Blog

கி.வா. ஜகந்நாதன்

Class 49 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

கி.வா. ஜகந்நாதன்

வயலும் வாழ்வும்

ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ
ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி ஏலேலோ
சீலையெல்லாம் வரிஞ்சுக்கட்டி – ஏலேலங்கிடி ஏலேலோ
சேத்துக்குள்ளே இறங்குறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ

நாத்தெல்லாம் பிடுங்கையிலே – ஏலேலங்கிடி ஏலேலோ
நண்டும் சேர்த்துப் பிடிக்கிறாங்க – ஏலேலங்கிடி ஏலேலோ
ஒருசாணுக்கு ஒரு நாற்றுத்தான் – ஏலேலங்கிடி ஏலேலோ
ஓடியோடி நட்டோமையா – ஏலேலங்கிடி ஏலேலோ

மடமடன்னு மடைவழியே – ஏலேலங்கிடி ஏலேலோ
மண்குளிரத் தண்ணீர்பாய – ஏலேலங்கிடி ஏலேலோ
சாலுசாலாத் தாளுவிட்டு – ஏலேலங்கிடி ஏலேலோ
நாலுநாலா வளருதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ

மணிபோலப் பால்பிடித்து – ஏலேலங்கிடி ஏலேலோ
மனதையெல்லாம் மயக்குதம்மா – ஏலேலங்கிடி ஏலேலோ
அறுப்பறுக்க ஆளுக்கெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ
ஆளுபணம் கொடுத்துவாரான் – ஏலேலங்கிடி ஏலேலோ

சும்மாடும் தேர்ந்தெடுத்து – ஏலேலங்கிடி ஏலேலோ
சுறுசுறுப்பாய்க் கொண்டு போனார் – ஏலேலங்கிடி ஏலேலோ
கிழக்கத்தி மாடெல்லாம் – ஏலேலங்கிடி ஏலேலோ
கீழே பார்த்து மிதிக்குதையா – ஏலேலங்கிடி ஏலேலோ

கால்படவும் கதிருபூரா – ஏலேலங்கிடி ஏலேலோ
கழலுதையா மணிமணியா – ஏலேலங்கிடி ஏலேலோ
                                                                                                                              தொகுப்பாசிரியர் – கி.வா. ஜகந்நாதன்

சொல்லும் பொருளும்

குழி – நில அளவைப்பெயர்; சீலை – புடவை; சாண் – நீட்டல் அளவைப்பெயர்; மடை – வயலுக்கு நீர் வரும் வழி; மணி – முற்றிய நெல்; கழலுதல் – உதிர்தல்; சும்மாடு – பாரம் சுமப்பவர்கள் தலையில் வைத்துக் கொள்ளும் துணிச்சுருள்.

 

ஒரு சாணுக்கு ஒரு நாற்று வீதம் சுறுசுறுப்பாக நட்டனர். நடவு நட்ட வயிலின் மண் குளிருமாறு மடை வழியே நீர் பாய்ச்சினர். நட்ட நெற்பயிர்கள் வரிசையாக வளர்ந்து செழித்தன. பால் பிடித்து முற்றிய நெல்மணிகள் மனம் மயங்குமாறு விளைந்தன. அறுவடை செய்யும் ஆட்களுக்கு பணம் கொடுத்தனர். அறுவடை செய்த நெல்தாள்களைக் கட்டுக் கட்டுகளாக கட்டி தலைக்கு சும்மாடு வைத்து தூக்கிச் சென்று களத்தில் சேர்த்தனர். கிழகத்தி மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்தனர். மாடுகள் மதித்த நெற்கதிர்களில் இருந்து நெல்மணிகள் மணிமணியாய் உதிர்ந்தன.

அறுவடை செய்த நெற்க திர்களைக் க ளத்தில் அடித்து நெல்லைப் பிரிப்பர். நெல்தாளில் எஞ்சியிருக்கும் நெல்மணிகளைப் பிரிப்பதற்காக மாடுகளைக் கொண்டு மிதிக்கச் செய்வர். இதற்குப் போரடித்தல் என்று பெயர்.

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது   செந்நெல்லென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான     தென்மதுரை

(நாட்டுப்புறப்பாடல்)

நூல் வெளி

நாட்டுப்புறங்களில் உழைக்கும் மக்கள் தங்கள் களைப்புத் தெரியாமல் இருப்பதற்காகப் பாடும் பாடலே நாட்டுப்புறப் பாடல் எனப்படுகிறது. இதனை வாய்மொழி இலக்கியம் என்றும் வழங்குவர். பல்வேறு தொழில்கள் குறித்த நாட்டுப்புறப் பாடல்களை மலை அருவி என்னும் நூலில் கி.வா. ஜகந்நாதன் தொகுத்துள்ளார். அந்நூலில் உள்ள உழவுத்தொழில் பற்றிய பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories