சுட்டு எழுத்துகள்
January 3, 2025 2025-03-08 6:03சுட்டு எழுத்துகள்
ஒன்றைச் சட்டிக் காட்ட வரும் எழுத்துக்கள் சுட்டு எழுத்து எனப்படும். அ, இ.,உ ஆகிய மூன்றும். தற்காலத்தில் “உ” என்னும் எழுத்தைச் சுட்டாகப் பயன்படுத்துவது இல்லை. இவை அகச்சுட்டு, புற்ச்சுட்டு, அண்மைச் சுட்டு, சேய்மை சுட்டு ஆகும்.
அங்கு, இங்கு, அவள், இவள், அவன், இவன், அந்த, இந்த இச்சொற்கள் எல்லாம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சுட்டிச் சொல்வதற்குப் பயன்படுகின்றன. இச்சொற்கள் எழுவதற்கு அ, இ ஆகிய எழுத்துகளே காரணம்.
- அகச்சுட்டு
சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினால் பிற எழுத்துகள் பொருள் தராது. அகம் + சுட்டு = அகச்சுட்டு.
அவள் = அ + வள், இவள்= இ + வள், அவன்= அ + வன்,இவன்= இ + வன், அது= அ + து, இது= இ + து, அங்கு= அ + ங்கு, இங்கு= இ + ங்கு.
2. புறச்சுட்டு
சொற்களில் உள்ள சுட்டு எழுத்துகளான அ, இ ஆகிய இரண்டையும் நீக்கினாலும் பிற எழுத்துகள் பொருள் தரும். புறம் + சுட்டு = புறச்சுட்டு.
அவ்வீடு= அ + வீடு, இம்மனிதன்= இ + மனிதன், அக்குளம்= அ + குளம், இம்மாடு= இ + மாடு, அந்நீர்வீழ்ச்சி= அ + நீர்வீழ்ச்சி, இம்மலை= இ + மலை,
இந்நூல்= இ + நூல், இம்மரம்= இ + மரம், அம்மரம்= அ + மரம்.
3. அண்மைச்சுட்டு
அண்மையில் உள்ளவற்றைச் சுட்டிக் காண்பிப்பது அண்மைச்சுட்டு என்பர். அண்மை + சுட்டு = அண்மைச்சுட்டு. அண்மை என்பதன் பொருள் அருகில்.