Blog

பண்புடைமை

Class 44 இலக்கியம்‌ - தமிழ்‌ அறிஞர்களும்‌, தமிழ்த்தொண்டும்

பண்புடைமை

 

  1. எண்பதத்தால்‌ எய்தல்‌ எளிதென்ப யார்மாட்டும்‌

பண்புடைமை என்னும்‌ வழக்கு.    *****

விளக்கம்:  யாரிடத்தும்‌ எளிமையாகப்‌ பழகினால்‌ பண்புடைமை என்னும்‌ நன்னெறியை அடைதல்‌ எளிது.

சொற்பொருள்‌ : வழக்கு – நன்னெறி.

  1. அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்‌ இவ்விரண்டும்‌

பண்புடைமை என்னும்‌ வழக்கு.  *****

விளக்கம்: அன்புடையவராகத்‌ திகழ்தல்‌, உயர்ந்த குடிப்பிறப்பு ஆகிய இவ்விரண்டும்‌ பண்பாளரின்‌ இயல்பு.

சொற்பொருள்‌ : ஆன்ற – உயர்ந்த.

  1. உறுப்பொத்தல்‌ மக்களொப்பு அன்றால்‌ வெறுத்தக்க

பண்பொத்தல்‌ ஒப்பதாம்‌ ஒப்பு.

விளக்கம்: உடம்பால்‌ ஒத்திருத்தல்‌ மக்களோடு ஒப்புமை அன்று. பொருந்தத்தக்க பண்பால்‌ ஒத்திருத்தலே மக்களாகக்‌ கொள்ளத்தக்க ஒப்புமையாகும்‌.

  1. நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்‌

பண்புபா ராட்டும்‌ உலகு.

விளக்கம்:  நேர்மையையும்‌ அறத்தையும்கொண்டு பிறருக்கு உதவுதல்‌ வேண்டும்‌. அத்தகைய பண்பாளரையே உலகம்‌ போற்றும்‌.

சொற்பொருள்‌ : நயன்‌ – நேர்மை; நன்றி – உதவி.

  1. நகையுள்ளும்‌ இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்‌

பண்புள பாடறிவார்‌ மாட்டு.    *****

விளக்கம்:  விளையாட்டாக ஒருவரை இகழ்ந்து பேசுதலும்‌ துன்பத்தைத்‌ தரும்‌. பிறருடைய இயல்பை அறிந்து நடப்பவரிடத்தில்‌ பகைமையிருப்பினும்‌ நல்ல பண்புகள்‌ இருக்கும்‌.

சொற்பொருள்‌ : நகையுள்ளும்‌ – விளையாட்டாகவும்‌; பாடறிவார்‌ – நெறியுடையார்‌.

  1. பண்புடையார்ப்‌ பட்டுண்டு உலகம்‌ அதுவின்றேல்‌

மண்புக்கு மாய்வது மன்‌.      *****

விளக்கம்:  உலகம்‌ பண்புடையவர்களாலே நிலைபெற்று இருக்கிறது. இல்லையெனில்‌, இவ்வுலகம்‌ மண்ணோடு மண்ணாகிஅழிந்துவிடும்‌.

சொற்பொருள்‌ : மாய்வது -அழிவது.

  1. அரம்போலும்‌ கூர்மைய ரேனும்‌ மரம்போல்வர்‌

மக்கட்பண்‌(பு) இல்லா தவர்‌.    *****

விளக்கம்:  அரம்போன்ற கூர்மையான அறிவுடையாராக இருப்பினும்‌, மக்களுக்குரிய பண்பு இல்லாதவர்‌ ஒரறிவுடைய மரமாகவே கருதப்படுவார்‌.

சொற்பொருள்‌ : அரம்‌ – வாளைக்‌ கூர்மையாக்கும்‌ கருவி.

  1. நண்பாற்றா ராகி நயமில செய்வார்க்கும்‌

பண்பாற்றா ராதல்‌ கடை.

விளக்கம்:  நட்புக்கொள்ள இயலாதவராய்த்‌ தீங்கு செய்பவரிடத்திலும்‌ பண்புடையவராய்ப்‌ பழக இயலாதது இழிவான செயலாகும்‌.

சொற்பொருள்‌ : நண்பு – நட்பு; நயம்‌இல – தீங்கு, இனிமையற்ற; கடை – இழிவு.

  1. நகல்வல்லர்‌ அல்லார்க்கு மாயிரு ஞாலம்‌

பகலும்பாற்‌ பட்டன்‌ றிருள்‌.

விளக்கம்: பிறரோடு பழகிப்‌ பேசிச்‌ சிரித்து மகிழ இயலாதவருக்கு மிகப்பெரிய இவ்வுலகம்‌ பகலிலும்‌ இருளாகவே தோன்றும்‌.

சொற்பொருள்‌: நகல்வல்லர்‌ – சிரித்து மகிழ்பவர்‌; மாயிரு ஞாலம்‌ – மிகப்பெரிய உலகம்‌.

  1. பண்பிலான்‌ பெற்ற பெருஞ்செல்வம்‌ நன்பால்‌

கலந்தீமை யால்திரிந்‌ தற்று.

விளக்கம்: பண்பிலாதவன்‌ பெற்ற பெருஞ்செல்வமானது, பாத்திரத்தின்‌ தன்மையால்‌ நல்ல பால்‌ திரிந்ததுபோன்றது.

சொற்பொருள்‌ : திரிந்தற்று – திரிந்ததுபோன்றது.

அணி: உவமை அணி

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories