Blog

நிகழ்கலை (நாட்டுபுறக்கலைகள்) தொடர்பான செய்திகள்.

Old Syllabus

நிகழ்கலை (நாட்டுபுறக்கலைகள்) தொடர்பான செய்திகள்.

கரகாட்டம்‌

நாட்டுப்புற நிகழ்த்துக்‌ கலைகளுள்‌ ஒன்று கரகாட்டம்‌. இஃது ஆண்பெண்‌ இருவருமே ஆடும்‌ கலை யாகும்‌. ஊர்த்திருவிழாவில்‌ சாமி ஊர்வலத்தில்‌ அல்லது தேரோட்ட நிகழ்ச்சிகளில்‌ இதனை நிகழ்த்துவர்‌. பெரியோர் முதல்‌ சிறியோர் வரை அனைவரும்‌ விரும்பும்‌ நிகழ்ச்சியாகக்‌ கரகாட்டம்‌ உள்ளது. தலையில்‌ கரகம்‌ வைத்து நாகசுர இசைக்கு ஏற்ப அடியெடுத்து ஆடுவது கண்கொள்ளாக்‌ காட்சியாகும்‌. இக்கரகாட்டத்திற்கான களம்‌ அகலமான நெடுந்தெருக்களே. காண்போரையும்‌ உடன்சேர்ந்து ஆடத்தூண்டும்‌ அளவிற்குக்‌ கரகாட்டக்‌ கலைஞர்கள்‌ ஆடுவார்கள்‌.

நாடகக்கலை

உலகில்‌ வேறு எம்மொழிக்கும்‌ இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கு உண்டு; முத்தமிழ்‌ எனச்‌ சிறப்பிக்கப்படும்‌ பெருமையுடையது. இயற்றமிழ்‌, இசைத்தமிழ்‌, நாடகத்தமிழ்‌ என முப்பெரும்‌ பாகுபாடுகொண்டது.

நாடகம்‌ – பொருள்‌ விளக்கம்‌

நாடகம்‌ என்னும்‌ சொல்‌ நாடு + அகம்‌ எனப்‌ பிரியும்‌. நாட்டை அகத்தில்‌ கொண்டது நாடகம்‌. நாட்டின்‌ கடந்த காலத்தையும்‌ நிகழ்காலத்தையும்‌ வருங்காலத்தையும்‌ தன்‌ அகத்தே காட்டுவதனால்‌, நாடகம்‌ எனப்‌ பெயர்‌ பெற்றது. அகம்‌ – நாடு; உன்னுள்‌ நோக்கு; உன்னை உணர்‌; அகத்தை நாடு என்றெல்லாம்‌ பலவாறு அறிஞர்‌ பொருள்‌ கூறுகின்றனர்‌. நாடகம்‌ என்பது உலக நிகழ்ச்சிகளைக்‌ காட்டும்‌ கண்ணாடி என்பது முற்றிலும்‌ பொருந்தும்‌. கதையை, நிகழ்ச்சியை, உணர்வை நடித்துக்‌ காட்டுவதும்‌, கூத்தாக ஆடிக்காட்டுவதும்‌ நாடகம்‌ என்பர்‌. இதற்குக்‌ கூத்துக்கலை என்னும்‌ பெயரும்‌ உண்டு.

நாடகக்கலையின்‌ தோற்றமும்‌ வளர்ச்சியும்‌

தமிழின்‌ தொன்மையான கலை வடிவம்‌ நாடகம்‌ ஆகும்‌. போலச்‌ செய்தல்‌ என்னும்‌ பண்பு அடிப்படையாக அமைதல்‌. பிறர்‌ செய்வதனைப்போலத்‌ தாமும்‌ செய்து பார்க்கவேண்டும்‌ என்னும்‌ மனித உணர்ச்சிதான்‌ நாடகம்‌ தோன்றக்‌ காரணமானது.

பண்டைய மரப்பாவைக்கூத்து, பொம்மலாட்டமாக வளர்ச்சியடைந்த பின்னர்‌, தோல்பாவைக்‌ கூத்து, நிழற்பாவைக்‌ கூத்து ஆகியன முறையே பாவைக்கூத்தின்‌ வளர்ச்சி நிலைகளாக மக்களிடையே வழக்கிலிருந்தன.

தொல்காப்பிய மெய்ப்பாட்டியல்‌, நாடகப்‌ பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம்‌ வகுத்து இருக்கிறது. “கூத்தாட்டவைக்குழாத்‌ தற்றே்‌” என்னும்‌ குறள்வழியாக நாடக அரங்கம்‌ இருந்த செய்தி தெரிய வருகிறது.  சிலப்பதிகாரத்தில்‌ இளங்கோவடிகள்‌, நாடகமேத்தும்‌ நாடகக்‌ கணிகை என்று நாட்டியமாடும்‌ மாதவியைக்‌ குறிப்பிடுகிறார்‌. “நாட்டியம்‌’, “நாடகம்‌” இரண்டிற்கும்‌ பொதுவாகக்‌ கூத்து என்னும்‌ சொல்லே வழக்கில்‌ இருந்தது. சிலப்பதிகாரத்திற்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லார்‌ கூத்துவகைகளைப்‌ பற்றியும்‌, நாடகநூல்கள்‌ பற்றியும்‌ தமது உரையில்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

பரிதிமாற்கலைஞர்‌, செய்யுள்‌ வடிவில்‌ இயற்றிய தம் நாடகவியல் என்னும்‌ நூலில்‌, நாடகம்‌ அதன்‌ விளக்கம்‌, வகைகள்‌, எழுதப்பட வேண்டிய முறைகள்‌, நடிப்புக்குரிய இலக்கணம்‌, நடிப்பவர்களுக்குரிய இலக்கணம்‌ போன்றவற்றைக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

சுவாமி விபுலானந்தர்‌ எழுதிய மதங்க சூளாமணியும்‌ மறைமலையடிகள்‌ எழுதிய சாகுந்தலமும்‌ நாடகத்தைப்‌ பற்றிய ஆராய்ச்சி நூல்களாகும்‌. நாடகப்‌ பேராசிரியர்‌ பம்மல்‌ சம்பந்தனார் நாடகத்தமிழ்‌ என்னும்‌ தம்நூலில்‌ தொழில்முறை நாடக அரங்குகளைப்பற்றிய செய்திகளை நன்கு ஆராய்ந்து எழுதியுள்ளார்‌.

