திருமூலர்
October 24, 2023 2025-01-11 13:57திருமூலர்
திருமூலர்
திருமூலர்
திருமூலர் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் பதினெண் சித்தர்களில் ஒருவராகவும் கருதப்படுபவர்.
இது பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.
-
இவரின் திருமந்திரம் பத்தாம் திருமுறையாகும்.
-
திரு மூலர் ஒரு சித்தர்.
-
இவர் கூடு விட்டு கூடு பாய்ந்த இடம் சாத்தனூர்
-
இவர் யோகத்தில் ஆழ்ந்த இடம் திருவாவடுதுறை
-
திருவாவடுதுறைக்கு “நவகோடி சித்தபுரம்” என்ற பெயரும் உண்டு.
-
திருமந்திரத்திற்கு ஆசிரியர் இட்ட பெயர் = திருமந்திர மாலை
-
திருமந்திரத்திற்கு “தமிழ் மூவாயிரம்” என்ற பெயரும் உண்டு.
-
இந்நூலில் 9 தந்திரங்களும், 232 அதிகாரங்குள் உள்ளது.
-
முதல் சித்த நூல் திருமந்திரம்
-
யோகநெறி கூறும் தமிழின் ஒரே நூல்
-
“சைவ சித்தாந்தம்” என்னும் தொடர் முதலில் திருமந்திரத்தில் தான் உள்ளது.
-
இவர் நந்தி தேவரின் அருள் பெற்றவர்.
-
சைவசமயத்தின் முதல் நூல் இதுவே.
-
நாயன்மார்களில் மூத்தவர் இவரே.
-
திருமூலரின் பழைய பெயர் = சுந்தரன்
-
நந்திதேவர் வழங்கிய பெயர் = நாதன்
மேற்கோள்
-
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற நீர்நினைந்து உய்ம்மினே
படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்குஅது ஆமே -
நான்பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
-
அகத்தில் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
-
மரத்தை மறைத்தது மாமத யானை
-
அன்பே சிவம்
-
உடம்பார் அழியின் உயிரார் அழிவார்
-
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
-
படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே. –திருமூலர் , திருமந்திரம்
பொருள் : நோய் முதலான காரணங்களால் உடம்பு அழியுமாயின் உயிரும் அழியும்; அவ்வாறு அழிந்தால், உறுதிதரும் மெய்யறிவை அடைய இயலாது. ஆகவே, உடம்பை வளர்க்கும் வழிமுறைகளை அறிந்து உடம்பை வளர்த்தேன்; அதனால், உயிரை அழிவிலிருந்து காத்தேன்.
சொற்பொருள் : திடம் – உறுதி; மெய்ஞ்ஞானம் – மெய்யறிவு; உபாயம் – வழிவகை.
ஆசிரியர் குறிப்பு
பெயர் : மூலன் என்னும் பெயர், திரு என்னும் பெயரடை பெற்று, அதனுடன் அர் என்னும் மரியாதைப் பன்மையும் பெற்றுத் திருமூலர் என ஆயிற்று.
காலம் : ஐந்தாம் நூற்றாண்டின் முற்பகுதி.
நூல் குறிப்பு : சைவத் திருமுறைகளில் பத்தாவது திருமுறை திருமந்திரம். இதற்குத் தமிழ் மூவாயிரம் என்னும் வேறுபெயரும் உண்டு. இந்நூல் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது. ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது இந்நூலின் புகழ்மிக்க தொடராகும்.