ஜவகர்லால் நேரு
July 19, 2024 2025-01-20 9:42ஜவகர்லால் நேரு
மகள் இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதம் நமது இந்திய நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களுள் ஒருவர் ஜவகர்லால் நேரு. இவர், நம் நாடு விடுதலை பெற்றபின் முதல் முதன்மை அமைச்சராகப் பொறுப்பு ஏற்றார்.அவருடைய அன்பு மகள்தான் இந்திராகாந்தி. 1922ஆம் ஆண்டுமுதல் 1964ஆம் ஆண்டுவரை 42 ஆண்டுகள் தம் மகளுக்குக் கடிதங்கள் எழுதிக்கொண்டே இருந்தார். நேரு வெளிநாட்டுக்குச் சென்ற பொழுதும், இந்தியாவில் இருந்தபொழுதும் மகளுக்குக் கடிதங்கள் எழுதினார். சிறைச் சாலையில் அடைக்கப்பட்ட பொழுதும்கூட, அவர் கடிதம் எழுதுவதனை நிறுத்தவே இல்லை. தாகூரின் விசுவபாரதி கல்லூரியில் இந்திராகாந்தி சேர்ந்தபோது, அவர் எழுதிய கடிதம் இது. விசுவபாரதி கல்லூரி மேற்கு வங்காளத்தில் சாந்திநிகேதன் என்னும் இடத்தில் உள்ளது.
கேம்பிரிட்ஜ் – இங்கிலாந்திலுள்ள பல்கலைக்கழகம்
சேக்ஸ்பியர் – ஆங்கில நாடக ஆசிரியர்
மில்டன் – ஆங்கிலக் கவிஞர்
பிளேட்டோ – கிரேக்கச் சிந்தனையாளர்
காளிதாசர் – வடமொழி நாடக ஆசிரியர்
டால்ஸ்டாய் – இரஷ்ய நாட்டு எழுத்தாளர்
பொனாட்ஷா – ஆங்கில நாடக ஆசிரியர்
பெட்ரண்ட் ரஸ்ஸல் – சிந்தனையாளர்; கல்வியாளர்
அல்மோரா சிறை – உத்தராஞ்சல் மாநிலத்தில் உள்ளது.
கிருபாளினி – விசுவபாரதியில் பணிபுரிந்த பேராசிரியர்.