திரிகடுகம்
October 3, 2023 2025-01-18 13:21திரிகடுகம்
திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது
கொல்லாமை, ஊன் உண்ணாமை, அருளுடைமை, இன்சொல் போன்ற இவ்வுலகிற்குரிய நல்வழிகளையும்,
அவாவறுத்தல், மெய்யுணர்தல் போன்ற மறுமைக்குரிய நல்வழிகளையும் இந்த நூல் எடுத்துக்காட்டுகின்றது.
இது மனித சமுதாயத்திற்கு இம்மைக்கும் மறுமைக்கும் நல்ல வழியினைக் காட்டும் நூலாகும்.
ஒவ்வொரு வெண்பாவிலும் மூன்று அறக்கருத்துகள் சொல்லப்படுகின்றன.
இந்நூலில் அறத்தின் உயர்வும் சிறப்பும் எடுத்துரைக்கப்படுகிறது.
இல்லறம் நல்லறமாக ஆவதற்குக் கணவனும் மனைவியும் எப்படி வாழ்தல் வேண்டும் என்பது 100 பாடல்களில் 35 இடங்களில் கூறப்படுகிறது.
பெயர்க்காரணம்
திரி = மூன்று
கடுகம் = காரமுள்ள பொருள்
சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றும் உடல் நோயைத் தீர்ப்பான.
அதனை போன்று இந்நூலில் அமைந்துள்ள ஒவ்வொரு பாட்டிலும் உள்ள மூன்று கருத்துக்களும் உள்ளந்தின் நோயைத் தீர்க்கும்.
ஆசிரியர் குறிப்பு
ஆசிரியர் : நல்லாதானர்
இயற்பெயர் – ஆதனார்
‘நல்’ என்பது அடைமொழி
காலம் – கி.பி. இரண்டாம் நூற்றாண்டு
இவர் வைணவ சமயத்தவர்.
இவர் திருநெல்வேலி மாவட்டம் “திருத்து” என்னும் ஊரை சேர்ந்தவர்.
“செருஅடுதோள் நல்லாதன்” எனப் பாயிரம் குறிப்பிடுவதால் இவர் போர் வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது
பொதுவான குறிப்புகள்
இந்நூலின் கடவுள் வாழ்த்து திருமாலைப் பற்றி கூறுகிறது.
இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் “இம்மூன்றும்” அல்லது “இம்மூவர்” என்னும் சொல் வருகிறது.
மருந்தின் பெயரால் பெயர் பெற்ற நூல்.
இந்நூலில் 66 பாடகளில் நன்மை தருபவை எவை என்பது பற்றிக் கூறப்பட்டுள்ளது.
இந்நூலில் 34 பாடல்களில் தீமை தருபவை எவை எனக் கூறப்பட்டுள்ளது.
கணவன் மனைவி வாழ்க்கை பற்றியே 35 பாடல்கள் உள்ளன.
300 அறக்கருத்துக்கள் இந்நூலில் கூறப்பட்டுள்ளது
முக்கிய அடிகள் : (7th Std)
“1.உண்பொழுது நீராடி யுண்டலும் என்பெறினும்
பால்பற்றிச் சொல்லா விடுதலுந் – தோல்வற்றிச்
சாயினுஞ் சான்றாண்மை குன்றாமை இம்மூன்றுந்
தூஉய மென்பார் தொழில்”.
பொருள் : நீராடிய பின் உண்ணுதல், பெரும்பயன் கிடைத்தாலும் பொய்ச்சாட்சி சொல்லாமல் இருத்தல், உடல்வாடித் தளர்ந்தபோதும் அறிவு ஒழுக்கங்களில் குன்றாது இருத்தல் ஆகிய இம்மூன்றும் மனம், மொழி, மெய்களால் தூய்மை உடையவரின் செய்கைகளாம்
சொற்பொருள்: உண்பொழுது – உண்ணும்பொழுது; பெறினும் – பெற்றாலும்; பால்பற்றி – ஒருபக்கச் சார்பு (நடுவுநிலைமையில் இருந்து மாறுதல்); தோல்வற்றி – தோல்சுருங்கி; சாயினும் – அழியினும்; சான்றாண்மை – அறிவு ஒழுக்கங்களில் நிலைத்து நிற்றல்; குன்றாமை – குறையாது இருத்தல்; தூஉயம் – தூய்மை உடையோர்
2.“இல்லர்க்கொன் றீயும் உடைமையும், இவ்வுலகில்
நில்லாமை யுள்ளும் நெறிப்பாடும் – எவ்வுயிர்க்கும்
துன்புறுவ செய்யாத தூய்மையும் இம்மூன்றும்
நன்றறியும் மாந்தர்க் குள”.
பொருள் : வறியவர்க்கு பொருளை அளித்தல், இவ்வுலகத்துப் பொருள்களின் நிலையாமையை அறிந்து நல்வழி நிற்றல் , எவ்வுயிரையும் துன்புறுத்தாத நிலையில் வாழ்தல் என்னும் இம்மூன்றும் அறவழியில் நடக்கும் மக்களுக்கே என்றும் உண்டு.
சொற்பொருள் : ஈயும் – அளிக்கும்; நில்லாமை – நிலையாமை; நெறி – வழி; தூய்மை – தூய தன்மை; மாந்தர் – மக்கள்.
3.“முறைசெய்யான் பெற்ற தலைமையும் நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும் – நிறைஒழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவைமூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து.”.
பொருள் : அறம் தவறாது செயல்படும் ஆற்றல் இல்லாதவன் பெற்ற தலைமை, ஒழுக்கம் இல்லாதவன் மேற்கொண்ட தவம், மேலான ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்காதவன் பெற்ற அழகு ஆகிய இம்மூன்றும் புதரில் விதைத்த விதைபோன்று பயனற்றவையே.
சொற்பொருள்: நிறை ஒழுக்கம் – மேலான ஒழுக்கம்; தேற்றாதான் – கடைப்பிடிக்காதவன்; வனப்பு – அழகு; தூறு – புதர்; வித்து – விதை.