Blog

டி.கே. சிதம்பரநாதர்

Class 49 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

டி.கே. சிதம்பரநாதர்

டி.கே. சிதம்பரநாதர் இவரது  கட்டுரை இடம்பெற்றுள்ள ‘இதய ஒலி’ என்னும் நூலில் இருந்து தரப்பட்டுள்ளது.

பாரதியார் பிறந்து வளர்ந்த இடம் எட்டையபுரம்.

தேசிகவிநாயகனார் கன்னியாகுமரிப் பக்கம்  அதாவது நாஞ்சில் நாட்டில் பிறந்து வளர்ந்தவராய் இருந்தாலும் அவர் தமிழை அழுத்தமாக ஆர்வத்தோடு கற்ற இடம் திருநெல்வேலி நகர்தான்.

இருநூறு வருஷங்களுக்கு முன் இருந்தவர் கடிகைமுத்துப் புலவர் எட்டையபுரம் இருக்கிறது. அவர் வெங்கடேசுர எட்டப்ப ராஜாவைப் பற்றிப் பல பாடல்கள் பாடியிருக்கிறார்.

சீவலப்பேரி என்கிற முக்கூடல். முக்கூடல் பள்ளு என்னும் பிரபந்தம் முக்கூடலைப் பற்றியதுதான்.

ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்று தேகுறி – மலை

யாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே!

பிள்ளைப்பெருமாள் சீவைகுண்டத்துப் பெருமாளைப் பற்றிப் பாடியுள்ளார்.

காயல்பட்டணத்தில் இருநூற்றைம்பது வருஷத்துக்கு முன் சீதக்காதி என்ற பெரிய வாணிகர் இருந்தார் அவர் தமிழ்ப் புலவர்களுக்குப் பெருங்கொடை கொடுத்து வந்தார். அவர் இறந்தபோது, புலவர்கள் இதயத்தில் இடிதான் விழுந்தது. நமசிவாயப் புலவர் என்பவர் என்ன ஆற்றாமையோடு அலறுகின்றார் பாருங்கள்:

“பூமாது இருந்தென் புவிமாது இருந்தென் இப்பூதலத்தில்

நாமாது இருந்தென்ன நாமும் இருந்தென்ன நாவலர்க்குக்

கோமான் அழகமர் மால்சீதக் காதி கொடைக்கரத்துச்

சீமான் இறந்திட்ட போதே புலமையும் செத்ததுவே! “

 

திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர்

“வாடா’ என அழைத்து வாழ்வித்தால் அம்ம உனைக்

கூடாதென் றார் தடுப்பார் கோமதித்தாய் ஈஸ்வரியே! ” – அழகிய சொக்கநாதர்

கரிவலம்வந்தநல்லூர்  என்றும் திருக்கருவை என்றும் அழைக்கப்படும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்றதாகும். திருக்கருவை வெண்பா அந்தாதி, பதிற்றுப்பத்தந்தாதி, கலித்துறை அந்தாதி என்ற மூன்று நூல்களைப் பாடியிருக்கிறார்.

திருஞான சம்பந்தர் இங்கு வந்தார். நுண் துளி தூங்கும் குற்றாலம் என்று பாடினார்.

மாணிக்கவாசகரும் ஒரு பாடல் பாடியிருக்கிறார் :

“உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்

கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்

குற்றாலத் துறைகின்ற கூத்தாஉன் குரைகழற்கே

கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே!”

தமிழ் இலக்கியங்களில் முக்கியமானது குற்றாலக் குறவஞ்சி.

திரிகூடராசப்பக் கவிராயர் பாடிய நூல்

 

“கயிலை எனும் வடமலைக்குத் தெற்குமலை அம்மே!

கனகமகா மேருவென நிற்கும்மலை அம்மே!

துயிலும் அவர் விழிப்பாகி அகிலம் எங்கும் தேடும்

துங்கர்திரி கூடமலை எங்கள்மலை அம்மே! ”

நூல் வெளி

டி.கே.சி என அழைக்கப்படும் டி.கே. சிதம்பரநாதர் வழக்கறிஞர் தொழில் செய்தவர்;

தமிழ் எழுத்தாளராகவும் திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர்;

இரசிகமணி என்று சிறப்பிக்கப்பட்டவர்.

இவர் தமது வீட்டில் ‘வட்டத்தொட்டி’ என்னும் பெயரில் இலக்கியக் கூட்டங்கள் நடத்தி வந்தார்.

இவர் கடித இலக்கியத்தின் முன்னோடி, தமிழிசைக் காவலர், வளர்தமிழ் ஆர்வலர், குற்றால முனிவர் எனப் பலவாறாகப் புகழப்படுகிறார்.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories