நூலகம் பற்றிய செய்திகள்
October 4, 2023 2025-01-11 13:56நூலகம் பற்றிய செய்திகள்
நூலகம் பற்றிய செய்திகள்
ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம் சீனா.
அண்ணா நூற்றாண்டு நூலகம்
முன்னுரை
ஆசியக்கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் ஆகும். தரைத்தளத்தாேடு எட்டு அடுக்குகளைக் கொண்டது. இதன் பரப்பளவு மட்டும் எட்டு ஏக்கர். முனைவர் இரா. அரங்கநாதன். நூலக விதிகளை உருவாக்கியவர். இவர் இந்திய நூலகவியலின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.
தரைத்தளம் | சொந்த நூல் படிப்பகம். பிரெய்லி நூல்கள் |
முதல் தளம் | குழந்தைகள் பிரிவு, பருவ இதழ்கள் |
மூன்றாம் தளம் | கணினி அறிவியல், தத்துவம், அரசியல் நூல்கள் |
நான்காம் தளம் | பொருளியில், சட்டம், வணிகவியல், கல்வி |
ஐந்தாம் தளம் | கணிதம், அறிவியல், மருத்துவம் |
ஆறாம் தளம் | பொறியியல், வேளாண்மை, திரைப்படக்கலை |
ஏழாம் தளம் | வரலாறு சுற்றுலா |
எட்டாம் தளம் | நூலகத்தின் நிர்வாகப்பிரிவு |
நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்த தலைவர்கள்
|
|
தமிழக அரசு நூலக வசதி இல்லாத ஊர்களுக்காக நடமாடும் நூலகம் என்னும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
தஞ்சை சரசுவதி மகால்
இந்தியாவில் உள்ள தொன்மையான நூலகங்களுள் தஞ்சை சரசுவதி மகால் நூலகமும் ஒன்று. இந்நூலகம் கி.பி. (பொ.ஆ.) 1122 முதல் இயங்கி வருவதாகக் கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் ஓலைச் சுவடிகள் கையெழுத்துப் படிகள் இங்கு உள்ளன.
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்ப் பல்கலைக்கழகம் இது. 1981ல் தமிழுக்காகத் தொடங்கப்பட்ட பல்கலைக் கழகம். வானத்தில் இருந்து பார்க்கும் போது தமிழ்நாடு என்ற பெயர் தெரியும் படி கட்டடங்கள் இருக்கின்றன. 5 புலங்களும் 25 துறைகளும் இங்கு உள்ளன.
உ.வே.சா. நூலகம்
1942ல் தொடங்கப்பட்டது உ.வே.சா. நூலகம். இங்கு 2128 ஓலைச் சுவடிகள் மற்றும் 2041 தமிழ்நூல்களும் உள்ளன.
கன்னிமாரா நூலகம்
அடுத்தது கன்னிமாரா நூலகம் 1896 ல் இது தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் மைய நூலகம் இது. 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் இங்கு உள்ளன.
வள்ளுவர் கோட்டம்
இது தான் சென்னை வள்ளுவர் கோட்டம். திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 1330 குறட்பாக்கள் செதுக்கப்பட்டுள்ளன.
திருவள்ளுவர் சிலை
இது தான் கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை. தமிழக அரசு இதனை நிறுவியது. வள்ளுவர் சிலை 133 அடி உரத்தில் உள்ளது. சிலையின் எடை ஏழாயிரம் டன் எடை கொண்டது. தமிழரின் அடையாளம் இது.
பூம்புகார் சிற்பக் கலைக்கூடம்
இது தான் பூம்புகார் சிற்பக் கலைக்கூடம். 2000 ஆண்டுகளுக்கு முன் இந்த நகரம் சோழர்களின் தலை நகரம். இக் கூடம் எழுநிலை மாடம் கொண்டது. கண்ணகியின் வரலாறை விளக்கும் 49 சிற்பத்தொகுதிகள் இடமபெற்றுள்ளது. இப்படி பல சிறப்புகள் கொண்ட இடங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.