னகர, ணகர வேறுபாடு
March 5, 2025 2025-04-08 5:53னகர, ணகர வேறுபாடு
ண – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் நடுப் பகுதியைத் தொடுவதால் ணகரம் பிறக்கிறது.
ன – நாவின் நுனி மேல்வாய் அண்ணத்தின் முன் பகுதியைத் தொடுவதால் னகரம் பிறக்கிறது.
ந – நாவின் நுனி மேல்வாய்ப் பல்லின் அடிப் பகுதியைத் தொடுவதால் நகரம் பிறக்கிறது.
(ட், ண்) (த், ந்) (ற், ன்) ஆகியவை இன எழுத்துகள்.
இந்த இன எழுத்துகளைக் கொண்டு டகரத்தை அடுத்து வரும் ணகரம் டண்ணகரம் என்றும்,
தகரத்தை அடுத்து வரும் நகரம் தந்நகரம் என்றும்,
றகரத்தை அடுத்து வரும் னகரம் றன்னகரம் என்றும் அழைக்கப்படுகின்றன.
ணகரம் வர வேண்டிய இடத்தில் னகரம் எழுதப்படுமானால் பொருள் மாறுபடும் என்பதை உணர்க.
(எ. கா.)
வாணம் – வெடி வானம் – ஆகாயம் பணி – வேலை பனி – குளிர்ச்சி.
பூ ________ வீசும். (மணம் / மனம்) புலியின் ________ சிவந்து காணப்படும். (கன் / கண்) குழந்தைகள் ________ விளையாடினர். (பந்து / பன்து)
எண் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மனம் வீசின. (என் வீட்டுத் தோட்டத்தில் மலர்கள் மணம் வீசின.)
மனம் – என் தவறினை எண்ணி மனம் நொந்துவிட்டேன் மணம் – என் தோட்டத்தில பூக்களின் மணம் வீசியது
வண்மை / வன்மை
வண்மை என்பதன் பொருள் கொடைத் தன்மை.
வன்மை என்பதன் பொருள் கொடுமை.