Blog

நற்றிணை

55
Old Syllabus

நற்றிணை

நற்றிணை
  • திணை = அகத்திணை
  • பாவகை = ஆசிரியப்பா
  • பாடல்கள் = 400
  • புலவர்கள் = 175
  • அடி எல்லை = 9-12
தொகுத்தவர்
  • தொகுத்தவர் = தெரியவில்லை
  • தொகுப்பிதவர் = பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி
நற்றிணை நூலின் வேறுபெயர்கள்
  • நற்றிணை நானூறு
  • தூதின் வழிகாட்டி
நற்றிணை விளக்கம்
  • நல் + திணை = நற்றிணை
  • திணை = நிலம், குடி, ஒழுக்கம்
  • நல் + திணை என்பதற்கு “நல்ல ஒழுக்கலாறு” என்று பொருள்.
  • திணை என்ற பெயர் பெற்ற ஒரே நூல் இந்நூல் மட்டுமே.
மூலமும் உரையும்
  • இந்நூலிற்கு முதலில் உரை எழுதியவர் & பதிப்பித்தவர் = பின்னந்தூர் நாராயணசாமி
கடவுள் வாழ்த்து
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து பாடியவர் = பாரதம் பாடிய பெருந்தேவனார்
  • இந்நூலின் கடவுள் வாழ்த்து குறிப்பிடும் கடவுள் = திருமால்
தொடரால் பெயர் பெற்றவர்கள்
மலையனார்
தனிமகனார்
தும்பிசேர்கீரனார்
வண்ணப்புறச் சுந்தரத்தனார்
மடல் பாடிய மாதங்கீரனார்
நூல் குறிப்பிடும் அரசர்கள்
அதியமான் அஞ்சி
காரி
அழிசி
குட்டுவன்
ஆய்
சேந்தன்
உதியன்
நன்னன்
ஓரி
பாண்டியன் நெடுஞ்செழியன்
கிடைக்காதவை
  • 234ஆம் பாடல் கிடைக்கவில்லை.
  • “சான்றோர் வருந்திய வருத்தமும்” எனத் தொடங்கும் இறையனார் களவியல் உரை மேற்கோள் பாடல் அது என்பர்.
    பொதுவான குறிப்புகள்
    • எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து பாடப்பட்ட நூல்  = நற்றிணை
    • வௌவால்களும் கனவு காணும் என்ற அறிவியல் உண்மை கூறப்பட்டுள்ளது.
    • பிற்காலத்தில் சிறந்து விளங்கிய தூது என்ற இலக்கியத்திற்கு வழிகாட்டியாக குருகு, நாரை ஆகியவற்றை தூது விடும் பண்பு இதில் கூறப்பட்டுள்ளது.
    • எனவே இந்நூலினை “தூதின் வழிகாட்டி” என்பர்.
    முக்கிய அடிகள்
  • விளையா டாயமோடு வெண்மணல் அழுத்தி
  • மறந்தனம் துறந்த காழ்முளை அகைய
  • நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்பப்
  • நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகுமென்று
  • முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பினும்
  • நஞ்சும் உண்பர் நனிநா கரிகர்
  • நீரின்றி அமையா உலகம் போலத்
  • தம்மின்றி அமையா நம்நயந்து அருளி – (கபிலர்)
  • இளமையிற் சிறந்த வளமையும் இல்லை
  • சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவில்
  • பிறப்புப் பிரித்து ஆகுவதாயின்
  • ஒருமுலை இழந்த திருமா உண்ணி
  • நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
  • செல்வம் அன்று

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories