
உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்,
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ! ( புறம் – 183 )
எழுந்தது துகள்,
ஏற்றனர் மார்பு
கவிழ்ந்தன மருப்பு,
கலங்கினர் பலர் – (கலி – 102: அடி 21-24)
நீறு எடுப்பவை, நிலம் சாடுபவை,
மாறுஏற்றுச் சிலைப்பவை, மண்டிப் பாய்பவையாய்
துளங்கு இமில் நல்ஏற்றினம் பல களம்புகும்
மள்ளர் வனப்பு ஒத்தன – (கலி – 106: அடி 7-10)
அறம் எனப்படுவது யாதெனக் கேட்பின்
மறவாது இதுகேள்! மன்னுயிர்க் கெல்லாம்
உண்டியும் உடையும் உறையுளும் அல்லது
கண்டது இல். – (மணிமேகலை 25: 228 – 231)
பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வரும் இலக்கியங்கள் அடிகள்.
பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்
சிலப்பதிகாரம் “மகத தன்நாட்டு வாளவாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” (காதை 5, அடி 102)
மணிமேகலை “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” (காதை 1, அடி 16)
திருவாசகம் “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” (சதகம் 41)
கம்பராமாயணம் “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” (பாலகாண்டம், நகரப் படலம் 154)
NTSE – National Talent Search Examination 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு (NTSE) தேர்வு என்பது அரசாங்கத்தின் தேசிய அளவிலான உதவித்தொகை திட்டமாகும்.
NMMS – National Means Cum-Merit Scholarship 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு (NMMS) தேசியத்திறனாய்வு மற்றும் கல்வி உதவித் தொகைத் தேர்வு.
TRUST – Tamilnadu Rural Students Talent Search Examination 9-ம் வகுப்பு கிராமப் பள்ளி மாணவர்களுக்கு (TRUST) ஊரகத் திறனாய்வுத் தேர்வு.
புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி – புறநானூறு
அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத்தால் தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி,“ ஓர்
எந்திர வூர்திஇ யற்றுமின்” என்றான். – சீவக சிந்தாணி
சங்க கால பெண்பாற் புலவர்களின் பெயர்கள்
- ஔவையார்
- ஒக்கூர் மாசாத்தியார்,
- ஆதிமந்தியார்
- வெண்ணிக் குயத்தியார்
- பொன்முடியார்
- அள்ளூர் நன்முல்லையார்
- நக்கண்ணையார்
- காக்கைப்பாடினியார்,
- வெள்ளிவீதியார்
- காவற்பெண்டு
- நப்பசலையார்
பெண்கள் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத் திருமணம். எனவே அதைத் தடுக்க 1929-ம் ஆண்டு சாரதா சட்டம் போடப்பட்டது.
ஈ.வெ.ரா. – நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் பட்டமேற்படிப்பிற்கு உரியது.
சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் – கல்வி, திருணம உதவித் தொகை ஆகியவற்றுடன் தொடர்புடையது.
அனைத்து நிலையிலும் மகளிர் கல்வியை வலியுறுத்தி கோத்தாரி கல்விக் குழு (1964) உருவாக்கப்பட்டது.
நீலாம்பிகை அம்மையார் (1903-1943)
- மறைமலையடிகளின் மகள் ஆவார். தந்தையைப் போலவே தனித்தமிழ்ப் பற்றுடையவர். இவரது தனித்தமிழ்க் கட்டுரை, வடசொல் – தமிழ் அகரவரிசை, முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர் ஆகிய நூல்கள் தனித்தமிழில் எழுத விரும்புவோர்க்கு மிகவும் பயனுள்ளனவாக விளங்குகின்றன.
ஈ.த. இராஜேஸ்வரி அம்மையார்(1906-1955)
- தமிழ், இலக்கியம், அறிவியல் ஆகிய துறைகளிலும் சிறந்து விளங்கினார். திருமந்திரம், தொல்காப்பியம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்துச் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியாகப் பணியாற்றினார். சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்.
முத்துலெட்சுமி
- தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர். இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர். சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர். சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி.
- தேவதாசிமுறை ஒழிப்புச் சட்டம், இருதார தடைச்சட்டம், பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் ஆகியவை நிறைவேற காரணமாக இருந்தவர். அடையாற்றில் 1930இல் அவ்வை இல்லம், 1952இல் புற்றுநோய் மருத்துவமனை ஆகியவற்றை நிறுவியவர்.
தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதர் ஆகியவர் பண்டித ரமாபாய்.
மூவலூர் இராமாமிர்தம்
- தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர். திராவிட இ யக்க அரசியல் செயல்பாட்டாளர். தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணைநின்றவர்.
- தமிழக அரசு, 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை இவரின் பெயரில் வழங்கிவருகிறது.
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் வேலூரில் இலவச மருத்துவம் அளித்தவர்.
சாவித்திரிபாய் பூலே – 1848-ல் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நாட்டின் முதல் பெண் ஆசிரியர்.
நோபல் பரிசு வாங்கி சிறுமி மலாலா ஆவார்.
கைலாஷ் சத்தியமூர்த்தி குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவினார்.
பெண்களுகளின் முன்னேற்றத்திற்கு கூறிய கருத்துகள்
தந்தை பெரியார்
முடியாது பெண்ணாலே என்கின்ற
மாயையினை முடக்க எழுந்தவர் யாரு…
பாரதியார்
விடியாது பெண்ணாலே என்கின்ற
கேலியினை மிதித்துத் துவைத்தவர் யாரு…
பாரதிதாசன்
பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை
தீருமோவென
இடிமுழக்கம் செய்தவர் யாரு…
- பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் – பாரதி
- மங்கைராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
செய்திடல் வேண்டுமம்மோ…. – கவிமணி
- பெண்எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது – பாவேந்தர்
குடும்ப விளக்கு
கல்வியறிவு இல்லாத பெண்கள் பண்படாத நிலத்தைப் போன்றவர்கள்.
வானூர்தியைச் செலுத்துதல், உலகையும் கடலையும் அளத்தல் போன்ற எந்தச் செயலும் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவானவை.
மின்னல்போல் ஒளிரும் இயல்புடையவள் பெண்; ஆனால் கல்வியறிவு இல்லாத பெண் தன் வாழ்வில் என்றும் ஒளிரமாட்டாள்
சமைப்பது, வீட்டு வேலைகளைச் செய்வது போன்றவை பெண்களுக்கே உரியவை என்று கூறுவது பொருத்தமற்றது. சமைப்பது தாழ்வென எண்ணலாமா? சமைப்பவர் உணவை மட்டும் சமைப்பதில்லை. அதற்கும் மேலாக இன்பத்தையும் படைக்கின்றார்.
உணவைச் சமைத்துத் தருவது என்பது உயிரை உருவாக்குவது போன்றதாகும்.வாழ்க்கை” என்பது பொருட்செல்வத்தாலோ வீரத்தாலோ அமைவதன்று.
சமைக்கும் பணி, பெண்களுக்குத் தவிர்க்க முடியாத கடமை எனவும் அப்பணி நல்ல தாய்மார்களுக்கே உரியது எனவும் தமிழ்த்திரு நாட்டில் இருக்கின்ற வழக்கத்தினைக் கண் இமைக்கும் நேரத்தில் நீக்க வேண்டுமாயின் பெண்களுக்கு எப்போதும் கல்வி வேண்டும்.
சாதனைக்கு வயது தடையல்ல
10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும் பாடவும் ஆற்றல் பெற்றவர் வள்ளலார்.
11ஆவது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி ‘பாரதி’ என்னும் பட்டம் பெற்றவர் பாரதியார்.
15ஆவது வயதிலேயே பிரெஞ்சு இலக்கியக் கழகத்துக்குத் தமது கவிதைகளை எழுதியனுப்பியவர் விக்டர் ஹியூகோ.
16ஆவது வயதிலேயே தமது தந்தையின் போர்ப் படையில் தளபதியானவர் மாவீரன் அலெக்சாண்டர்.
17ஆவது வயதிலேயே பைசா நகரச் சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து ஆராய்ந்தவர் அறிவியலாளர் கலீலியோ.
ஒரு பாடலில் மூன்று கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்
- திரிகடுகம் (சுக்கு, மிளகு, திப்பிலி)
ஒரு பாடலில் ஐந்து கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்
- சிறுபஞ்மூலம் (கண்டங்கத்திரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி)
ஒரு பாடலில் ஆறு கருத்துகளை கொண்டு பதினெண்கீழ்கணக்கு நூல்
- ஏலாதி (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், இலவங்கம், நாககேசரம்)
புகழுக்குரிய நூலகங்கள்
ஆசியாவிலேயே மிகப் பழமையான நூலகம் என்ற புகழுக்குரியது தஞ்சை சரசுவதி மகால் நூலகம். இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்குப் பாதுகாக்கப்படுகின்றன.
உலகளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் கன்னிமரா நூலகமே. இது சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் என்ற பெருமைக்கு உரியது திருவனந்தபுரம் நடுவண் நூலகம்.
காெல்கத்தாவில் 1836ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு, 1953இல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட தேசிய நூலகமே இந்தியாவின் மிகப் பெரிய நூலகமாகும். இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது.
உலகின் மிகப் பெரிய நூலகம் என்ற பெருமையைத் தாங்கி நிற்பது அமெரிக்காவிலுள்ள லைப்ரரி ஆப் காங்கிரஸ்.
நூலகங்கத்துக்குரிய பொன்மொழிகள்
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும் – அறிஞர் அண்ணா
உலகில் சகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே – கதே
சீர்காழி இரா.அரங்கநாதன் அவர்களின் பிறந்த நாளான ஆகஸ்ட் ஒன்பதாம் நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது.
இராவண காவியம் காலத்தின் விளைவு. ஆராய்ச்சியின் அறிகுறி. புரட்சிப் பொறி. உண்மையை உணர வைக்கும் உன்னத நூல் – அறிஞர் அண்ணா
சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழ்ச் சிறுகதைகள்
- 1970 – அன்பளிப்பு (சிறுகதைகள்) – கு. அழகிரிசாமி
- 1979 – சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) – தி. ஜானகிராமன்
- 1987 – முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) – ஆதவன்
- 1996 – அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) – அசோகமித்ரன்
- 2008 – மின்சாரப்பூ (சிறுகதைகள்) – மேலாண்மை பொன்னுசாமி
- 2010 – சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) – நாஞ்சில் நாடன்
- 2016 – ஒரு சிறு இசை (சிறுகதைகள்) – வண்ணதாசன்.
சீவக சிந்தாமணியின் இலம்பகங்கள்
- நாமகள் இலம்பகம்
- கோவிந்தையார் இலம்பகம்
- காந்தருவதத்தையார் இலம்பம்
- குணமாலையார் இலம்பம்
- பதுமையார் இலம்பம்
- கேமசரியார் இலம்கம்
- கனகமாலையார் இலம்பகம்
- விமலையார் இலம்பகம்
- சுரமஞ்சியார் இலம்பகம்
- மண்மகள் இலம்பகம்
- பூமகள் இலம்பகம்
- இலக்கணையார் இலம்பகம்
- முத்தி இலம்பகம்
பொறிமயிர் வாரணம் …
கூட்டுறை வயமாப் புலியொடு குழும” (மதுரைக்காஞ்சி 673 – 677 அடிகள்) என்ற அடிகளின் மூலமாக மதுரையில் வனவிலங்குச் சரணாலயம் இருந்த செய்தியை மதுரைக் காஞ்சியின் மூலம் அறியலாம். பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் நூலினை எழுதியவர் – இராசமாணிக்கனார்
மால் – பல்லங்காடி; நாளங்காடி – பகலில் செயல்படும் கடைவீதி; அல்லங்காடி – இரவில் செயல்படும் கடைவீதி; மாட்டுத்தாவணி – தாவணின்னா சந்தைன்னு பொருள்;
பொதியை ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு – செல்லக்கண்ணு
நீயும் வித்துப்போட்டுப் பணத்த எண்ணு
செல்லக்கண்ணு. -பாடலாசிரியர் மருதகாசி
இயற்கையையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மைகளைக் காணும் முயற்சிகளே பிச்சமூர்த்தியின் கவிதைகள் – புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்னும் நூலில் வல்லிக்கண்ணன்.
கணியன் பூங்குன்றனார் “யாதும் ஊரே யாவருங் கேளிர்”
குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் “பூட்கையில்லோன் யாக்கை போல” (புறம். 69) ஆலத்தூர்கிழார்.
படுதிரை வையம் பாத்திய பண்பே – தொல்காப்பியம்
இம்மைச் செய்தது மறுமைக்கு ஆமெனும்
அறவிலை வணிகன் ஆய் அலன் – (புறம். 134)