ஏழாம்‌ நூற்றாண்டில்‌ மகேந்திரவர்ம பல்லவன்‌ மத்தவிலாசம் என்னும்‌ நாடக நூலை எழுதியுள்ளான்‌.

தெருக்கூத்து என்னும்‌ நாடகவகை, புராணக்கதைகளையே மையமாகக்‌ கொண்டு நடத்தப்‌ பெற்றது.

பத்தொன்பதாம்‌ நூற்றாண்டில்‌ சமுதாயச்‌ சீர்திருத்தம்‌ தொடர்பான நாடகங்கள்‌ சிறப்பிடம்‌ பெற்றன.

காசி விசுவநாதரின்‌ டம்பாச்சாரி விலாசம் குறிப்பிடத்‌ தக்கது.

மனோன்மணீயம் என்பது ஒரு நாடக நூல் ஆகும். தமிழில் தோன்றிய நாடக இலக்கியங்களில் முதன்மையாக இது போற்றப்படுகிறது. முழுவதும் செய்யுள் நடையிலேயே அமைந்துள்ள இந்நூல் பேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளையால் எழுதி 1891-இல் வெளியிடப்பட்டது. இந்நூல்‌ லார்ட்‌ லிட்டன்‌ எழுதிய மறைவழி என்னும்‌ ஆங்கிலக்‌ கதையைத்‌ தழுவியதாக இருந்தாலும்‌ வடிவத்தாலும்‌, பாத்திர அமைப்பாலும்‌, சூழலாலும்‌ தமிழ்ப்பண்பு ஓங்கியிருந்தது.

கதரின்‌ வெற்றி நாடகம் தான்‌ தமிழ்நாட்டில்‌ முதன்முதலாக நடத்தப்பட்ட தேசிய சமுதாய நாடகமாகும்‌. இதனைத்‌ தொடர்ந்து தேசியக்கொடி, தேசபக்தி முதலிய நாடகங்கள்‌ நடத்தப்பட்டன.

இருபதாம்‌ நூற்றாண்டின்‌ தொடக்கத்தில்‌ நாடகத்துறைக்குப்‌ பெருந்தொண்டு புரிந்தவர்‌ சங்கரதாசு சுவாமிகள்‌. நாடக உலகின்‌ இமயமலை என்றும்‌, தமிழ்நாடகத்‌ தலைமையாசிரியர்‌ என்றும்‌ சுவாமிகள்‌ அழைக்கப்பட்டார்‌. பிரகலாதன்‌, சிறுத்தொண்டர்‌, இலவகுசா, பவளக்கொடி, அபிமன்யு, சுந்தரி முதலான நாற்பதுக்கும்‌ மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்‌.

தமிழ்‌ நாடகத்‌ தந்‌தை என்று போற்றப்பட்ட பம்மல்‌ சம்பந்தனார்‌, தொண்ணூற்றுக்கும்‌ மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார்‌; சேக்சுபியரின்‌ ஆங்கில நாடகங்களை மொழிபெயர்த்துள்ளார்‌. இவரது மனோகரன்‌ நாடகம்‌ எழுபது ஆண்டுகளாகத்‌ தமிழ்‌ நாடகமேடையில்‌ புகழ்பெற்று விளங்கியது. தமது நாடக அனுபவங்களையெல்லாம்‌, நாடகமேடை நினைவுகள்‌ என்னும்‌ தலைப்பிலும்‌ நடிப்புக்கலையில்‌ தேர்ச்சி பெறுவது எப்படி ? என்னும்‌ தலைப்பிலும்‌ எழுதியுள்ளார்‌. இவை, நாடகம்‌ பயில்வோர்க்குப்‌ பெரிதும்‌ பயன்தரக்கூடியன.

மதுரையில்‌ 1942ஆம்‌ ஆண்டில்‌ புலமைக்கடலான தமிழ்‌ மூதாட்டி ஒளவையார்‌ நாடகம்‌ அரங்கேறியது. நாடகம்‌ முழுவதும்‌ ஒளவையாராக நடிக்கும்‌ வாய்ப்பைப்‌ பெற்றுச்‌ சிறந்தமுறையில்‌ நடித்தார்‌ தி.க.சண்முகனார்‌. இவரை ஒளவை சண்முகனார்‌ என்றே அழைத்தனர்‌.

நாடகச்‌ சாலையொத்த நற்கலாசாலையொன்று நீடுலகில்‌ உண்டோ நிகழ்த்து என்ற கவிமணியின்‌ கூற்றிற்கேற்ப மக்களின்‌ கண்ணை, செவியை, கருத்தைக்‌ கவரும்‌ வகையிலும்‌ நாடகங்கள்‌ கதையழகோடு கவிதையழகும்கொண்டு வாழ்வைத்‌ தூய்மைப்படுத்தும்‌ வகையிலும்‌ அமைதல்‌ வேண்டும்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories