Blog

செங்கோன்மை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

செங்கோன்மை

  1. ஓர்ந்துகண் ணோடா திறைபுரிந் தியார்மாட்டும்

தேர்ந்துசெய் வஃதே முறை.

விளக்கம்:

குற்றம்    இன்னதென்று   ஆராய்ந்து   எந்தப்   பக்கமும்  சாயாமல் நடுவுநிலைமை தவறாமல் வழங்கப்படுவதே நீதியாகும்.

2. வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்

கோனோக்கி வாழுங் குடி.

விளக்கம்:

உலகில்   உள்ள  உயிர்கள் வாழ்வதற்கு மழை தேவைப்படுவது போல ஒரு நாட்டின் குடிமக்கள் வாழ்வதற்கு நல்லாட்சி தேவைப்படுகிறது.

3. அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல்.

விளக்கம்:

ஓர்  அரசின்  செங்கோன்மைதான்  அறவோர் நூல்களுக்கும் அறவழிச் செயல்களுக்கும் அடிப்படையாக அமையும்.

4. குடிதழீஇக் கோலோச்சு மாநில மன்னன்

அடிதழீஇ நிற்கும் உலகு.

விளக்கம்:

குடிமக்களை அரவணைத்து ஆட்சி நடத்தும் நல்லரசின் அடிச்சுவட்டை நானிலமே போற்றி நிற்கும்.

5. இயல்புளிக் கோலோச்சு மன்னவ னாட்ட

பெயலும் விளையுளுந் தொக்கு.

விளக்கம்:

நீதி   வழுவாமல்   ஓர்   அரசு   நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில்   தவறாமல்   பெய்யும் மழையினால் வளமான விளைச்சல்

கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.

6. வேலன்று வென்றி தருவது மன்னவன்

கோலதூஉங் கோடா தெனின்.

விளக்கம்:

ஓர்   அரசுக்கு  வெற்றியைத்  தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.

7. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை

முறைகாக்கும் முட்டாச் செயின்.

விளக்கம்:

நீதி  வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.

8. எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்

தண்பதத்தான் தானே கெடும்.

விளக்கம்:

ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும்  நடைபெறுகிற  அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.

9. குடிபுறங் காத்தோம்பிக் குற்றங் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில்.

விளக்கம்:

குடிமக்களைப்   பாதுகாத்துத்  துணை  நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின்

கடமையாகும்.

10. கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர்.

விளக்கம்:

கொலை   முதலிய     கொடுமைகள்    புரிவோரை,    ஓர்   அரசு தண்டனைக்குள்ளாக்குவது   பயிரின்    செழிப்புக்காகக்   களை எடுப்பது போன்றதாகும்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories