Blog

தமிழ்விடு தூது

999
Old Syllabus

தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் “தூது” என்பதும் ஒன்று.இது “வாயில் இலக்கியம்”, “சந்து இலக்கியம்” என்னும் வேறுபெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
இது தலைவன் தலைவியருள் காதல் கொண்ட ஒருவர் மற்றொருவர் பால் செலுத்தும் அன்பைப் புலப்படுத்திக் தம்முடைய கருத்திற்கு உடன்பட்டமைக்கு அறிகுறியாக “மாலையை வாங்கி வருமாறு” அன்னம் முதல் வண்டு ஈறாய் பத்தையும் தூது விடுவதாகக் “கலிவெண்பா”வால் இயற்றப்படுவதாகும்.
தமிழ்விடு தூது மதுரையில் கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண் ஒருத்தி, தன் காதலைக் கூறிவருமாறு தமிழ்மொழியைத் தூதுவிடுவதாக அமைந்துள்ளது.
இந்நூல் 268 கண்ணிகளைக் கொண்டுள்ளது.
1930-ல் உ.வே.சா. தமிழ்விடு தூது நூலை முதன் முதலாக பதிப்பித்தார்.
இதன் ஆசிரியர் பெயர் என்று அறிய முடியவில்லை.
தமிழின் பெருமையை பாடக் கவிஞர்கள் கையாளும் உத்திகள் பல. அதில் ஒரு கருவி = கவிதை.

 

தமிழையே தூதாக அனுப்பி “தமிழ்விடு தூது” பாடப்பட்டுள்ளது.
தமிழ்விடு தூது பாடல் விளக்கம்

“குறம்‌என்றும்‌ பள்ளுஎன்றும்‌ கொள்வார்‌ கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும்‌ உண்டோ – திறம்‌எல்லாம்‌”

  • “உறவு என்று மூன்று இனத்தும் உண்டோ!” என்ற அடியில் கவிஞர் கூறும் “மூன்று இனத்தும்” என்பதன் பொருள் = தாழிசை, துறை, விருத்தம் ஆகிய மூன்று பாவினங்கள்.

“முற்றும்‌உணர்ந்த தேவர்களும்‌ முக்குணமே பெற்றார்நீ

குற்றம்‌இலாப்‌ பத்துக்‌ குணம்‌பெற்றாய்‌ – மற்றொருவர்”

  • “தேவர்களும் முக்குணமே பெற்றார்” என்ற அடியில் “முக்குணமே” என குறிப்பிடப்படுவது = சத்துவம், இராசசம், தாமசம் ஆகிய மூன்று குணங்கள்.
  • “குற்றம்இலாப் பத்துக் குணம் பெற்றாய்” என்ற அடியில் கூறப்படும் “பத்து குணங்கள்” யாவை = செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி ஆகிய பத்து குணங்கள்.
  • “வண்ணங்கள் ஐந்து” என தமிழ் விடு கூறுவது = வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை.
  • முத்தமிழ் = இயல், இசை, நாடகம்.
  • மூவகை பாவினங்கள் = தாழிசை, துறை, விருத்தம்
  • பத்து குணங்கள்: செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி.
  • மனிதரால் உருவாக்கப்பட்ட வண்ணங்கள் = ஐந்து (வெண்மை, செம்மை, கருமை, பொன்மை, பசுமை)
  • நாவிற்கு விருந்தளிக்கும் சுவைகள் = ஆறு
  • செவிகளுக்கு விருந்தளிக்கும் சுவைகள் = ஒன்பது
  • அழகுகள் = எட்டு.
  • நவரசங்கள் என்பவை
    • வீரம்
    • அச்சம்
    • இழிப்பு
    • வியப்பு
    • காமம்
    • அவலம்
    • கோபம்
    • நகை
    • சமநிலை
கண்ணி என்பதன் விளக்கம்
இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர்.
அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
தூது இலக்கியதததின் பா வகை
  • தூது இலக்கியம் கலிவெண்பாவால்  பாடப்படும்.
  • கலிப்பாவிற்கு உரிய ஓசை = துள்ளல் ஓசை.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories