தன் வினை, பிற வினை
January 9, 2024 2025-01-18 11:08தன் வினை, பிற வினை
தன் வினை, பிற வினை
எழுவாய்
சொற்றொடர் அமைவதற்கு அடிப்படையாக அமைந்த பெயர்ச் சொல்லையே எழுவாய் என்கிறோம்.
சான்று : எட்வர்டு வந்தான். இதில் “எட்வர்டு” எழுவாய்
பயனிலை
ஒரு தொடரில் பயன் நிலைத்து இருக்கும் இடத்தைப் பயனிலை என்கிறோம். வினைச்சொல்லே பயனிலை ஆகும்.
சான்று : கனகாம்பரம் பூத்தது. இதில் “பூத்தது” பயனிலை
செயப்படுபொருள்
எழுவாய் அடிப்படையாகத் தேர்தெடுக்கப்பட்ட பொருளே செயப்படுபொருள் ஆகும்.
சான்று : மீனா கனகாம்பரத்தைச் சூடினாள்
மீனா என்னும் பெயர்ச்சொல்லே எழுவாய் ஆகும். அவ்வெழுவாயின் பயனிலை சூடினாள் என்பதாகும். எனில், மற்றொரு பெயர்ச்சொல்லான கனகாம்பரம் என்பது யாது? அது செயப்படுபொருள் என்று அழைக்கப்படுகிறது. எழுவாய் ஒரு வினையைச் செய்ய அதற்கு அடிப்படையாய்த் தேர்ந்தெடுக்கப்பட்ட செயப்படுபொருள் ஆகும்.
வினை வகைகள் – தன்வினை, பிறவினை:
தன்வினை:
தன்வினை என்பது ஒருவர் தானே செய்வது.
எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன்வினை எனப்படும். சான்று : பந்து உருண்டது என்பது தன்வினை
பிறவினை:
பிறவினை என்பது பிறரைச் செய்யும்படி ஆக்குவது. ஒரு எழுவாய் ஒரு செயலை பிறரைக் கொண்டு செய்தால் அது பிறவினை வாக்கியம் ஆகும்.
‘பித்து’ ‘வித்து‘ எனும் சொற்கள் சேர்ந்து வரும்.
எழுவாய் ஒரு வினையைச் செய்ய வைத்தால் அது பிறவினை எனப்படும். சான்று : உருட்டவைத்தான் என்பது பிறவினை.
பிறவினைகள், வி, பி போன்ற விகுதிகளைக் கொண்டும் செய், வை, பண்ணு போன்ற துணை வினைகளை இணைத்தும் உருவாக்கப்படுகின்றன.
எழுவாய்/பெயர் | வினை அடி | தன்வினை | பிறவினை |
நான் | ஓடு | நான் திடலில் ஓடினேன். | நான் திடலில் மிதிவண்டியை ஓட்டினேன். |
காவியா | வரை | காவியா வேகமாக படம் வரைந்தாள். | காவியா வேகமா படம் வரைவித்தாள் |
கவிதை | நனை | நான் கவிதை மழையில் நனைந்தேன். | நான் கவிதை மழையில் நனைவித்தேன். |
இலை | அசை | செடியில் இலை வேகமாக அசைந்தது. | செடியில் இலை வேகமாக அசைவித்தது. |
மழை | சேர் | மழை மண்ணைச் சேர்ந்தது. | மழை மண்ணைச் சேர்பித்தது. |
தன்வினை | மொழி பெயர்த்தாள் |
அவன் திருந்தினான் | |
அவர்கள் நன்றாகப் படித்தனர் | |
பிறவினை | மொழி பெயர்ப்பித்தாள் |
அவனைத் திருந்தச் செய்தான் | |
தந்தைமகனை நன்றாகப் படிக்க வைத்தார். | |
பள்ளிக்குப் புத்தகங்கள் வருவித்தார். |