திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
September 29, 2024 2025-01-23 9:33திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள்.
தமிழியன் மொழிகள் என ஹோக்கன் குறிப்பிடும் மொழிகள்:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மால்தோ, தோடா, கோண்டி
திராவிட மொழிக்குடும்பம்
* திராவிடம் என்ற சொல்லை முதலில் பயன்படுத்தியவர் – குமரிலபட்டர்
* திராவிட மொழிகள் மொத்தம் – 28
“தமிழ்” என்ற சொல்லில் இருந்து “திராவிடா” என்ற சொல் பிறந்தது என்பதை ஹீராஸ் பாதிரியார்
தமிழ்→தமிழா→தமிலா→ டிரமிலா→ட்ரமிலா→த்ராவிடா→திராவிடா என்று விளக்குகிறார்.
ஹோக்கன், மாச்சுமல்லர் ஆகியோர் திராவிட மொழிகள் ஆரிய மொழிகளிலிருந்து வேறுபட்டவை என்பார்.
உலகின் குறிப்பிடத்தக்க, பழைமையான நாகரிகங்களுள் இந்திய நாகரிகமும் ஒன்று. மொகஞ்சதாரோ – ஹரப்பா அகழாய்வுக்குப் பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
* இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை – 1300
* வினைச்சொற்கள் காலத்தை மட்டுமே காட்டும் மொழி – ஆங்கிலம்
* கால்டுவெல் எழுதிய நூல் – திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் (1856)
கால்டுவெல் – தமிழ்மொழி பற்றிய கூறிய கூற்று:
தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருத கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி தமிழுக்கும் இந்தியாவின் பிற மொழிகளுக்கும் தொடர்பு இருக்கலாம்.
* இந்திய நாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று கூறியவர் – ச. அகத்தியலிங்கம்
* பணத்தாளில் தமிழ்மொழி இடம் பெற்றுள்ள நாடுகள் – மொரிசியஸ், இலங்கை
பெயர் : கால்டுவெல்
பிறந்த ஆண்டு : 1815
நாடு : அயர்லாந்து
தமிழகத்தில் வாழ்ந்த இடம் : இடையன்குடி (திருநெல்வேலி மாவட்டம்)
தமிழ்த்தொண்டு : திராவிடமொழிகளின் தாய் “தமிழ்” என உலகுக்குப் பறைசாற்றியது.
இயற்றிய நூல் : திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம்
மறைந்த ஊர் : கொடைக்கானல்
மறைந்த ஆண்டு : 1891
அண்மையில் சேர்க்கப்பட்ட திராவிட மொழிகள்:
-
எருகலா
-
தங்கா
-
குறும்பா
-
சோழிகா
தென்னிந்திய மொழிகள் என பிரான்சிஸ் எல்லிஸ் குறிப்பிடுவை:
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்
மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது:
-
மூணு – மலையாளம்
-
மூரு – கன்னடம்
-
மூடு – தெலுங்கும்
-
மூஜி – துளு
திராவிட மொழிகளை கால்டுவெல்லுக்குப் பின்னர் ஆய்வு செய்தோர்கள்:
-
ஸ்டென்கனோ
-
கே.வி.சுப்பையா
-
எல்.வி.இராமசுவாமி
-
பரோ
-
எமினோ
-
கமில்
-
சுவலபில்
-
ஆந்திரனோவ்
-
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்
திராவிடமொழிகளின் பிரிவுகள்:
-
தென்திராவிட மொழிகள்
-
நடுத் திராவிட மொழிகள்
-
வட திராவிட மொழிகள்
தென் திராவிட மொழிகள்:
-
தமிழ்
-
மலையாளம்
-
கன்னடம்
-
குடகு (காெடகு)
-
துளு
-
காேத்தா
-
தாேடா
-
காெரகா
-
இருளா
நடுத் திராவிட மொழிகள்:
-
தெலுங்கு
-
கூயி
-
கூவி (குவி)
-
காேண்டா
-
காேலாமி (காெலாமி)
-
நாய்க்கி
-
பெங்காே
-
மண்டா
-
பர்ஜி
-
கதபா
-
காேண்டி
-
காேயா
வட திராவிட மொழிகள்:
-
குரூக்
-
மால்தாே
-
பிராகுய் (பிராகுயி)
சில திராவிட மொழிகளின் பழமையான இலக்கிய இலக்கணங்கள் சில:
தமிழ்
இலக்கியம் |
காலம் |
இலக்கணம் |
காலம் |
சான்று |
சங்க இலக்கியம் |
பொ.ஆ.மு. 5 – பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டு அளவில் |
தொல்காப்பியம் |
பொ.ஆ.மு. 3ஆம் நூற்றாண்டு அளவில் |
தமிழ் இலக்கிய வரலாறு (மு.வ.) சாகித்திய அகாதெமி |
கன்னடம்
இலக்கியம் |
காலம் |
இலக்கணம் |
காலம் |
சான்று |
கவிராஜ மார்க்கம் |
பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு |
கவிராஜ மார்க்கம் |
பொ.ஆ. 9ஆம் நூற்றாண்டு |
இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் – செ. வை. சண்முகம் |
தெலுங்கு
இலக்கியம் |
காலம் |
இலக்கணம் |
காலம் |
சான்று |
பாரதம் |
பொ.ஆ. 11ஆம் நூற்றாண்டு |
ஆந்திர பாஷா பூஷணம் |
பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு |
இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் – செ. வை. சண்முகம் |
மலையாளம்
இலக்கியம் |
காலம் |
இலக்கணம் |
காலம் |
சான்று |
ராம சரிதம் |
பொ.ஆ. 12ஆம் நூற்றாண்டு |
லீலா திலகம் |
பொ.ஆ. 15ஆம் நூற்றாண்டு |
மலையாள இலக்கிய வரலாறு – சாகித்திய அகாதெமி |