பட்ட மரம் – பாடல்
மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே !
வெட்டப் படும்ஒரு
நாள்வரு மென்று
விசனம் அடைந்தனையோ ?
குந்த நிழல்தரக்
கந்த மலர்தரக்
கூரை விரித்தஇலை !
வெந்து கருகிட
இந்த நிறம்வர
வெம்பிக் குமைந்தனையோ ?
கட்டை யெனும்பெயர்
உற்றுக் கொடுந்துயர்
பட்டுக் கருகினையே !
விஞர் தமிழ் ஒளி (1924–1965) புதுவையில் பிறந்தவர். இயற்பெயர் – விஜயரங்கம்
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளங்கியவர்.
மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர். நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.