நாலாயர திவ்வியப் பிரபந்தம்
October 10, 2023
2025-01-11 13:57
நாலாயர திவ்வியப் பிரபந்தம்
நாலாயர திவ்வியப் பிரபந்தம்
வைணவ மரபில் கோயிலில் உள்ள இறைவனைப் போற்றிப் பாடுதல் “மங்களாசாசனம்” செய்தல் எனப்படும்
இறைவனின் திருவடியில் அல்லது கல்யாண குணங்களில் ஆழ்ந்தவர்கள் ஆழ்வார்கள் எனப்பட்டனர்
பன்னிரு ஆழ்வார்களுள் பொழ்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.
திருமாலை வழிபட்டுச் சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் பன்னிருவர் ஆவர். அவருள் ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.
இறைவனுக்குப் பாமாலை சூட்டியதோடு தான் அணிந்து மகிழ்ந்த பூமாலையையும் சூட்டியதால், “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என அழைக்கப்பெற்றார். இவரைப் பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் என்பர்.
ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு “நாலாயிர திவ்வியப் பிரபந்தம்” ஆகும். இத்தொகுப்பில் ஆண்டாள் பாடியதாகத் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்ற இரு தொகுதிகள் உள்ளன.
நாச்சியார் திருமொழி மொத்தம் 140 பாடல்களைக் கொண்டது.
நாலாயிரத் திவ்யப்பிரபந்தம் எனப் பெயரிட்டவர் = நாதமுனிகள்
இதற்கு “ஆன்ற தமிழ் மறை, திராவிட சாகரம், அருளிச் செயல்கள், செய்ய தமிழ் மாலைகள், சந்தமிகு தமிழ் மறை” என்ற வேறு பெயர்களும் உண்டு
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் நான்கு பிரிவுகளை உடையது
12 ஆழ்வார்களும் பாடிய மொத்த நூல்கள் = 24
நாதமுனிக்கு பிறகு தோன்றியவர்கள் ஆசாரியர்கள் எனப்பட்டனர்
நாதமுனிகளை “பெரிய முதலியார்” என்றும் அழைப்பர்
நாலாயிரத் திவ்வியப்பிரபந்தத்திற்கு இசை அமைத்தவர் = நாதமுனிகள்
நாலாயர திவ்வியப் பிரபந்தம் பெரும் பிரிவுகள்
-
முதல் ஆயிரம்
-
மூத்த திருமொழி
-
திருவாய் மொழி
-
இயற்பா
நாலாயர திவ்வியப் பிரபந்தம் அட்டவணை
எண்
|
பாடியோர்
|
நூல்
|
எண்ணிக்கை
|
பிரபந்தம்
|
1
|
பொய்கையாழ்வார்
|
முதல் திருவந்தாதி
|
100
|
1
|
2
|
பூதத்தாழ்வார்
|
இரண்டாம் திருவந்தாதி
|
100
|
2
|
3
|
பேயாழ்வார்
|
மூன்றாம் திருவந்தாதி
|
100
|
3
|
4
|
திருமழிசையாழ்வார்
|
நான்காம் திருவந்தாதி
|
96
|
4
|
திருச்சந்த விருத்தம்
|
120
|
5
|
5
|
நம்மாழ்வார்
|
திருவிருத்தம்
|
100
|
6
|
திருவாசிரியம்
|
7
|
7
|
பெரிய திருவந்தாதி
|
87
|
8
|
திருவாய்மொழி
|
1102
|
9
|
6
|
மதுரகவியாழ்வார்
|
திருப்பதிகம்
|
11
|
10
|
7
|
பெரியாழ்வார்
|
திருப்பல்லாண்டு
|
137
|
11
|
பெரியாழ்வார் திருமொழி
|
460
|
12
|
8
|
ஆண்டாள்
|
நாச்சியார் திருமொழி
|
143
|
13
|
திருப்பாவை(சங்கத்தமிழ் மாலை முப்பது)
|
30
|
14
|
9
|
திருமங்கையாழ்வார்
|
பெரிய திருமொழி
|
1084
|
15
|
திருக்குறுந்தாண்டகம்
|
20
|
16
|
திருநெடுந்தாண்டகம்
|
30
|
17
|
திருவெழுகூற்றிருக்கை
|
1
|
18
|
சிறிய திருமடல்
|
1
|
19
|
பெரிய திருமடல்
|
1
|
20
|
10
|
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
|
திருமாலை
|
145
|
21
|
திருப்பள்ளியெழுச்சி
|
10
|
22
|
11
|
திருப்பாணாழ்வார்
|
திருப்பதிகம்
|
10
|
23
|
12
|
குலசேகர ஆழ்வார்
|
பெருமாள் திருமொழி
|
105
|
24
|
நாச்சியார் திருமொழி – பாடல் வரிகள்
கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி
சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள
மதுரையார் மன்ன ன் அடிநிலை தொட்டுஎங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழீநான். (560)மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக்
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான். (561)
|
வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய
சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர்ஆழி நீங்குகவே என்று* – பொய்கையாழ்வார்
பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர். நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதி இவர் பாடியதாகும். அதன் முதல் பாடல் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா – நன்புஉருகி
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான் – பூதத்தாழ்வார்
பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர். இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி இரண்டாம் திருவந்தாதியில் உள்ள முதல்பாடலாகும்.
ஞானத்தமிழ் பயின்ற பூதத்தாழ்வார் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தை நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகினற் திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினார்