சுந்தரர்
October 20, 2023
2025-01-11 13:57
சுந்தரர்
வரலாறு
-
இயற்பெயர் = நம்பி ஆரூரர்
-
பெற்றோர் = சடையனார், இசைஞானியார்
-
ஊர் = திருமுனைப்பாடி நாடு திருநாவலூர்
-
மனைவி = பரவையார், சங்கிலியார்
-
வாழ்ந்த காலம் = 18 ஆண்டுகள்
-
மார்க்கம் = யோகம் என்னும் சக மார்க்கம்
-
நெறி = யோகம் அல்லது தோழமை நெறி
-
ஆட்கொள்ளட்பாட இடம் = திருவெண்ணெய் நல்லூர்
-
இறைவனடி சேர்ந்த இடம் = கைலாயம்
-
இவரின் தமிழ் = மிஞ்சு தமிழ்
சுந்தரர் தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தை படைத்தளித்தார்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தர் ஆகிய பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
தே + ஆரம் – இறைவனுக்குச் சூடப்படும் மாலை என்றும், தே + வாரம் – இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
பதிகம் என்பது பத்துப் பாடல்களை கொண்டது.
சுந்தரர் தேவாரம்
-
7ஆம் திருமுறை. இதனை “திருப்பாட்டு’ என்பர்.
-
திருதொண்டத்தொகை
சுந்தரர் சிறப்பு பெயர்கள்
-
வன்தொண்டர்
-
தம்பிரான் தோழர்
-
சேரமான் தோழர்
-
திருநாவலூறார்
-
ஆலாலசுந்தரர்
-
ஆளுடைய நம்பி
நிகழ்த்திய அற்புதங்கள்
-
12000 பொன்னை மணிமுத்தாற்றில் போட்டு கமலாலயத்தில் எடுத்தார்.
-
இவர் பொருட்டு காவிரி ஆறு இரண்டு கூறாகப் பிளந்து நின்றது.
-
செங்கல்லை தங்கக் கல்லாக மாற்றினார்.
-
வாழ்நாள் முழுவதும் மணக்கோலத்துடன் வாழ்ந்தவர்.
-
பரவையார் மீது இவர் கொண்ட காதலுக்கு சிவபெருமான்உதவி புரிந்தார்.
-
இரு கண்ணையும் இழந்தவர், காஞ்சியில் ஒரு கண்ணையும் திருவாரூரில் ஒரு கண்ணையும் பெற வைத்தார்.
-
முதலை உண்ட பாலகனை உயிரோடு மீட்டார்.
சுந்தரர் சிறப்பு
-
இவரின் திருமணத்தன்று இறைவனே நேரில் வந்து அடிமை ஓலை காட்டி, சுந்தரன் தனது அடிமை என நிறுவினார்.
-
தன்னை அடிமை என்று கூறிய இறைவனைப் “பித்தா” எனக் கோபித்துப் பேசினார். இறைவன் சுந்தரரை ஆட்கொண்டப்பின் “பித்தாபிறை சூடி” என்ற பாடலை பாடினார்.
-
சேரமான் பெருமாள் நாயனாரோடு “வெள்ளையானை மீது” அமர்ந்து கயிலை சென்றார்.
-
மனைவியின் ஊடலை தவிர்க்க இறைவனையே தூதாக அனுப்பினார்
வன்தொண்டர் குறிப்பு
-
இவரை திருமுனைப்பாடி நாட்டை ஆண்ட நரசிங்கமுனையர் என்ற மன்னனால் தத்து எடுத்து வளர்க்கப்பட்டவர்.
-
இவர் 38000 பதிகங்கள் பாடியதாக கூறப்படிகிறது.
-
ஆனால் கிடைத்தவை 100 மட்டுமே.
-
“வித்தகம் பேச வேண்டா விரைந்து பணி செய்ய வேண்டும்” என்று இறைவன் இவரிடம் கூறினார்.
சுந்தரர் பாடிய முதல் பாடல்
பித்தா! பிறைசூடி! பெருமானே! அருளாளா
எத்தான் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணைத் தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள்துறையுள்
அத்தா! உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனலாமே.
|
மேற்கோள்
-
பித்தா பிறை சூடி பெருமானே அருளாளா
-
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
-
தம்மானை அறியாத சாதியாரும் உளரோ
“பண்ணின்தமிழ் இசைபாடலின் பழவெய்முழவு அதிரக்
கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய
மண்நின்றன மதவேழங்கள் மணிவாரிக்கொண்டு எறியக்
கிண் என்றுஇசை முரலும்திருக் கேதாரம்என் னீரே”. – சுந்தரர்
பண்ணோடு சேர்ந்த இனிய தமிழ்ப் பாடல்களைப் பாடும் போது அதற்கு ஏற்றவாறு முதிர்ந்த மூங்கில்களால் ஆகிய புல்லாங்குழலும் முழவும் இணைந்து ஒலிக்கும். கண்களுக்கு இனிய குளிர்ச்சி தரும் ஒளியை உடைய பொன்வண்ண நீர்நிலைகள் வைரங்களைப் போன்ற நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்.நிலத்தின் மீது நின்று கொண்டிருக்கும் மதயானைகள் மணிகளை வாரி வாரி வீசும். இவற்றால் இடையறாது எழும் ‘கிண்’ என்னும் ஒலியானது இசையாக முழங்கும். இத்தகைய சிறப்புகள் உடைய நகரம் திருக்கேதாரம் என்று சுந்தரர் வருணனை செய்கிறார்