தமிழ் மொழியின் சிறப்பு,
January 5, 2024 2025-04-30 5:08தமிழ் மொழியின் சிறப்பு,
தமிழ் மொழியின் சிறப்பு,
தமிழின் தனித்தன்மைகள்:
-
தொன்மையும் இலக்கண இலக்கிய வளமும் உ டையது தமிழ் மொழியாகும்.
-
இலங்கை, மலேசியா , சிங்கப்பூர், உள்ளிட்ட பல நாடுகளிலும் பேசபப்டும் பெருமையுடைது தமிழ்
- தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமன்றித் தழைத்தோங்கவும் செய்யும் என்று கூறினார் கால்டுவெல்.
செம்மொழிகள்
திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் செம்மொழிகள் எனப்படும். கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றைச் செம்மொழிகள் எனப் பட்டியலிடுகிறார் மொழியியல் அறிஞர் ச.அகத்தியலிங்கம். இவற்றுள் கிரேக்கம், இலத்தீன், சமற்கிருதம் ஆகிய மொழிகள் இன்று பேச்சுவழக்கில் இல்லை.
செம்மொழித் தமிழின் சிறப்பு
டாக்டர் கிரெளல், தமிழ்மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு; திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்; தமிழ் என்னை ஈர்த்தது; குறளோ என்னை இழுத்தது என்று மொழிந்து இன்புற்றார்.
இலக்கண நிறைவு
எல்லா மொழிகளும் எழுத்துக்கும் சொல்லுக்கும் இலக்கணம் கூறும். ஆனால், தமிழ் அவற்றுடன் சேர்த்து வாழ்வியலுக்கான பொருளிலக்கணத்தையும் கூறுகிறது. அதனையும் அகம், புறம் என இருவகையாகப் பகுத்துள்ளது.
எல்லாச்சொல்லும் பொருள் குறித்தனவே என்பது தொல்காப்பிய நூற்பா.
பெற்றோரைக் குறிக்கும் அம்மை, அப்பன் என்னும் நாஞ்சில்நாட்டுத் தமிழ்ச் சொற்கள், வடமொழி உட்பட உலகப் பெருமொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து
வழங்கி வருகின்றன
இதுவரை நடைபெற்ற உலகத்தமிழ் மாநாடுகள் இடம், ஆண்டுகள்
1. முதலாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1966
- இடம் – கோலாம்பூர், மலேசியா
2. இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1968
- இடம் – சென்னை, இந்தியா
3. மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1970
- இடம் – பிரான்சு, பாரீசு
4. நான்காவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1974
- இடம் – யாழ்ப்பாணம், இலங்கை
5. ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1981
- இடம் – மதுரை, இந்தியா
6. ஆறாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1968
- இடம் – கோலாம்பூர், மலேசியா
7. ஏழாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1989
- இடம் – மொரீசியசு, மொரீசியசு
8. எட்டாவது உலகத்தமிழ் மாநாடு
- ஆண்டு – 1995
- இடம் -தஞ்சாவூர், இந்தியா
செந்தமிழ் மாநாடு 2010-ல் கோவையில் நடைபெற்றது.
உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியாவே. மாநாட்டுக்குரிய அம்முதல் மொழியும் தமிழே. பன்மொழிப் புலவர் க.அப்பாத்துரையார்.
கடல்கடந்து முதலில் அச்சேறிய தமிழ்
போர்ச்சுகீசு நாட்டின் தலைநகர் லிசுபனில், 1554இல் கார்டிலா என்னும் நூல் முதன் முதலாகத் தமிழ்மொழியில்தான் மொழிபெயர்க்கப்பட்டது. இந்நூல் ரோமன் வரிவடிவில் அச்சிடப்பட்டுள்ளது. ரோமன் எழுத்துருவில் வெளிவந்த இதன் முழுப்பெயர் Carthila de lingoa Tamul e Portugues. இது அன்றைய காலத்திலேயே இரு வண்ணங்களில் (கறுப்பு, சிவப்பு) மாறிமாறி நேர்த்தியாக அச்சிடப்பட்டுள்ளது. இந்திய மொழிகளிலேயே மேலைநாட்டு எழுத்துருவில் முதலில் அச்சேறியது தமிழ்தான். செய்தி- ஆறாம் உலகத் தமிழ் மாநாட்டு மலர்.